ஆபாச "சிடி' பார்க்கும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மளிகைக் கடை, பாத்திரக்கடை, பால் கடையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபாச, புதுப்பட "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட "சிடி'க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட "சிடி'க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு "பெண்கள் மட்டும் நடித்திருக்கும்' ஆபாச "சிடி'க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச "சிடி'க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர்.
பெண்களிடம் ஆபாச "சிடி' மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் "சிடி'யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட "சிடி' கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச "சிடி'க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச "சிடி'க்களை வாங்கிச் சென்றனர்.
இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் "சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்தார்.
பிராட்வே பகுதியில் "சிடி' விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "சிடி'க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.
மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு "சிடி' வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற "சிடி'யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த "சிடி'யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த "சிடி'யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச "சிடி' என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.
நன்றி : தினமலர்
Monday, February 5, 2007
M.Sc/B.Sc/BCA விப்ரோ அழைக்கிறது
Msc / Bsc / BCA முடித்தவர்களை விப்ரோ தனது Technology Infrastructure Services குழுவுக்கு அழைக்கிறது..முன்பு எம்.எஸ்.ஸி மட்டும் வெளியாகி இருந்தது..இப்போது மீண்டும் அனைத்து பொறியாளர் பிரிவினரையும் அழைக்கிறார்கள்...ஜாப் கோடு மாறி அப்ளை செய்யவேண்டும்...அப்ளை செய்ய கடைசி தேதி வருகிற பிப்ரவரி 10....
MSC முடித்தவர்களுக்கு Job Code : 35879 மற்றும் 35880 -
பணி பெயர் : Technical Support Engg - TIS
பணி பற்றிய குறிப்பு...
The selected candidates will be working in the field of IT Infrastructure Management after training given by Technology Infrastructure Support (TIS) division.
என்ன என்ன பணிகளை நாம் மேற்க்கொள்ள வேண்டும் ?
* Call Monitoring,
* Product Support
* Willingness to work in IT Infrastructure,
* Readiness to work in shifts,
* Location mobility and flexibility,
* Good communication skills
* Command Centre activities
கல்வித்தகுதி:
BCA / BSc / M.Sc (முழுநேரமாக, Full time ல் படித்திருக்க வேண்டும்), 2005 & 2006 Passouts only
குறைந்தபட்ச மதிப்பெண்கள்
60% aggregate in 10th, 12th, Graduation and M.Sc
முன் அனுபவம் :
தேவையில்லை
பணியாளர்கள் எந்த குழுவுக்கு தேவை:
Technology Infrastructure Support (TIS) இந்த குழுவை பற்றி மேலும் அறிய இங்கே தொடவும்
எங்கே பணி:
Bangalore / Hyderabad/ Chennai/ Pune/ Kolkata
அப்ளை செய்ய கடைசி தேதி :
10th Feb 2007 ( இந்த மாதம் )
எப்படி அப்ளை செய்வது :
Candidates, who fulfill the above eligibility criteria, can apply Online under the Fresher Section at http://careers.wipro.com/Fresherprogram (இங்கே க்ளிக்)
பிறகு ?
Short listed candidates will be intimated through email about the Test Date and Venue
எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....
எழுதியவர்: செந்தழல் ரவி
MSC முடித்தவர்களுக்கு Job Code : 35879 மற்றும் 35880 -
பணி பெயர் : Technical Support Engg - TIS
பணி பற்றிய குறிப்பு...
The selected candidates will be working in the field of IT Infrastructure Management after training given by Technology Infrastructure Support (TIS) division.
என்ன என்ன பணிகளை நாம் மேற்க்கொள்ள வேண்டும் ?
* Call Monitoring,
* Product Support
* Willingness to work in IT Infrastructure,
* Readiness to work in shifts,
* Location mobility and flexibility,
* Good communication skills
* Command Centre activities
கல்வித்தகுதி:
BCA / BSc / M.Sc (முழுநேரமாக, Full time ல் படித்திருக்க வேண்டும்), 2005 & 2006 Passouts only
குறைந்தபட்ச மதிப்பெண்கள்
60% aggregate in 10th, 12th, Graduation and M.Sc
முன் அனுபவம் :
தேவையில்லை
பணியாளர்கள் எந்த குழுவுக்கு தேவை:
Technology Infrastructure Support (TIS) இந்த குழுவை பற்றி மேலும் அறிய இங்கே தொடவும்
எங்கே பணி:
Bangalore / Hyderabad/ Chennai/ Pune/ Kolkata
அப்ளை செய்ய கடைசி தேதி :
10th Feb 2007 ( இந்த மாதம் )
எப்படி அப்ளை செய்வது :
Candidates, who fulfill the above eligibility criteria, can apply Online under the Fresher Section at http://careers.wipro.com/Fresherprogram (இங்கே க்ளிக்)
பிறகு ?
Short listed candidates will be intimated through email about the Test Date and Venue
எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....
எழுதியவர்: செந்தழல் ரவி
Sunday, February 4, 2007
போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் கடலூர் சிறை
கடலூர் நடுவண் சிறைச்சாலை, போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் உள்ளது குறித்து தமிழக முதல்வர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.), சிறைத் துறை இயக்குநர் (ஐ.ஜி.), கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன், 23-01-2007 அன்று அனுப்பியுள்ள மனு:
கடலூர் மத்திய சிறையில் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்கள் நடைபெற்று வருவது குறித்து அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் வெங்கடேசன், சுதர்சனம் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் மத்தியில் புகார் கூறியுள்ளனர்.
கடலூர் நடுவண் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசியான பிரேமானந்தா சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் குளிக்க, தூங்க, பார்வையாளர்களைச் சந்தித்துப் பேச, பூஜை செய்ய என தனித்தனியே நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு விதிக்கப்பட்ட எந்தவித கட்டுப்பாடுகளையும் அவர் மதிக்காமல் சுதந்திரமாக இருந்து வருவதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது.
சிறைச்சாலையில் ஏராளமான செல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால், சிறைவாசிகள் வெளியில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு பல்வேறு குற்றங்களை நிகழ்த்துவதாக தெரிகிறது.
சிறைச்சாலையில் உள்ள அறைகளில் 4.50 அடி நீளம் கொண்ட அரிவாள்கள், பட்டாக் கத்திகள், கடப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது. சிறைச்சாலை காவலர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். சிறைச்சாலைக்குள் முறையான சோதனைகள் நடத்தப்படுவதில்லை.
சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் பெரும்பகுதியை வெளியே விற்றுவிடுகின்றனர். இதனால், போதிய உணவு கிடைக்காமல் சிறைவாசிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
குற்றம்புரிந்தவர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகத்தான் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், கடலூர் சிறையில் அடைக்கப்படும் சிறைவாசிகள் மேலும் கொடூரமானவர்களாக மாறுகின்ற நிலை உள்ளது.
ஆயுள்தண்டனை சிறைவாசிகள் இவ்வாறு கூறியுள்ள புகாரைப் பார்த்தால், கடலூர் நடுவண் சிறையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மலிந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், வெளி உலகுக்குத் தெரியாமல் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
சிறை நிர்வாகம் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கடலூர் மத்திய சிறையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்திடவும், ஊழல் - முறைகேடுகளைக் களைந்திடவும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
எழுதியவர்: கோ.சுகுமாரன்
கிருதுவின் கேள்வி
கோவை சிறைவாசி அப்பாவி முஸ்லீகளுக்கு ஒரு நீதி !!!
பலர் கற்பை சூறையாடிய போலி சாமியாருக்கு ஒரு நீதியா !!!
கடலூர் மத்திய சிறையில் சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு செயல்கள் நடைபெற்று வருவது குறித்து அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் வெங்கடேசன், சுதர்சனம் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் மத்தியில் புகார் கூறியுள்ளனர்.
கடலூர் நடுவண் சிறை ஆயுள் தண்டனை சிறைவாசியான பிரேமானந்தா சாமியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் குளிக்க, தூங்க, பார்வையாளர்களைச் சந்தித்துப் பேச, பூஜை செய்ய என தனித்தனியே நான்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு விதிக்கப்பட்ட எந்தவித கட்டுப்பாடுகளையும் அவர் மதிக்காமல் சுதந்திரமாக இருந்து வருவதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கிறது.
சிறைச்சாலையில் ஏராளமான செல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால், சிறைவாசிகள் வெளியில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு பல்வேறு குற்றங்களை நிகழ்த்துவதாக தெரிகிறது.
சிறைச்சாலையில் உள்ள அறைகளில் 4.50 அடி நீளம் கொண்ட அரிவாள்கள், பட்டாக் கத்திகள், கடப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது. சிறைச்சாலை காவலர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். சிறைச்சாலைக்குள் முறையான சோதனைகள் நடத்தப்படுவதில்லை.
சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களில் பெரும்பகுதியை வெளியே விற்றுவிடுகின்றனர். இதனால், போதிய உணவு கிடைக்காமல் சிறைவாசிகள் பட்டினி கிடக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
குற்றம்புரிந்தவர்கள் திருந்த வேண்டுமென்பதற்காகத்தான் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், கடலூர் சிறையில் அடைக்கப்படும் சிறைவாசிகள் மேலும் கொடூரமானவர்களாக மாறுகின்ற நிலை உள்ளது.
ஆயுள்தண்டனை சிறைவாசிகள் இவ்வாறு கூறியுள்ள புகாரைப் பார்த்தால், கடலூர் நடுவண் சிறையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மலிந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், வெளி உலகுக்குத் தெரியாமல் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
சிறை நிர்வாகம் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கடலூர் மத்திய சிறையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்திடவும், ஊழல் - முறைகேடுகளைக் களைந்திடவும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
எழுதியவர்: கோ.சுகுமாரன்
கிருதுவின் கேள்வி
கோவை சிறைவாசி அப்பாவி முஸ்லீகளுக்கு ஒரு நீதி !!!
பலர் கற்பை சூறையாடிய போலி சாமியாருக்கு ஒரு நீதியா !!!
முல்லைப் பெரியாறு... இறுதி முடிவு!
முல்லைப் பெரியாறு... இறுதி முடிவு! - பழ.நெடுமாறன்
தமிழகம் ஏமாந்த வரலாற்றுக்காதை மீண்டும் ஒருமுறை அரங்கேறியிருக்கிறது. இது முல்லைப் பெரியாறு படலம். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து, புதிய சட்டம் இயற்றிய கேரள அரசு, பேச்சுவார்த்தை நாடகத்தை மீண்டும் நடத்தியிருக்கிறது. ‘பெருந்தன்மை’ மிக்க தமிழகத்தின் கைகுலுக்கலை அங்கீகரிக்கவில்லை கேரளம். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வரா, வாட்டாள் நாகராஜின் கேரளத்துச் சகோதரனா என்று இனம் பிரித்துக் காண முடியாத அளவுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அச்சுதானந்தன்.
இனியும் இழக்கத்தயாராக இல்லை எனப் பொங்கியெழுந்துள்ள முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளும், தமிழர் அமைப்புகளும் சாலை மறியலில் ஈடுபட்டு, கேரளாவுக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்துத் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளன. தண்ணீர் தர மறுத்தால், கேரளாவின் அன்றாட வாழ்க்கையையே முடக்கும் சக்தி எம்மிடம் உள்ளது என்று எச்சரித்திருக்கிறது தமிழகம். டிசம்பர் 4ஆம் நாள் நடைபெற்ற தமிழரின் உணர்ச்சி மிக்க போராட்டத்துக்குத் தலைமையேற்ற தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ‘மக்கள்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியினை இங்கே வெளியிடுகிறோம்... ...
கேரள அரசு, மத்திய அரசையும் இந்திய அரசியல் சட்டத்தையும் மதிக்கவில்லை என்பது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது. கேரள மாநிலத்தை மாறி மாறி ஆள்பவை மாநிலக் கட்சிகளல்ல. இந்திய தேசியம் பற்றி வாய் கிழியப் பேசுகிற காங்கிரஸ் கூட்டணியும், கம்யூனிஸ்ட் கூட்டணியும்தான் மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றன. அவர்கள்தான் இந்தியாவின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தண்ணீர் தர மறுக்கிறார்கள். நதிநீர் பிரச்சனையைப் பொறுத்த வரை கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகிறது.
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஒன்று, கர்நாடகமாக இருந்தாலும் கேரளாவாக இருந்தாலும் எதிரெதிர் அரசியல் நடத்தும் கட்சியினர்கூட நதிநீர்ப் பிரச்சனையில் ஒன்றுபட்டே நிற்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காகக் கேரளாவின் இன்றைய முதல்வர் அச்சுதானந்தனும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் ஒன்றாக டெல்லிக்குச் செல்கிறார்கள். நம்மிடம் அந்த ஒற்றுமை இல்லை.
இரண்டாவது காரணம், நாம் ஒற்றுமையாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மத்திய அரசு நம்மை மதிக்க மறுக்கிறது. நம்மிடம் ஒற்றுமை உருவாகாவிட்டால் இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது.நதிநீர் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்ற கருத்து வைக்கப்படுகிறது. அப்படி அமைக்கப்படுகிற ஆணையத்தில் இடம்பெறக்கூடியவர்கள் அகில இந்திய அடிப்படையில் சிந்தித்து நியாயத்தின் அடிப்படையில் முடிவெடுக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது?இந்தியா முழுமைக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்க வேண்டிய ஏ.கே.அந்தோணி தன்னை மலையாளியாக மட்டுமே கருதிக்கொண்டு இந்தியாவின் கப்பற்படையைப் பெரியாறு அணையை பரிசோதிக்க அனுப்புகிறார். இதன் மூலம் தவறான உதாரணத்தை அந்தோணி உருவாக்கியிருக்கிறார். நாளை, பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக வந்தால் அரியாணா மாநிலத்துடனான நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க இந்திய ராணுவத்தைப் பயன்படுத்துவார். எதிரி நாடுகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக உள்ள கடற்படையை நம் நாட்டுக்குள்ளேயே உள்ள மாநிலத்தின் நலனுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்றால் அது எங்கே கொண்டு போய் முடியும்? சிங்கள கடற்படை இதுவரை தமிழக மீனவர்கள் 300 பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ஒரு விரலைக் கூட அசைக்க முடியாத நமது கடற்படை, ஒரு மாநிலத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்றால் இதன் விளைவுகளைப் பிரதமர் சந்திக்க நேரிடும்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 1979இல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்படுவது தவறான செய்தி. என்ன நடந்ததென்றால், அணை நீரில் மீன் பிடிக்கின்ற உரிமையையும், அணை நீரில் படகுகளை விட்டு அதனைச் சுற்றுலாத்தலமாக்கும் உரிமையையும் நாம் விட்டுக் கொடுத்தோம். அவற்றால் நமக்குப் பயனில்லை என்று விட்டுக் கொடுத்ததன் விளைவாக, நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கேரள அரசுக்குக் கிடைத்து வருகிறது.இந்த அணையை நமது செலவில் கட்டியிருக்கிறோம். அணை நீர் தேங்குகிற 8000 ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுதோறும் குத்தகைப் பணம் செலுத்துகிறோம். குத்தகைதாரர் என்ற முறையில் என்னென்ன உரிமைகள் உண்டோ அவையெல்லாம் சட்டத்திலும் அதனடிப்படையிலான ஒப்பந்தத்திலும் இருக்கிறது.
அணையும், அது அமைந்துள்ள இடமும், அதிலுள்ள நீரும் நமக்குச் சொந்தம். கேரள அரசோ உரிமைகளை மீறிச் செயல்படுகிறது. தனது மாநிலப் போலீசைக் கொண்டு வந்து அங்கே நிறுத்துகிறது. கேரள மாநில எல்லை யோரத்தில் வாழும் தமிழர்கள், தமிழக வியாபாரிகள், தமிழ் மாணவர்கள் இவர்களையெல்லாம் மிரட்டி, அணையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என அஞ்சலட்டையில் எழுதி வாங்கி அதனை மத்திய அரசுக்கு அனுப்புகிறது.சர்வதேசியம் பேசுகிற கம்யூனிஸ்ட்டுகள் எந்தளவுக்கு இந்திய தேசியத்தை மதிக்காமல் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.
இன்றைக்கு முதல்வராக இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுதானந்தன், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே மதுரையில் பேட்டி கொடுத்தார். இனி ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தால்தான் தமிழகத்திற்குப் பெரியாறு அணை நீரைக் கொடுப்போம், இல்லையென்றால் கொடுக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, உள்ளூரிலே அவருக்குக் கட்சி செல்வாக்கு கிடையாது. அதனால், மக்களை இனரீதியாகத் தூண்டி விட்டு தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அச்சுதானந்தன் முயற்சி செய்கிறார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் அடவிநயினார் கோயில் என்ற இடத்தில் தமிழக அரசு ஓர் அணையைக் கட்டிக் கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னால், அங்கே வந்த அச்சுதானந்தன், அணை கட்டும் வேலையில் இருந்த தமிழக உயரதிகாரிகளைப் பார்த்து, எதற்காக இவ்வளவு பெரிய அணை கட்டுகிறீர்கள், எங்கள் தண்ணீரைத் திருடுகிறீர்களா? என்று எச்சரிக்கை குரலில் பேசிவிட்டுப் போனார்.தமிழ்நாட்டுக்குள் வந்து தமிழர்களை, தமிழக அதிகாரிகளை மிரட்டுவது இவரது வழக்கம். ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிராக கேரள மக்களை இனவெறியுடன் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அச்சுதானந்தன்.அவர் இப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 9 மாதங்களாகிவிட்டன. 2006 பிப்ரவரி மாதத்திலேயே தீர்ப்பு வந்துவிட்டது. தீர்ப்பு கிடைத்தபின், உடனடியாக மதகுகளை இறக்கி விட்டு நீர் மட்டத்தை உயர்த்தியிருக்க வேண்டும். அக்டோபர்-நவம்பரில் பருவமழை பெய்யும். தண்ணீர் வரும், மதகுகளை இறக்குவதற்கு அவர்கள் தகராறு செய்வார்கள் என்பதை உணர்ந்து, மின்தேவைக்கான தண்ணீர் வரும் 4 பெரிய குழாய்கள் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் வரும் குகைப்பாதை ஆகியவற்றைச் சரிசெய்து வைத்திருந்து வைகை அணையை நிரப்பியிருக்க வேண்டும்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் இந்த 5 மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் இவற்றை ஆழப்படுத்தி இந்தத் தண்ணீரை அங்கே நிரப்பியிருக்க வேண்டும். 9 மாதகால அவகாசத்தை நாம் சரிவரப் பயன்படுத்தவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் பெரிய தவறு நடந்திருக்கிறது.அடுத்ததாக, நாம் 142 அடிக்குத் தண்ணீர் தேக்குவதற்காக மதகுகளை இறக்கிவிட்டிருந்தால் அவர்கள் தரப்பிலிருந்து தகராறு செய்ய வந்திருப்பார்கள். எனவே நாம் உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கவேண்டும். அதையும் அன்றைய தமிழக அரசும் இன்றைய தமிழக அரசும் செய்யத் தவறி விட்டன. இப்போதுகூட, உச்சநீதிமன்றம் இரு மாநிலங்களும் பேசவேண்டும் என்று உத்தரவிடவில்லை. ஓர் ஆலோசனையாகத்தான் சொல்லியிருக்கிறது. நம்மிடம் சரியான அணுகுமுறை இல்லாததால்தான் இந்தளவு இந்த விவகாரம் நீடித்துக்கொண்டிருக்கிறது. இது அரசியல் கட்சிகளின் பிரச்சனையல்ல. பிரச்சனை இரு மாநில அரசுகளுக்கிடையிலானது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனை மத்திய அரசு அமல்படுத்தச் செய்ய வேண்டும்.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்ட கடைகளை சீல் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், டெல்லி மாநில போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவத்தைக் கொண்டு அந்தப் பணி மேற்கொள்ளப் பட்டது.
அதுபோல, முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதைத்தான் நாம் வலியுறுத்தவேண்டும்.தமிழ்நாட்டின் மின்சாரத் தேவைக்காகத் தான் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோருகிறோம் என்று கேரளா சொல்வது அப்பட்டமான பொய். உண்மையில் அவர்களுக்குத்தான் தேவை இருக்கிறது. பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி அணை என ஒன்றைக் கட்டிக்கொண்டு, நம்மை 136 அடிக்கு மேல் தேக்க விடாமல் செய்து, மீதி தண்ணீரை இடுக்கி அணையில் அவர்கள் தேக்கிக்கொண்டு மின்சார உற்பத்தியைச் செய்கிறார்கள்.
நாம் வேளாண் தேவைக்காகத்தான் நீரைக் கோருகிறோம்.முல்லைப் பெரியாறு பாசனத்தினால் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. 136 அடியாக அணையின் உயரத்தைக் குறைத்ததால், எதுவும் பயிரிட முடியாமல் தரிசான நிலம் 36ஆயிரம் ஏக்கர். இருபோக சாகுபடியாக இருந்து ஒரு போகமாக மாறிய நிலம் 86ஆயிரம் ஏக்கர். ஆற்றுப் பாசனமாக இருந்து வேறு வகையான பாசனத்திற்கு மாறிய நிலம் 53 ஆயிரம் ஏக்கர். இதனால் ஏற்படுகிற விவசாயப் பொருள்கள் உற்பத்தியில் ஓராண்டுக்கு ஏற்படுகிற இழப்பின் மதிப்பு 55.80 கோடி ரூபாய். மின்சார உற்பத்தி பாதிப்பால் ஏற்படும் இழப்பு 75 கோடி ரூபாய். இந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஒட்டு மொத்த இழப்பு 3631 கோடி ரூபாய். பாதிப்பு நமக்கு. ஆனால்,அவர்கள் மாற்றிச் சொல்கிறார்கள். நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசில் தமிழகக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்ற காலகட்டம் இது. இந்த நிலையிலும் நம்மால் இந்த உரிமையைப் பெறமுடியவில்லை என்றால், மத்தியஅரசில் பங்கேற்றிருக்கின்ற நமது மாநில அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அந்தக் கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் என்றுதான் நான் நினைக்கிறேன். மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாம் அந்த அரசில் பங்கேற்றுப் பயனில்லை.இந்தப் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் நிலை முக்கியமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்காக மதுரையில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இரண்டுங் கெட்டானாக இருக்கிறது. கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் அந்த மாநில நலனைக் கருத்திற்கொண்டு செயல்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட்டுகளிடம் அந்தப் போக்கு இல்லை. தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை இங்குள்ள பிரச்சனையாக இருந்தாலும் ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையாக இருந்தாலும் மார்க்சிஸ்ட்டுகளின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருக்கும். ஒரே வரியில் சொல்வதென்றால், இலங்கை அதிபர் ராஜபக்சே, ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு கொடுப்பது என ஒத்துக் கொண்டாலும் இங்குள்ள மார்க்சிஸ்ட்டுகள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இதில் தமிழக அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதும் முக்கியமானது. தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று என்னிடம் சிலர் கோருகிறார்கள். இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு என்னைப் போன்றவர்களுக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை. அதற்கான காரணத்தை நான் ஆராய விரும்பவில்லை. முந்தைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்குமிடையே அணுகுமுறையில் நிறைய மாறுதல். பெரியார், காமராஜர், அண்ணா, ஜீவானந்தம், ராஜாஜி போன்ற தலைவர்களிடம் கொள்கை மாறுபாடு இருந்தாலும் பொதுப் பிரச்சனையில் அவர்கள் ஒன்றாகத்தான் இருந்தார்கள். மொழிவாரி மாநிலங்களை அமைப்பதற்குப் பதில் தட்சணப்பிரதேசம் என்ற திட்டத்தை உருவாக்க அன்றைய மத்திய அரசு முயன்றபோது பெரியார், காமராஜர் ,அண்ணா, ம.பொ.சி. உள்பட எல்லாத் தலைவர்களும் ஒன்றாக நின்று அதை முறியடித்தார்கள்.
அதுபோல, மதராஸ் மனதே என்று ஆந்திரர்கள் கோரிக்கை வைக்க, பிரதமர் நேருவும் சென்னையை இருமாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை சொன்னார். அதனை ஏற்கமுடியாது என்று உறுதியாகச் சொன்னவர் அன்றைய சென்னை மாநிலத்தின் முதல்வர் (பிரதமர்) ராஜாஜி. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், எனது கோரிக்கையை நீங்கள் ஏற்காவிட்டால் இதையே எனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றார். ராஜாஜியின் இந்த முடிவை ஆதரித்து உடனே அறிக்கை விட்டார் பெரியார். அவர்கள் பிரச்சனைகளைப் பார்த்து முடிவெடுத்தார்களே தவிர, ஆட்களைப் பார்த்து முடிவெடுக்கவில்லை.
இன்று, பிரச்சனைகளைப் பார்ப்பதில்லை. நபர்களைப் பார்க்கிறார்கள். அதனால் தான் அண்டை மாநிலங்களும் மத்திய அரசும் நமது பிரச்சனையைப் பெரிதாக்குகின்றன.தமிழகத்தின் முதல்வரான கலைஞர் அவர்கள் இந்திய முதல்வர்களிலேயே வயதாலும் அனுபவத்தாலும் மூத்த முதலமைச்சர். அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கேரள முதல்வர் கொடுக்கத் தவறியதும், மத்திய அரசும் பிரதமரும் உடனடியாகத் தலையிட்டுக் கேரள முதல்வரைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், பிரதமருக்குத் தெரியாமலேயே இந்தியக் கடற்படை முல்லைப் பெரியாறு அணைக்கு வருகிறதென்றால் இந்திய அரசின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம் என்பது 6 கோடித் தமிழர்களுக்கும் ஏற்பட்ட அவமானம்.இந்த நிலையில், கட்சி வேறுபாடின்றி 6 கோடி தமிழர்களும் முதலமைச்சர் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். முதல்வரும் அனைத்துக் கட்சியையும் அரவணைத்துச் செல்லவேண்டும். பேச்சுவார்த்தையால் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தபிறகு, பேச்சுவார்த்தைக்குப் போவ தென்பது தேவையற்ற காலதாமதத்தைத் தான் ஏற்படுத்தும்.உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பேச்சுவார்த்தை என்று எதற்கும் கேரளா கட்டுப்படவில்லை என்ற நிலைமை வரும்போது, நாம் அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுப்பதைவிட, மக்கள் மூலமாகப் பதிலடி கொடுக்கலாம்.
கேரளாவுக்கு நாளொன்றுக்கு 200 டன் அரிசி முறையான வழியில் போகிறது. இதுதவிர, திருட்டுத்தனமாக எவ்வளவோ போகிறது. 1 கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2000 லிட்டர் தண்ணீர் தேவை. 200 டன் அரிசிக்கு 511 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவை. பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு 82 மில்லியன் கன மீட்டர்தான். இதுதவிர, காய்கறிகள், பழங்கள், மற்ற உணவு தானியங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் அனுப்புகிறோம். இவற்றை உற்பத்தி செய்ய நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். அவ்வளவையும் சேர்த்துதானே கேரளம் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.தமிழகத்தில் 30 லட்சம் மலையாளிகள் வசிக்கிறார்கள்.
அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஒரு மனிதனுக்கு ஆண்டொன்றுக்கு 1200 கனமீட்டர் நீர் தேவை. அதன்படி பார்த்தால் இங்கே பிழைப்பு நடத்தும் 30 லட்சம் மலையாளிகளுக்கு 5500 மில்லியன் கனமீட்டர் நீர் தேவை. இங்கிருக்கிற மலையாளிகள் குடிப்பதற்காகவாவது கேரள அரசு நீர் தரலாமே... இதை அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் உணர்த்தவேண்டும் என்று சொன்னால் ஒரே வழிதான் இருக்கிறது. நாம் இனி அவர்களுக்கு அரிசி உள்பட எந்த உணவுப்பொருளையும் அனுப்புவதில்லை, உங்கள் உறவே வேண்டாம், நீங்கள் எங்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று நிறுத்தினால் 10 நாட்கள்கூடக் கேரள மக்கள் தாக்குப் பிடிக்க முடியாது.நான் சொல்லும் இந்த உண்மைகளைக் கேரளப் பத்திரிகையில் பெரிதாகப் போட்டு விட்டார்கள். அதனைப் படித்துவிட்டு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த தாமஸ் என்ற பொறியாளர் உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் சொல்வதுதான் உண்மை, இங்குள்ள காங்கிரசாரும், கம்யூனிஸ்ட்டுகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாறு அணை இடியப்போகிறது என்று ஏமாற்றுகிறார்கள். அணையை ஆய்வு செய்த பொறியாளர்களில் நானும் ஒருவன். எனக்கு உண்மை தெரியும்.
அந்தக்காலத்தில் சுண்ணாம்பு, சர்க்கரைப் பாகு, மற்றப் பொருட்களையெல்லாம் சேர்த்து, சாந்து செய்து, அதை வைத்துதான் அணையைக் கட்டியிருக்கிறார்கள். அதனுடைய குணாம்சம் என்னவென்றால் நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே இருக்கும். அப்படி அது இறுகி, உடைக்க முடியாத கற்பாறை போல அந்த அணை இருக்கிறது. இந்த உண்மையை மறைத்துவிட்டு, அணை இடியுமென்றும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அரசியல்வாதிகள் பொய்யைப் பரப்புகிறார்கள்’ என்றார். அது மட்டுமல்ல, இந்த உண்மையை எங்கள் மக்களுக்கு விளக்கும் வகையில் நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நானும் வருகிறேன் என்றும் அந்த மலையாளப் பொறியாளர் சொல்கிறார்.ஆக, அப்பாவி மலையாளி மக்களை இரண்டு தேசிய கட்சிகளும் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. அதை அந்த மக்கள் உணர வேண்டுமானால் கேரளாவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் புறக்கணிப்பை மக்களே செய்யட்டும் என அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் வழிக்கு வருவார்கள். இல்லையென்றால் ஒரு போதும் வரமாட்டார்கள்.
தமிழக மக்களும் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடினால்தான் முல்லை பெரியாறு அணையில் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். இதனை இந்த முறை செய்யாவிட்டால் வேறு எந்தக் காலத்திலும் செய்ய முடியாது.
தொகுப்பு: தமிழ்
செய்தியும் சிந்தனையும்
செய்தியும் சிந்தனையும் - பா.ஜ.க. வின் பலகீனம்
செய்தி
லண்டன் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியால் வெற்றி பெற்று உலக புகழ்பெற்ற நடிகை சில்பா ஷெட்டியை பா.ஜ.க. வுக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சிந்தனை
பா.ஜ.க.. வின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? ஒரு கட்சியில் சேருவதற்குக் சேருவதற்கு கொள்கைக் கோட்பாடுகள் தேவையில்லை. யாராவது புகழ் பெற்றால், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்திக் கட்சியைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற பலகீனத்தில் தான் 'பா.ஜ.க.' இருக்கிறது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
Saturday, February 3, 2007
ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் - பால்தாக்கரே

மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். மேலும் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தாக்கரே கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, கட்சியின் பலமான இருதூண்களான அவரின் இரு மகன்களும் சிவசேனாவிலிருந்து விலகிய பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
சிவாஜி பார்க்கில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும் பொழுது மேற்கண்டவாறு ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை லட்சியத்தில் உறுதியான ஹிந்து என்றும் சிலாகித்துப் பேசினார். இந்த பேரணியில் வாழ்த்துரை வழங்க நரேந்திரமோடியும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் தாணேயில் நடந்த மற்றொரு பேரணியில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில் அவர் செய்த விமர்சனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி எனக்கருதப்படும் முஹம்மத் அஃப்ஸல் குருவிற்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று குடியரசுத்தலைவருக்கு எதிராக குற்றம்சாட்டிய தாக்கரே தொடர்ந்து தன்னிடம் பரிசீலனைக்கு வந்த அஃப்ஸல் குருவின் கருணைமனுவை அவர் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். தனது தலையில் இருக்கும் பெருமளவு முடியின் காரணமாக கருணைமனுவில் அடங்கியுள்ள உள்ளடக்கத்தை கலாமால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா? என்று அவரை நையாண்டி செய்த தாக்கரேயின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் குற்றம் கூறியது.
தாக்கரே நாட்டைத் துண்டாட முயல்வதாக முதிர்ந்த காங்கிரஸ் தலைவரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்தார். தாக்கரேயின் இந்த விமர்சனம் பைத்தியக்காரத்தனமானதும் தள்ளப்படவேண்டியதுமாகும் என NCP தலைவர் ஷரத்பவாரும் கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் என்பவர் ஒரு தனிமனிதன் அல்லர் என்றும் அவர் இந்நாட்டின் தலைமைக் குடிமகன் என்றும் CPM தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய இறையாண்மையின் கீழ் வசிக்கும் எவரும் அப்பதவியை மதிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தாக்கரேயின் கலாமுக்கு எதிரான இந்த விமர்சனத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என BJP தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். அஃப்ஸல் குருவின் தண்டனையை தாமதப்படுத்துவதற்கு எதிராக தனது எதிர்ப்பை தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தான் கருதுவதாகவும் நாயுடு கூறினார்.
தேசிய அளவில் சர்ச்சைக்கு இடமளிக்கும் விதத்தில் தாக்கரே வெளிப்படுத்தி இருக்கும் இஸ்லாத்தை அழிக்க ஹிந்து ஒற்றுமை, ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான், குடியரசுத்தலைவருக்கு எதிரான விமர்சனம் போன்றவை அவரின் கட்சியை தேசிய அளவில் வளர்த்து எடுக்க முயலும் அவரின் அடுத்த கட்ட நாடகத் தந்திரமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. சிவசேனாவின் ஆரம்பகால கொள்கை மும்பையையும் பின்னர் மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. மஹாராஷ்டிர மாநிலத்தவர்கள் தவிர மற்ற அனைவரும் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து, ஹிந்துக்கள் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களுக்கு எதிராக படுபயங்கர அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டு சிவசேனா வளர்ந்த வரலாறு உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
அன்று சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே மஹாராஷ்டிர மாநிலத்தவர்களை தவிர, ஹிந்துக்கள் உட்பட மற்றவர்களை மஹாராஷ்டிராவிலிருந்து அடித்து விரட்டப்படுவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். இன்று அதே சிவசேனாவின் தலைவர் தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக மொழி-பிரதேச எல்லைகளை மறந்து ஹிந்துக்கள் இஸ்லாத்தை அழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
Thursday, February 1, 2007
அரசு மற்றும் தமுமுக வின் கவனத்திற்கு...(URGENT)
தமிழக அரசும் தமுமுக வும் கவனிக்குமா?
தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களால் மறக்க இயலாதது கடந்த 16.09.2006 அன்று மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரசு பேருந்தில் சமூக விரோதி ஒருவனால் குத்தி கொல்லப்பட்ட பைசுல் ரஹ்மானின் படுகொலையையும் அன்று 8 மாத கற்பினியாக இருந்த அவரது மனைவி நிலோஃபர் நிஷாவின் கதறலையும். தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வலைத்தளத்தில் தான் முதன் முறையாக இந்த செய்தி வெளியிடப்பட்டது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சமூக விரோதியை கைது செய்யவும் இந்த படுகொலையால் பாதிக்கப்பட்ட பைசுல் ரஹ்மானின் இளம் விதவையும் கற்பினியுமாக இருந்த நிலோஃபர் நிஷாவிற்கு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரன நிதியில் இருந்து உதவி வழங்கவும் கோரியிருந்தோம்.
சம்பவம் நடந்த அன்று அதே கோவையில் ஜே.பி மஹாலில் நடைபெற்ற தமுமுக வின் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் மற்றுமுள்ள தமுமுக தலைவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று பைசுல் ரஹ்மாதனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அடுத்த நாள் நடைபெற்ற பைசுல் ரஹ்மானின் உடல் நல்லடக்கத்தின்போது தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் அதன் தலைவர்களும் தொன்டர்களும் திரளாக கலந்து கொண்டனர் அதன் பின்னர் மையவாடியில் நடத்திய உரையில் தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் அதன் மற்ற தலைவர்களும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும் பைசுல் ரஹ்மானின் குடும்பத்தாருக்கும் அவரது மனைவி நிலோஃபர் நிஷாவிற்கும் உதவிகள் வழங்க தமுமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் வாக்குறுதிகள் அளித்து உரை நிகழ்த்தினர்.

அதன் பின்னர் அன்று மாலை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமுமுக தலைவர் ஜனாப் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக செயற்குழுவில் பைசுல் ரஹ்மானின் படுகொலையை கண்டித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்றும் பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது என்றும் படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை கோரியும் கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
அதன் பின்னர் சமூக நலத்தொன்டர்கள் உதவியுடன் குற்றவாளிளை கைது செய்ய கோரியும், கணவரை இழந்து வருமையில் வாடும் தனக்கும் தனது கணவரின் தாயாருக்கும் நிவாரான நிதி உதவி வழங்க கோரியும் தமிழக முதல்வருக்கும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் இன்ன பிற அதிகாரிகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார் பைசுல் ரஹ்மானின் விதவை நிலோஃபர் நிஷா. அதன் நகலும் தமுமுக தலைமைக்கு அனுப்ப பட்டுள்ளது.

பின்னர் அவருக்கு பிரசவத்தில் அழகான குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது, பிரசவ செலவு உள்பட பலதையும் தாங்கி கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்ட அந்த குடும்பம் மிகவும் கஷட்டமான சூழ்நிலையிலேயே இன்று வரை இருந்து வருகின்றது. தனது தாய் வீடுமு் மிக்க வருமையில் இருப்பதால் தனது கணவரின் வீட்டிலேயே நோயால் பாதிக்கப்பட்டுள்ள பைசுல் ரஹ்மானின் தாயாருடனும் தனது கைப்பிள்ளையுடனும் மிக்க கஷ்ட்ட ஜீவனம் நடத்தி வருகின்றார் இந்த சகோதரி.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சமூக விரோதி பின்னர் காவல்துறையிடம் சரன் அடைந்து குன்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் தங்கள் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்தந்து கொண்டிருந்தே ஒரே நபரையும் சமூக விரோதிகளின் கொலை வெறிக்கு இழந்து இந்த இளம் வயதிலேயே விதவையாகி எதிர்காலம் கேள்வி குறியாய் எந்த வருமானமும் இன்றி நிர்கதியாய் நிற்கும் சகோதரி நிலோஃபர் நிஷவிற்கும் பைசுல் ரஹ்மானின் தாயாருக்கும் இது வரை எவ்வித அரசு உதவியோ சமுதாய உதவிகளோ கிடைக்காமல் இன்றளவும் கண்ணீருடன் நமது சமுதாயமோ அல்லது இந்த அரசோ உதவும் என்று எல்லா வாயில்களையும் தட்டிக் கொண்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தினை அனுகும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவரோ "ஏம்மா உங்கள் கட்சி தமுமுக தானே இதில் தலையிட்டுள்ளது அவர்கள் தற்போது ஆளும் கட்சி கூட்டணியிலும் உள்ளனர், அவர்களாலேயே ஒன்றும் செய்யவில்லை எனும்போது நாங்க என்னம்மா செய்யிரது?" என்று கூறியுள்ளார்.
மையவாடியில் வாக்குறுதிகள் அளித்த தமுமுக வின் தலைமையோ அல்லது அந்த இயக்கத்தினரோ அரசின் உதவிகளை பெற்றுத்தருவதற்கு ஏதும் முயற்சிகள் எடுப்பதாகவோ அல்லது சமுதாயத்திடம் இருந்து ஏதாவது உதவிகள் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பவர்களாகவோ தெறியவில்லை.
தமிழகத்தின் தரம்கெட்ட அரசியல்வாதிகளின் ரத்தத்தில் ஊரிப்போனது எளவு வீட்டில் வைத்து அள்ளி வீசும் வாக்குறுதிகளும் பினத்தின் மீது செய்யும் அரசியலும் நாடறிந்தது தமுமுக வும் அந்த லிஸ்ட்டில் சேராது என்ற நம்பிக்கை நமது சமுதாயத்திற்கும் அந்த குடும்பத்திற்கும் உள்ளது. வாக்குறுதி அளித்த தமுமுக தலைமையின் நேரடி கவணத்திற்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு வருகின்றோம். கோவை மாவட்ட ஆட்சியர் கூறியது போல் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமுமுக இந்த ஏழைக் குடும்பத்திற்கு ஏதாவது அரசு உதவிகளை பெற்றுத்தருமா? தான் சார்ந்துள்ள சமுதாயத்திடம் ஏதாவது உதவிகளை பெற்றுத்தருமா? காத்திருந்து பார்ப்போம்.
தமிழக அரசின் கவணத்திற்கு :
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு இந்து ஒரு முஸ்லிமால் தனிப்பட்ட காரணத்திற்காக கொல்லப்பட்டாலும் கூட அந்த இந்துவின் குடும்பத்திற்கு உடனடியாக முதலமைச்சரின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் இது போல் இந்து சமூக விரோதியாலோ அல்லது இந்து தீவிரவாதிகளாலோ கொல்லப்படும் எந்த ஒரு முஸ்லிம்' குடும்பத்திற்கும் ஒரு போதும் இது போன்ற உதவிக்ள அறிவிக்கப்படுவதில்லை. ஏன் இந்த மாற்றான்தாய் மனப்பான்மை? எம் சமுதாயம் என்ன குற்றம் செய்தது?
தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தனது ஆட்சியில் சமூக விரோதிகளால் மக்கள் கூடும் இடத்தில் வைத்து தனது அரசின் பேருந்தில் படு கொலை செய்யப்பட்ட பைசுல் ரஹ்மானின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரன நிதியில் இருந்து உடனடி உதவிகள் அறிவிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் துயரம் துடைக்கப்பட வேண்டும். கருனை உள்ளம் கொண்ட தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.
இந்த செய்தியின் நகல்கள் கீழக்கண்டவர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது :
முதலமைச்சரின் தனிப்பிரிவு
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை
தமுமுக வின் தலைவர்
பதிந்தவர்: முகவைத்தமிழன் - தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை
Subscribe to:
Posts (Atom)