Sunday, February 25, 2007

அப்படிப் போடு

"சேதுசமுத்திர திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும். காரணம் அங்குள்ள ராமர் பாலம் என்பது இந்து மதத்தின் அடையாளச் சின்னம்; முக்கியமான கலாசார சின்னமும் கூட. சேது சமுத்திர திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்., எதிர்க்கவில்லை. ஆனால் ராமர் பாலம் இருக்கும் இடத்தில் மணல் தோண்டுவதையே எதிர்க்கிறது. இந்த பாலத்தைத் தாண்டி கடலை தூர் வாரலாம். இவ்விஷயத்தில் எதிர்ப்பு காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இந்துமதத் தலைவர்கள் ஆகியோரை ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கும்..."

(ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் சுதர்சன்)

குற்றவாளி பாபாவுக்கு வெண்சாமரமா?

குற்றவாளி பாபாவுக்கு வெண்சாமரமா?
மீனா மயில்
இங்கு, கடவுளாகவும் கடவுளுக்கு நெருக்கமானவராகவும் இருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்... ‘எதை வேண்டுமானாலும்'! புட்டபர்த்தி சாய்பாபா ‘சாதித்தது' அப்படித்தான். கோடிக்கணக்கான மக்களைத் தனது பக்தர்களாகக் கொள்ள சாய்பாபா அப்படியொன்றும் சிரமப்படவில்லை. பயிற்சி எடுத்தால் உங்களுக்கும் எனக்கும்கூட சாத்தியப்படும் தந்திரங்களைக் கற்றுக் கொண்டு, அதை ஆன்மிக லீலையாக மாற்றியதுதான் சாய்பாபாவின் தொழில். காற்றிலிருந்து மோதிரம், சங்கிலி, திருநீறு வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது என அவருடைய திறமைகளைக் காட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தினார். சாய்பாபா மட்டும் காவி உடைக்கு பதில் சார்லி சாப்ளின் மாதிரியான உடை அணிந்து, பம்பை முடியை வெட்டி தொப்பி அணிந்து, கையில் கோலோடு ஒரு மேடையில் இத்தகைய தந்திரங்களை நிகழ்த்தியிருந்தால் - சிறந்த ‘மேஜிக் மேனாக' அறியப்பட்டிருப்பார். ஆனால், இவ்வளவு செல்வத்தையும் செல்வாக்கையும் அடைந்திருக்க மாட்டார்.கடவுள் என்ற கருவே தந்திரமானதாகவும், ஆய்வுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கையில் - தன்னுடைய மாய தந்திரத் திறமையை அதோடு இணைத்ததுதான் இன்று சாய்பாபா அடைந்திருக்கும் நிலைக்குக் காரணம். குடும்ப பாரங்களை சுமக்கும் துணிவற்று வீட்டை விட்டு ஓடிப்போய் சந்நியாசம் புகும் சாதாரண சாமியார்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தில், சாய்பாபா போன்ற மோசடிப் பேர்வழிகளுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு அளப்பரியது.

பதினான்கு வயதில் ஒரு சிறுவன் ‘நான் கடவுள், இவ்வுலகைக் காக்க அவதாரம் எடுத்தவன்' என்று பிதற்றினால், அவன் முதுகில் நாலு போடு போட்டு ஒழுங்காகப் படியென்று பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைக்காமல், அவன் உளறல்களை ஊக்குவித்ததன் விளைவு சாய்பாபாவாக, சமூகத்தின் சீரழிவாக வளர்ந்து வேரூன்றி விட்டது. இந்த மாதிரி தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதாவது சுமார் அய்நூறு பேர். அவர்களில் சாய்பாபா அளவுக்குப் பணமும் புகழும் பெற்றிருப்பவர்கள் வெகு சிலரே! அந்த வெகுசிலர்தான் இந்தியாவின் நான்கு தூண்களுக்கும் அடித்தளம். இவர்கள் விரும்பினால் நான்கு தூண்களும் சரியும்... எழும்...உலகம் முழுக்க 165 நாடுகளில் சாய்பாபாவின் பக்தர்கள் என்ற பெயரில் ஏமாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது மண்ணில் இருக்கும் ‘சொர்க்கம்'; சாய்பாபாவோ மனித உருவில் உள்ள தெய்வம்! வேற்று மத - பண்பாட்டைச் சேர்ந்தவர்களே இப்படி ஏமாறுகின்றனர் எனில், இந்து மதத்தின் பிடியிலிருக்கும் இந்தியர்களை கேட்க வேண்டுமா?! பிள்ளையார், முருகன் படத்தோடு சாய்பாபா படமும் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிது. குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், காவல் துறையினர், உயர் அதிகாரிகள் என சாய்பாபாவைப் பார்த்து சிலிர்க்காதோர் இல்லை. இவர்கள் சாய்பாபாவின் மேஜிக் நிகழ்ச்சிகளுக்கு போவதையும் அவர் மோதிரம் வரவழைத்துத் தருவதைப் பார்த்தும் வாய்பிளந்து நிற்கின்றனர். அது எப்படி சாத்தியம் என்று ஆராய, இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள்கூட துணிவதில்லை.சாய்பாபா தரும் நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்தால், தனக்கு கிடைத்திருக்கும் பணம், புகழ், பதவி எதுவும் தன்னை விட்டுப் போகாது என அவர்கள் நம்புகின்றனர். அதற்கு கூலியாக மக்களைச் சுரண்டி அரசாங்கத்தை ஏய்த்து சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கில் சாமியாரின் காலடியில் கொட்டுகின்றனர்.

அளவற்ற பணமும், புகழும் சட்டத்துக்கு கட்டுப்படாத சுதந்திரமும் - ஒரு மனிதன் தொடர்ந்து குற்றமிழைக்கத் துணை போகின்றன. சாய்பாபா மீது அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகளை அவரது பக்தர்களான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பல சாமியார்களைப் போலவே சாய்பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சாய்பாபா ஓரினச் சேர்க்கையாளர் என்றும் அவர் இளம் வயது சிறுவர்களை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்குகிறார் என்றும், பாதிக்கப்பட்டவர்களே புகார் அளித்தும் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. புகார் கூறப்பட்டது இங்கல்ல, அமெரிக்காவில்.பி.பி.சி. தொலைக்காட்சி, சாய்பாபா பற்றி தயாரித்த ஆவணப்படத்தில் பாதிக் கப்பட்டவர்களை பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது. அலாயா என்பவர் தன்னை 17 வயதிலிருந்தே சாய்பாபா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறியுள்ளார். ‘குணப்படுத்தும் மருந்து என்றும், இதை வெளியில் சொன்னால் வலியும் வேதனையும் உன் வாழ்க்கை முழுவதும் வந்தடையும்' எனவும் மிரட்டியதால், அலாயா இதைத் தன் பெற்றோரிடம்கூட சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

இதனால் கடும் உளைச்சலுக்கு ஆளாகி மனோ ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தவரை, பெற்றோர் வற்புறுத்திக் கேட்க உண்மையை உடைத்திருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் சாய்பாபாவுக்காக உழைத்ததற்காக வெட்கப்பட்டதோடு, மகனைத் தீரா துன்பத்தில் தள்ளிய குற்ற உணர்வோடு சாய்பாபா சர்வதேச நிறுவனத்தின் அதிகாரியை சந்தித்து அவர்கள் புகார் அளித்தனர். ஆனால், புகார் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.ஓரினச் சேர்க்கை சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட அந்நாட்டிலேயே, ஒரு சிறுவன் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது, அதை கேவலமாகவும் குற்றமாகவும் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டதாகவும் பார்க்கும் இந்தியாவில், பாதிக்கப்படும் சிறுவர்களின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். சாய்பாபாவை புனிதக் கடவுளாகவும் மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவராகவும் வணங்கும் பெற்றோர், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் பிள்ளைகளோடு ஆசிரமமே கதியென்று கிடக்கின்றனர்.

சாய்பாபா விருப்பப்பட்டு எந்த சிறுவனை கைகாட்டி தனது தனியறைக்கு அழைக்கிறாரோ, அவனை பாக்கியம் செய்தவனாகக் கருதுகின்றனர். உள்ளே என்ன நடக்கிறது என்று விசாரிக்கும் அறிவு பெற்றோருக்கும் இல்லை; அதைச் சொல்லும் துணிவு சிறுவர்களுக்கும் இல்லை. உண்மை - சுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உறைந்து போகிறது.சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களே சாய்பாபாவைக் கொலை செய்ய அவரது அறைக்குள் கத்தியோடு பாய்ந்தனர். அவர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்து சமூக விரோதிகளைக் கொல்வதைப் போல சாதாரணமாக சுட்டுக் கொன்றனர். ஒருவேளை அந்த சிறுவர்கள் நீதிமன்றக் கூண்டில் ஏறியிருந்தால், ஆசிரம மர்மங்கள் வெளி வந்திருக்கக்கூடும்.

சாய்பாபாவுக்கு சிக்கல் வருவதைத் தடுக்கவே அந்த காவலர்கள் சற்றும் தாமதிக்காமல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இன்றுவரை அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. எதற்காக அந்த சிறுவர்கள் சாய்பாபாவைக் கொல்லத் துணிந்தனர் என்ற மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.இந்தியாவில் ஓர் ஆன்மிகவாதிக்கு இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்குமே கிடையாது. அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஏதோவொரு சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படங்களை பத்திரிகைகளில் நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். முக்கிய அரசு முடிவுகள்கூட, இந்த சாமியார்களின் விருப்பு வெறுப்பு சார்ந்தே எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆன்மிகவாதிகள் இழைக்கும் குற்றங்களுக்கான நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? கடவுளின் பெயரால் எல்லா குற்றங்களையும் செய்துவிட்டு, சமூக சேவைக்காக பணத்தை வீசிவிட்டால் போதும், அந்த அருஞ்செயலின் மகத்துவத்தைப் பரப்ப அரசே விழா எடுக்கிறது.

ஆந்திராவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம், தங்கள் நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சாய்பாபா பற்றி நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மக்களிடம் கொள்ளையடித்த பணத்திலிருந்து செலவழித்த 200 கோடிகளுக்கு, ஒரு குற்றவாளிக்கு மேடை போட்டுப் பாராட்டியிருக்கிறது தமிழக அரசு. பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்ற தமிழக முதல்வர் கருணாநிதி, எதற்காக இப்படி இரட்டை வேடம் போடுகிறார் என்பது நாமறிந்ததே!அதெப்படி? ‘கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பது பிரச்சினை அல்ல; கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிறபடி நடக்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று தன் செயலுக்கு அவர் நியாயம் கற்பிக்கிறார். கடவுளை மறுக்கிற ஒரு பகுத்தறிவாளர் ‘இல்லாத கடவுள்' ஏற்றுக் கொள்கிறபடி நடந்துகொள்ள விளைவதன் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

அது மக்களைக் குழப்புவது! சாய்பாபாவோடு மேடையில் கைகோத்து, வீட்டுக்கு வரவழைத்து தன் மனைவி தயாளு அம்மாள் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை வேடிக்கை பார்த்ததன் மூலம் - பகுத்தறிவுச் சமூகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் கருணாநிதி.பகுத்தறிவு முதல்வர் கருணாநிதி சாய்பாபாவோடு உறவாட, அமைச்சர்கள் துரை முருகனும் தயாநிதி மாறனும் நடந்துகொண்ட விதம் அருவருப்பானது. சாய்பாபா இவர்களின் கண் முன்னாலே கையை ஆட்டி ஆட்டி ஆளுக்கொரு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தாராம். பகவான் சாய்பாபாவால் முடியாத காரியமே இல்லையாம்! அரசு நிகழ்ச்சி ஒன்றில், உதவியாளர் கொண்டு வந்த தட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சங்கிலியை சாய்பாபா துழாவி எடுப்பதும் அதன்பின் கையை ஆட்டி காற்றிலிருந்து வரவழைப்பது போல நடிப்பதும் அப்படியே வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சி, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. பி.பி.சி. தொலைக்காட்சி தனது ஆவணப்படத்தில் அந்த காட்சிகளைப் பெற்று இணைத்துள்ளது. சாய்பாபாவின் ஆன்மிக ஏமாற்று வித்தைப் புகார் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் காற்றிலிருந்து மோதிரம் வந்ததற்காக இந்த அமைச்சர்கள் சிலாகிக்கிறார்கள். அது சரி, ‘முரசொலி' தவிர இவர்கள் எந்த பத்திரிகையும் படிப்பார்களா? ‘சன் டிவி' தவிர எந்த சேனலாவது பார்ப்பார்களா என்பது சந்தேகம்தானே!ஆன்மிகமா? பகுத்தறிவா? என்ற விஷயத்தில் கருணாநிதிதான் சமரசமாக நடந்து கொள்கிறார் என்றால், குடும்பத்திலேயே பகுத்தறிவுவாதியாகவும் பெரியாரை முன்னிறுத்துபவராகவும் அறியப்பட்ட கனிமொழியும் - தன்னை இப்படி அடையாளப்படுத்திக் கொண்டது ஏமாற்றமளிக்கிறது.

அண்மைக்காலமாக அவரும் குழப்பமான ‘நடுநிலை'க் கருத்துகளை உதிர்க்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு சாமியாரை சமூகத்தின் எல்லா துறைகளிலும் உயர் பதவியிலிருப்பவர்கள் போற்றித் துதிபாடுவது அவரை கோபப்படுத்தவில்லை; மாறாக ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அவரும் பார்த்து வியந்து போனாராம். எந்தவொரு தீமை - கேள்விப்படுத்தாமல், கோபப்படுத்தாமல் உங்களை ஆச்சரியப்படுத்துகிறதோ, அங்கேயே நீங்கள் மறைமுகமாக தீமைக்கு ஆதரவளித்து விடுகிறீர்கள். ‘சாய்பாபா கூட்டத்தில் கனிமொழியா?' என்ற கேள்வி எழும் என்பதால், அவரே அதற்கு இப்படி பதில் சொல்கிறார்... ‘‘உடனே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்து விட்டதா என்று கேட்காதீர்கள். அப்படி வந்தால் ஊரைக் கூட்டி சொல்வேன்.''நல்லது... ஒவ்வொரு பூனையாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.ஆன்மிகம் தன் பெருவாய் திறந்து பகுத்தறிவை விழுங்குவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆம்! ஒரு பொய், உண்மையை எளிதாக அகற்றுவதைத் தடுக்க வழியற்றுத் திணறுகிறோம். சங்கராச்சாரிகளும் சாய்பாபாக்களும் அமிர்தானந்தமயிகளும் எண்ணிக்கையில் பன்மடங்காகப் பெருக, ‘பெரியார்'கள் உருவாகவுமில்லை, உருவாக்கப் படவுமில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் காவல் துறையின் பாதுகாப்போடு சனிதோஷ பரிகார பூஜைக்கு படையெடுக்கின்றனர். நம் கூடாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். பணம், புகழ் பெரும் பதவியே ஆன்மிகத்தின் உடைமை என்பதால், மக்கள் அதை நோக்கியே ஈர்க்கப்படுகின்றனர். அதன் பளபளப்பின் முன் பகுத்தறிவின் எளிமை கேலிக்குள்ளாக்கப்படுகிறது. பகுத்தறிவென்பது வெறுமனே கடவுள் மறுப்பல்ல; அது தனிமனித ஒழுக்கத்தையும் சமூக ஒழுங்கையும் வலியுறுத்துவது. அதனாலேயே இங்கு அதற்கு மதிப்பில்லை. செய்கிற பாவங்களுக்கு பரிகாரங்கள் வைத்திருக்கிறது ஆன்மிகம். அதனாலேயே பெரிய பெரிய குற்றங்களையெல்லாம் செய்துவிட்டு உண்டியல்களை நிரப்பிவிடுகின்றனர்.

மனித உயிரை நேசிக்கச் சொல்லும் பகுத்தறிவு. நரபலியை நியாயப்படுத்தும் ஆன்மிகம்.ஒரு மனிதன் பிறக்கிற போதே ஆன்மிகம் அவன் மீது திணிக்கப்படுகிறது. முதல் நாளிலேயே மதச் சடங்குகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பெயர் வைப்பதில் தொடங்கி எல்லாவற்றுக்கும் ஜோசியம், ஜாதகம் என ஒரு குறுகிய அடிமை வட்டத்துக்குள் சுழலவிட, திட்டமிட்ட அட்டவணை கையில் திணிக்கப்பட்டு விடுகிறது. மழலையில் மழுங்கடிப்படும் அந்த மூளை சுயமாக சிந்திக்க மறுக்கிறது. இவ்வளவு வீரியமான மதங்களுக்கு எதிரான பகுத்தறிவுப் புரட்சி பெரியாரோடு முடிந்தது என்றே சொல்ல வேண்டும். கடவுள், மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழிப்பதை தன் வாழ்நாள் கடமையாக எடுத்து தீரமாகச் செய்ய, இங்கு எவருமிலர். பெருகும் சாமியார்களால் இந்த சமூகம் சீரழிந்து மூழ்குவதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம், வேதனை யோடு.

ஆன்மிகத்தை வேரோடு பிடுங்கியெறிய தெளிந்த தீர்வு நம் கையில் இருக்கிறது. என்ன செய்தால் இந்து மதத்தை ஒழிக்க முடியும் என்பதற்கு, நம் கையிலும் பெரியார் கொடுத்துச் சென்ற திட்டமிடல் அட்டவணை இருக்கிறது. கையில் எடுப்பதும் களத்தில் இறங்க வேண்டியதுமே மிச்சம்!


Tuesday, February 20, 2007

சுஜாதாவின் சுயசாதிப் பற்று

சுஜாதாவின் சுயசாதிப் பற்று
விடுதலை ராசேந்திரன்
அயோத்தியா மண்டபம் - பார்ப்பனர்களுக்கு மட்டுமே கதவு திறக்கும் வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டை! பஞ்ச கச்சம், பூணூல் திருமேனிகளோடு, பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தும் பார்ப்பனியச் சடங்குகள் - ஒவ்வொரு நாளும் அரங்கேற்றப்படும், அக்கிரகார அகங்காரத்தின் பீடம்! “மண்டபத்துக்குள்ளே பிராமணரல்லாதார் எவருக்கும் அனுமதி கிடையாது” என்று ஒலி பெருக்கி வைத்து, அறிவிப்பது அங்கே வழக்கம். திருவரங்கத்தில் பெரியார் சிலையை திட்டமிட்டு சூழ்ச்சி செய்து உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அயோத்தியா மண்டபத்தில் பார்ப்பனத் திமிரின் அடையாளமான பூணூல்கள் - இரண்டு பார்ப்பனர்களிடமிருந்து அறுக்கப்பட்டதை, பார்ப்பன எழுத்தாளர் சுஜாதாக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘குமுதம்’ ஏட்டில் (3.1.2007) புத்தாண்டு சிறப்புக் கதை ஒன்றை ‘அயோத்தியா மண்டபம்’ என்ற பெயரில் எழுதி - தனது பார்ப்பனியத்துக்கு, இலக்கியம் படைத்திருக்கிறார், கதை இதுதான்:

அயோத்தி மண்டபத்துக்கு அருகே - ‘பூணூல்’ விற்பனைக் கடை நடத்தும் வைதீகப் பார்ப்பனரின் மகன் - தன்னோடு அய்.அய்.டி.யில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் அமெரிக்காவில் வேலை கிடைத்து, பயணத்துக்குத் தயாராகிறார்கள். புரோகிதப் பார்ப்பனர், இந்தத் திருமணத்தை ஏற்கவில்லை. வெளிநாடு போவதற்கு முன், தனது மாமனாரிடம் நேரில் சொல்லி விடைபெற விரும்புகிறார், பிற்படுத்தப்பட்ட பெண். கணவன், இதை தனது தந்தையிடம் கூறுகிறார். தனது வீட்டுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பெண் வரக்கூடாது; வேண்டுமானால், அயோத்தியா மண்டபத்துக்கு அருகே தனது பூணூல் கடைக்கு வரச்சொல் என்கிறார். மகனும், மருமகளும் அயோத்தியா மண்டபத்துக்குப் போகும் போது - புரோகிதப் பார்ப்பனரின் பூணூலை - ஆட்டோவில் வந்த சிலர் அறுத்து, அவரைத் தாக்குகிறார்கள்.

மருத்துவமனையிலே பார்ப்பனர் அனுமதிக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பெண், தனது அமெரிக்க பயணத்தையே ரத்து செய்துவிட்டு, மாமனாருக்கு மருத்துவ உதவி புரிய முன் வருகிறார். ஆனால் அமெரிக்காவில் கிடைத்த வேலையோ கணவன், மனைவி இருவரும் இணைந்து செய்ய வேண்டிய வேலை. மருமகள் தன்மீது காட்டிய பரிவால், மனம் உருகிய புரோகித மாமனார், மருமகளை ஏற்றுக் கொண்டு, நீங்கள் இருவருமே அமெரிக்காவுக்குப் போங்கள் என்று கூறுகிறார். அப்படி விடை கொடுக்கும்போது, புரோகிதப் பார்ப்பனர் இவ்வாறு கூறகிறார். அத்துடன் கதை முடிகிறது.

“கலிபோர்னியாவுல அம்மாவசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி. தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்க முடியாது” - சுஜாதாவின் பார்ப்பனப் பாசத்தையல்ல; பார்ப்பன வெறியையே வெளிப்படுத்துகிறது இக்கதை!

“என்னால இனிமே அடி தாங்க முடியாது” என்று எழுதியிருப்பதன் மூலம் - பார்ப்பனர்கள் எல்லாம், ஏதோ தமிழ்நாட்டில் நாள்தோறும் அடிவாங்கி அடிவாங்கி, பொறுமையின் கடைசி எல்லைக்கு வந்துவிட்டதைப்போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார் சுஜாதா!

‘தர்ப்பை’, ‘தர்ப்பணம்’, ‘பூணூல்’ - இவை எல்லாம், பார்ப்பனர்களின் கலாச்சார அடையாளங்கள். அந்த அடையாளங்களைப் பேணுவது ‘அவாளின்’ உரிமை; இதை எதிர்ப்பதோ சிதைப்பதோ, குற்றம் என்பது, சுஜாதா உட்படப் பார்ப்பனர்களின் வாதமாக இருக்கிறது. எந்த ஒரு இனமும், தனது கலாச்சார அடையாளங்களைப் பேணவும், பின்பற்றவும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்த அடையாளங்கள் ஏனைய பிரிவினரை இழிவுபடுத்துவதாகவும், அடிமைப்படுத்தக்கூடிய ஆயுதமாகவும் இருக்கக் கூடாது.

பார்ப்பனர்கள் - ‘காயத்திரி மந்திரம்’ ஓதி - ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளும் பூணூல் உணர்த்துவது என்ன? பார்ப்பனரல்லாத மக்களை “சூத்திரர்கள்” - பார்ப்பனர்களின் அடிமைகள் - அவர்களின் ‘தேவடியாள் பிள்ளைகள்’; பார்ப்பனருக்கு அடிமை சேவகம் செய்யக் கூடியவர்கள் என்பதைப் பிரகடனப்படுத்துகிறது. பார்ப்பன குலத்தில் பிறந்தவர்களை, “பிராமணனாக” உயர்த்தும் குறியீடுதான் பூணூல்! ‘பூணூலை’ப் போட்டவுடன் ‘பிராமணனா’கி விடுகிறான்! அப்போது - அவன், கடவுளைவிட மேலானவனாக விடுகிறான் என்பதே “பிராமணன்” என்பதன் தத்துவம். “தெய்வாதீனம் ஜகத்சர்வம்; மந்த்ரா தீனம் து தெய்வதம்; தன் மந்திரம் பிரம்மணாதீனம்; தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத் என்கிறது - ‘ரிக்வேதம்’ (62வது பிரிவு - 10-வது சுலோகம்)

இதன் பொருள் என்ன? “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமது கடவுள்கள்” என்பதுதான்!

“ஸ்மகானேஷ்வபி தேஜஸ்வீ பாவகோனநவ துஷ்யதி ஹீயமானஸ்ச யஜ்னோஷீ பூய ஏவாபி வர்த்த”
- மனுஸ்மிருதி, சுலோகம் 317

இதன் பொருள்: அறிஞனாயிருப்பினும் அறிவிலியாயிருப்பினும் ‘பிராம்மணன்’ மேலான தெய்வம். அக்கினியானது - அதாவது நெருப்பானது, பிணத்தை எரிக்கப் பயன்படுத்தினாலும், அதுவே யாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதைப்போல் - “பிராமணர்கள்” எந்த இழிதொழிலை செய்பவராக இருந்தாலும், எல்லா நற்காரியங்களிலும் வழிபடத்தக்கவர்கள். காரணம் அவர்கள் மேலான தெய்வங்கள்.

இப்படிப் பிறவியின் அடிப்படையில் தங்களை உயர்ந்தவர்களாகவும், கடவுளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களாகவும், ஏனைய மக்களை இழிமக்களாக அடிமைப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களாகவும் - பார்ப்பனர்களைப் அடையாளப்படுத்துவதுதான் பூணூல்! எனவேதான், “சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினர் மட்டும் அதைப் போட்டுக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது?” - என்று காந்தியே கேட்டார்.

“பூணூல் என்பது அகங்காரச் சின்னம். நான் எல்லோரையும்விட உயர்ந்தவன்; பிராமணன் என்பதன் சின்னம்” என்றார், இந்து மதவாதிகளாலேயே ஏற்றிப் போற்றப்படும் இராமகிருஷ்ண பரமஹம்சர்.

‘தர்ப்பைப் புல்’ பார்ப்பனர்களின் சக்தி மிக்க ஆயுதம்! அதுதான் - பூமியிலிருந்து வானத்திலிருக்கும் “பிதுர்களுக்கு” பொருள்களைக் கொண்டு போய் சேர்க்கிறதாம்! அந்த சக்தியும் அப்படி அனுப்பக்கூடிய உரிமையும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்பதன் அடையாளம்தான் ‘தர்ப்பை’. எனவே தான் குத்தூசி குருசாமி - தர்ப்பைக்கு ‘பரலோக தபால்பெட்டி’ என்று பெயர் சூட்டினார். சுஜாதாவும் தனது கதையில், இந்த இறுமாப்பை பெருமையோடு பூரித்துக் கூறுகிறார். சுஜாதாவின் கதையில் வரும் புரோகிதப் பார்ப்பனர் இவ்வாறு கூறுகிறார்.

“பூணூல் தர்ப்பை சமாச்சாரங்கள் (என்று) ‘பிராமின்’சுக்கு ஏகப்பட்ட கடமைகள்... இதெல்லாம் சாமி (கடவுள்) சமாச்சாரம் மட்டும் இல்லை. பித்ருக்களை அப்பப்ப கூப்ட்டு சிரார்த்தம் பிண்டதானம் செய்ய வெக்கறது. இது எங்க (பிராமணர்களது) பேமிலியோட பரம்பரைத் தொழில்” - என்று ‘பூணூலும், தர்ப்பையும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிய பரம்பரைச் சிறப்பு என்று சிலாகிக்கிறது சுஜாதாவின் கதை.

எனவே, பூணூலும், தர்ப்பையும், சிரார்த்தமும், வேதமும், யாகமும் - பார்ப்பனக் கலாச்சாரம், குறியீடு என்ற எல்லைக்குள் சுருங்கிடவில்லை, பார்ப்பனரல்லாத மக்களாகிய “சூத்திரர்களுக்கு”, அவர்கள் ‘இழி பிறவிகள்’ என்பதால் மறுக்கப்பட்டு, பார்ப்பன பிறவி இறுமாப்பைப் பறைசாற்றும் கலாச்சாரங்கள் என்பதுதான் மிக முக்கியமானது. காலம் காலமாக இந்த ஆதிக்க ஒடுக்குமுறைக் கலாச்சாரத்தைப் பேணி வரும் பார்ப்பனர்கள் - தங்களது, ‘சுயநலம்’ என்று வரும்போது மட்டும், அதை மீறவும் தயாராகிறார்கள். இந்தப் பரம்பரைத் தொழிலில் - தனது மகனை ஈடுபடுத்த கதையில் வரும் புரோகிதப் பார்ப்பனர் தயாராக இல்லை. வேதம் படிக்க வைக்காமல் மகனை அய்.அய்.டி.யில் படிக்க வைக்கிறார். இதில் பார்ப்பன பரம்பரை சம்பிரதாயத்தை மீறுபவர் அய்.அய்.டி.யில் தன்னோடு படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கலைச்செல்வியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும்போது மட்டும் அங்கே ‘பார்ப்பன பரம்பரை’யை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த கலைச்செல்வி - அய்.அய்.டி.யின் படிக்கட்டுகளை மிதித்ததே, பார்ப்பன இறுமாப்பு - ஆதிக்க கலாச்சாரத்துக்கு எதிராக - தமிழ்நாட்டில் பெரியார் நடத்திய போராட்டத்தினால் தான்! சுஜாதாக்கள் - தங்களது கதையில் உயர்த்திப் பிடிக்கும் ‘பார்ப்பனக் கலாச்சாரங்கள்’ தொடர்ந்திருக்குமானால் - கலைச் செல்விகள் எங்கேயாவது கல்லுடைத்துக் கொண்டிருப்பார்கள்; கல்விச் சாலைக்குள் நுழைந்திருக்க முடியாது! வேதம் படிக்க வேண்டிய ‘பிராமணன்’ அய்.அய்.டி. படிப்பதும், அய்.ஏ.எஸ். ஆவதும் தங்களது ‘கலாச்சாரத்துக்கு’ எதிரானது என்று எந்தப் பார்ப்பனனும் எதிர்த்ததாக வரலாறு கிடையாது. அவாளின் ஆதிக்க நலனுக்காக அவர்கள் தங்களது ‘தர்ப்பை’ - ‘பூணூல்’ தத்துவங்களை மீறத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் - பார்ப்பனரல்லாதார் மீது மட்டும் ‘பூணூல் - தர்ப்பை’ கோட்பாடுகளைத் திணிப்பதற்காக, விடாமல் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

அமாவாசை தர்ப்பணம் பண்ண - தர்ப்பையைத் தூக்கிக் கொண்டு, பூணூல் மேனியோடு அமெரிக்காவுக்கே போகத் தயாராகி விடுகிறார், சுஜாதாவின் ‘கதாநாயக’னான புரோகிதப் பார்ப்பனர்! கடல் தாண்டிப் போவதே அவாளின் ‘சாஸ்திரத்துக்கு எதிரானது தான்! தங்களின் சுயநலனுக்காக ‘சாஸ்திர மீறலை’ செய்வதற்குத் தயாராக இருப்பவர்கள் தானே! அதைத் தான் கதையின் ‘முடிப்பிலும்’ நிலை நிறுத்தியிருக்கிறார் சுஜாதா.

‘கம்ப்யூட்டர்’, ‘ஏரோனேட்டிக்’, ‘யூனிர்வர்ஸ்’ என்று, எவ்வளவுதான் விஞ்ஞானத்தைப் பேசியும் எழுதியும் வந்தாலும், சுஜாதாக்கள் அயோத்தியா மண்டபத்தையும், பூணூலையும், தர்ப்பையையும், தர்ப்பணத்தையும், யாகத்தையும், வேதத்தையும் விடத் தயாராகவே இல்லை. அதற்குள்ளே தான் அவாளின் ஆதிக்கத்தின் ‘சூட்சமம்’ அடங்கிக் கிடக்கிறது. என்பது சுஜாதாக்களுக்கும் தெரியும். சுஜாதாக்களைப் போலவே - பெரியார் கொள்கைக்காக உண்மையாகவே களத்தில் நிற்கும் லட்சியப் போராளிகளுக்கும் இது தெரியும்.

அப்படிப் போடு !!!

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தை வளைப்போம், மணலில் கயிறு திரிப்போம் என்றெல்லாம் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில் அவர்களுக்குக் கிடைத்த கவர்ச்சியை வைத்துக் கொண்டு இன்னமும் மக்களை ஏமாற்றுகின்றனர். சில கட்சிக்காரர்கள் மலையை தூக்குகிறேன் என்று கூறி வருவார்கள் பின்னர் உங்களை பார்த்து மலையை தூக்கி தோளில் வையுங்கள் என்பார்கள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்"

(முதல்வர் கருணாநிதி)

Thursday, February 15, 2007

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை
அருணா

தமிழகத் தென்மாவட்ட மக்களின் வாழ்வுக்கு உயிர்நாடியாக இருந்துவரும் முல்லைப்பெரியாறு அணையில் நமக்குள்ள சட்டப்படியான உரிமையைக் கூட தர மறுக்கிறது அண்டை மாநிலக் கேரள அரசு. இருபத்தி ஆறு ஆண்டு காலத்திய இப்பிரச்சினைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ந் தேதி உச்சநீதிமன்றம் சரியானதொரு தீர்ப்பை வழங்கி தமிழக மக்களின் உரிமையை நிலைநிறுத்தியது.பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து உடனடியாக 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு எவ்விதமான முட்டுக்கட்டையும் போடக்கூடாது. அணையின் சீரமைப்புப் பணி நிறைவுற்றதும் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்பதே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பு வந்த நேரத்தில் தமிழகம் சட்டமன்றத் தேர்தல் களத்தில் கவனத்தைக் குவித்திருக்க, இலவசத் திட்டங்களை மாறி மாறி அள்ளி வீசுவதில் குறியாக இருந்த அரசியல் கட்சிகள் சிறப்புமிக்க இத்தீர்ப்பினைக் கண்டுகொள்வதில் அசட்டையாக இருக்கவே இத்தருணத்தை தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொண்டது கேரள அரசு.உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் துச்சமென மதித்து அதனை ஏற்க மறுத்ததோடு அந்த ஆணையையே செல்லாதது ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு அணைப்பாதுகாப்பு ஆணையம் ஒன்றை நிறுவுவதற்கான அவசரச் சட்டத்தையும் கொண்டு வந்தது. உச்சநீதிமன்ற ஆணையின்படி 142 அடியாக நீரை ஏற்ற மாட்டோம் என்றதோடு நில்லாமல் இப்போதுள்ள அணையை இடித்துவிட்டுப் புதிதாக ஓர் அணையைக் கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தையும் பேரவையில் நிறைவேற்றி விட்டனர்.கேரள அரசின் இத்தகைய நடவடிக்கைகளில் உள்ள அடாவடித்தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் பெரியாறு அணையில் தமிழகத்திற்குள்ள உரிமை பற்றிய வரலாற்றினை அறிவது அவசியம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அடிக்கடி பருவமழை பொய்த்து தமிழகத் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் பகுதி மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கிப் பசியிலும், பட்டினியிலும் கிடந்து உழன்றனர். இதனைச் சீர்செய்ய நினைத்த ஆங்கிலேய அரசு நீண்டதொரு ஆய்வை நடத்தி கம்பம் பள்ளத்தாக்கில் அதிக அளவிலான ஆறுகள் வீணே சென்று கடலில் கலப்பதை அறிந்து, அதைத் தடுக்கும் விதத்தில் அணை கட்ட முடிவு செய்தது. 1874ம் ஆண்டு பென்னிகுக் என்பவர் தலைமையில் அணைகட்டும் பணியைத் தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு 1895ல் கட்டி முடிக்கப்பட்டது. 10-10-1895ல் திறக்கப்பட்ட இந்தப் பெரியாறு அணையின் நீர்வள உரிமையை தமிழகம் 999 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப் பட்டது.ஆனால் 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பெரியாறு அணையைக் கருத்தில் கொண்டு, தமிழர்கள் அதிகம் வாழ்ந்துவந்த பீர்மேடு, தேவிகுளம் போன்ற தமிழகப் பகுதிகளைக் கேரளத்துடன் இணைக்கப் பெரிதும் போராடி வெற்றிபெற்றது கேரள அரசு. பின்னர் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1976ல் பெரியாறு அணையைவிட ஏழு மடங்கு பெரிதான இடுக்கி அணையைக் கட்டியது கேரள அரசு. (இடுக்கி அணையின் கொள்ளளவு 71.865 டி.எம்.சி. பெரியாறு அணையின் கொள்ளளவு 15.565 டி.எம்.சி. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அந்தப் பெரிய அணைக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. அப்போது கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளராக இருந்த பரமேஸ்வரன் (நாயர்) என்பவர் 152 அடி உயர பெரியாறு அணையின் நீர்மட்ட அளவினை 136 ஆகக் குறைத்து 16 அடித் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டு செல்லலாம் எனப் பரிந்துரைத்தார். இதன் பின்னரே பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும், பூகம்பப் பகுதியில் அமையப் பெற்றிருப்பதாகவும் புரளி கிளப்பி விடப்பட்டு 136 அடியாகக் குறைக்கப்பட்டது.பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏற்பட்ட விவசாய உற்பத்தி இழப்பு ரூ.55.80 கோடியாகும். மின்உற்பத்தி இழப்போ ஆண்டுக்கு 75 கோடி ரூபாய். 1980லிருந்து 2006ம் ஆண்டுவரை ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 3561.6 கோடி ரூபாய் ஆகும். அணையின் நியாயமான உரிமை மறுக்கப்பட்டு பேரிழப்புக்கு உண்டான தமிழக மக்களும் விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களைக் கடுமையாக்கவே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வைச் சொன்னது. தமிழக அரசு 21 கோடி ரூபாய் செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும். அவ்வாறு பலப்படுத்தியபின்பு 152 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி அந்தச் சீரமைப்புப் பணியினைச் செய்யவிடாது கேரள அரசு எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினாலும் தமிழக அரசு அதையெல்லாம் மீறி சீரமைப்புப் பணியை முடித்தது. அதன்பின்னரும் நீர்மட்டத்தை உயர்த்தக் கேரள அரசு மறுக்கவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.அணையின் சீரமைப்பு பணியை ஆய்வுசெய்த தமிழகத்தையோ, கேரளத்தையோ சாராத வல்லுநர் குழு ஒன்று 2001ம் ஆண்டு சனவரி மாதம் 23ந் தேதியன்றே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று கேரள அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இதைக் காதில் வாங்கிக்கொள்ளாத கேரள அரசு ஐந்து ஆண்டுகளைத் தன்னிச்சையாக தாமதப்படுத்திக் கடத்திக்கொண்டிருக்க 27-2-2006 அன்று உச்சநீதிமன்றம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடியாக உயர்த்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.ஆனால் கேரள முதல்வர் அச்சுதானந்தனோ உச்சநீதிமன்ற ஆணையைத் துச்சமெனக் கருதி, தமிழக அரசின் அனுமதியைக் கூட பெறாமல் கடற்படை அதிகாரிகள் சிலரைக் கொண்டு பெரியாறு அணையை ஆய்வுசெய்ய முயற்சித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மலையாளி என்பதால் அவரும் இதற்கு ஆதரவு.பெரியாற்றில் கிடைக்கும் நீரின் அளவு 4867 டி.எம்.சி. கேரளாவிற்குத் தேவைப்படும் நீரின் அதிகபட்ச அளவு 2554 டி.எம்.சி.தான். மீதி கடலில் வீணாகக் கலக்கும் நீரின் அளவு 2313 டி.எம்.சி. இந்த வீணாகும் நீரில் தமிழ்நாடு கேட்பதும், தமிழ்நாட்டிற்குத் தேவையும் வெறும் 126 டி.எம்.சி. நீர் மட்டுமே. கடலில் விட்டாலும் விடுவோமே தவிர தமிழகத்திற்குத் தரமாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கிறது கேரள அரசு.இதன் காரணமாக தென்தமிழ்நாட்டில் முன்கூறிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். அண்டை மாநிலத்தின் உரிமையை மதிக்காத கேரள அரசு செய்நன்றி மறந்த அரசாகவும் இருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு நாள்தோறும் 700 டன் அரிசி அனுப்பப்படுகிறது. அதோடு காய்கறி, உணவுப்பொருட்கள், இறைச்சிக்கான கால்நடைகள் என்று அத்தியாவசியப் பண்டங்கள் ஏராளமாக கேரளாவிற்குச் சென்று கொண்டிருக்கின்றன. 700 டன் அரிசியை உற்பத்தி செய்வதற்கே 511 டி.எம்.சி. தண்ணீர் தேவைப் படுகிறது. மற்றவற்றின் விளைச்சலுக்கும் சேர்த்துக் கணக்கிடும்போது தமிழ்மண்ணின் நீர்வளம் கேரளத்தால் எவ்வளவு சுரண்டப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிய வரும்.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் அணை பலவீனம், நிலநடுக்கப்பகுதி, புதிய அணை தேவை என்று பொருந்தாக் காரணங்களைச் சொல்லி நாளைக் கடத்தும் கேரள அரசிற்குத் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் 29ந் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழ்மக்களின் - தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனை இது என்பதை உணர்ந்து சாதி, மத, அரசியல் வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே நமது உரிமையை நழுவ விடாமல் காக்க முடியும். இப்போராட்டத்தில் தமிழகப் பெண்கள் குறிப்பாக தென்மாவட்ட விவசாயப் பெண்கள் அணி திரள வேண்டும். நீராதாரப் பிரச்சனையே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை நினைவில் நிறுத்தி அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பெண் உரிமைச் சங்கங்கள், பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவருமே முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்கக் கரம் கோர்க்க வேண்டும். தமிழகத்தின் தடைபட்டுக் கிடக்கும் நீர்வளத்தை வென்றெடுக்க முன்வர வேண்டும்!

ராஜேந்தர் சர்சார் ஆய்வும் இந்திய இஸ்லாமியர் நிலையும்

ராஜேந்தர் சர்சார் ஆய்வும் இந்திய இஸ்லாமியர் நிலையும்
சித்தார்த் வரதராஜன் (4.11.06) இந்து / தமிழாக்கம்: ஜீவா

இந்திய முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதை நீதிபதி. ராஜேந்தர் சர்சார் ஆய்வு அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது. முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறது. அவர்களை திருப்திபடுத்த பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று குறைகூறி அரசியல் லாபம் பெற்று வந்தோரை வாயடைக்கச் செய்துள்ளது.இந்திய மக்கள் தொகையில் 17 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள் நுழைய முடியாத பல தடுப்புச் சுவர்களால் தடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. அரசு நிர்வாகம், நிதித்துறை, காவல்துறை, தனியார் துறை என கல்வி, பொருளாதாரம், சமூகம் என அத்தனை நிலைகளிலும் முஸ்லிம்களை ஒதுக்கிப் பின் தள்ளும் கரங்களைக் காண முடிகிறது. இவை அனைத்திலும் முஸ்லிம்களின் பங்கு வெறும் மூன்று முதல் ஐந்து விழுக்காடாகவே உள்ளது. பாரதிய ஜனதாவும், சில பத்திரிகைகளும் இந்திய ராணுவத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை சர்சார் கமிட்டி என வெறிப் பிரச்சாரம் செய்தன. அங்கும் கூட முஸ்லிம்களின் இருப்பு வெறும் மூன்று விழுக்காடே.ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்களின் பங்கு வருந்தத்தக்க அளவு குறைவாகவே உள்ளது. கல்வியில் பெரும் சமத்துவமின்மை நிலவுகிறது. ஆரம்பக் கல்வியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் முஸ்லிம்கள் நுழைவதும், வெளிவருவதும் தேசிய அளவைவிடவும் மிகவும் குறைவாகவே உள்ளது. கல்லூரிக் கல்வி என வரும் போது முஸ்லிம்கள் பங்கு பரிதாபமானதாகவே உள்ளது. இதே நிலைதான் வேலை வாய்ப்பிலும் நிலவுகிறது. ஒவ்வொரு துறையிலும், சமூக பொருளாதார அந்தஸ்திலும் முஸ்லிம்களின் பங்கு சமத்துவ மற்றதாக உள்ளது. உள்ளதும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையும் பல நகரங்களில் பெருமைப்படும்படி அமையவில்லை. பல நகரங்களில் முஸ்லிம்கள் வாழாத பகுதியில் வாடகைக்கோ, விலைக்கோ முஸ்லிம்கள் வீடு பெறுவது கடினமானதாக உள்ளது. பல பத்திரிகைத் துறை முஸ்லிம்கள் கூட இத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள். முன்னாள் அமைச்சராக இருந்த ஒரு இஸ்லாமியர் தமக்கான ஒரு வீட்டைப் பெற ஒரு இந்து நண்பரின் உதவியைப் பெற வேண்டியிருந்தது. மும்பையில் முஸ்லிம்கள் நிலை இன்னும் மோசம். கடை பெறுவதிலிருந்து கடன் பெறுவது வரை முஸ்லிம் வியாபாரிகளுக்குப் பெரும் பாடுதான். எங்கும் சந்தேகக் கண்கள். பாராளுமன்றம், சட்டமன்றம், நகர சபை என அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்களின் பங்கு மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறார் இக்பால்.ஏ.அன்சாரி தமது POLITICAL REPRESENTATION OF MUSLIMS 1952-2004 நூலில். இதற்கு கேரளா மட்டுமே விதிவிலக்கு.மக்கள் தொகை பெற வேண்டிய பங்கில் பாதியளவு பதவிகளையே முஸ்லிம்கள் பெற்று வருகின்றனர். இந்தக் குறையை மதவாதிகளே பயன்படுத்திக் கொண்டு பேதம் வளர்க்கின்றனர்.‘வன்முறைகளுக்காக போர்’ எனும் போர்வையில் ஏற்கனவே வளர்ந்து வரும் கசப்பும், பகையும், காவல்துறையின் முட்டாள் தனத்தாலும், மதச்சார்பாலும் மேலும் மோசமாக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு எனும் பெயரில் பெரும்பாலும் முஸ்லிம்களே துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.குஜராத் கலவரமும் அதில் காவல்துறையின் ஒரு சார்பான நடவடிக்கைகளும் நாடறிந்தது. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல் துறையின் நடவடிக்கைகள் பலவும் ஒரு சார்பாகவே உள்ளன. இதை முடிவு கட்ட நிர்வாகமோ, நீதித் துறையோ அவசர உணர்வுடன் அணுகுவதில்லை. 2002 மும்பை வெடிப்புக்கான தீர்வு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 1992-93ல் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் பற்றிய தீர்வு ஏன் இன்னும் வெளிவரவில்லை? தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தீர்ப்பு இன்னும் கிடப்பில் கிடக்கிறது.ஊடகங்களின் பங்களிப்பு ஓரளவு உள்ளது. ஒரு சில பத்திரிகை கள் இந்திய முஸ்லிம்களின் பாட்டை வெளிக்கொணரும் போது,மற்ற பத்திரிகைகள் வெறுப்பையும், பகையையும் வளர்க்க ஒரு சார்பான செய்திகளையே முதன்மைப்படுத்துகின்றன.முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை பற்றியே ஒருமித்த கருத்து இல்லை. முஸ்லிம் திருமணங்கள் பற்றிய விவாதம் தொலைக்காட்சியில் காட்டப்படும் போது அது இஸ்லாமியரின் பின்தங்கிய நிலையைக் காட்டுவதாகவே உள்ளது.அமெரிக்காவின் ஊடங்கள் யூதச் செய்திகளை வெளியிடுகின்றன. இந்தியாவில் இஸ்லாமியர்க்குப் பரிவான செய்திகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசர்வேஷன் வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தில் பங்கேற்க ஒரு தொலைக்காட்சியால் அழைக்கப்பட்டார். முஸ்லிம்களுக்கு ரிசர்வேஷன் தேவையா என்பது பொருள். அவர் தான் அதற்கு எதிராகப் பேசமாட்டேன் என்றார். தொலைக்காட்சியினர் உங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை. எனவே அதற்காகப் பேசுங்கள் என்று வற்புறுத்தினர். எனினும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே அந்நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது.ஒரு சமயம் ஒரு அறிஞர், முஸ்லிம்கள் சுய இரக்கத்தை விட வேண்டும். தாஜ்மஹாலைக் கட்டிய கைகள் அவர்களுடையன எனப் பெருமித உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தலித்துகள் தங்களை உயர்த்திக் கொள்ள எவ்வித சுயமுற்சியும் எடுப்பதில்லை என்று எவரும் குறை கூறிவிட முடியாது. ஆனால் முஸ்லிம்களின் கல்வி இன்மைக்கும், வறுமைக்கும் முஸ்லிம்களே குறை கூறப்படுகின்றனர். படிப்பில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறப்படுகிறது. அவர்களுக்கான பள்ளிகள், இடங்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், புத்தகங்கள், கல்விச் செலவு, தடையான வறுமை ஆகியன நீக்கப்பட்டு விட்டனவா என்ற கேள்விக்குப் பதிலில்லை.இந்தக் கேள்விகளின் பின்னணியில் இருந்தே பிரதமர் மன்மோகன் சிங் ராஜேந்தர் சர்சாரின் பரிந்துரைகளை கவனிக்க வேண்டும். இயல்பாக இப்போது நிலவி வரும் ஏற்றத் தாழ்வு, சமத்துவமற்ற சூழல் ஆகியனவற்றை மறந்து விடக்கூடாது.அரசுக்கு இவற்றைச் சரி செய்யும் அரசியல் தைரியம் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை உடனடியாக, அக்கறையுடன் அணுக வேண்டிய அவசரச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் இதை நிறைவேற்றும் மனத் தூய்மையுடன் பி.ஜே.பி உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஒரு மனம் ஒத்த தேசிய அணுகுமுறையை உடனடியாகக் கண்டாக வேண்டும்.இதற்கான முதற்தேவை கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுயவேலை வாய்ப்பு, கடன் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு, இஸ்லாமியத் தலைவர்கள் எவ்விதக் குழப்பமான முடிவுகளை ஏற்கக்கூடாது. கடந்த அறுபது ஆண்டுகள் சமரசமற்ற போராட்டம், அரசியல் அணுகுமுறை, யுக்திகள் மூலமே தலித்துகள் நிலைமை இன்றைய மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது என்பதை முஸ்லிம் தலைவர்கள் மறந்து விடக் கூடாது. இஸ்லாமியத் தலைவர்கள் எவ்விதமான மேம்போக்கான, அலங்காரச் சலுகைகளிலும் மயங்கி விடக்கூடாது.சமத்துவமின்மையைப் போக்குவதில் எவ்வித சமரசமும் சமத்துவ வாய்ப்பும் அதன் விளைவான சமத்துவச் சூழலும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. சமத்துவ வாய்ப்பு என்பது முதலில் ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான வேறுபாட்டை ஒழிப்பது. உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவம் என்பது குழந்தைகள் எவ்விதமான புறக்கணிப்புகளுக்கும் இடமின்றி, அவர்களின் திறமைகளையும், ஆற்றலையும் பயன்படுத்தும் கோட்டா எனும் ஒதுக்கீடு மூலம் இந்தியா சமத்துவ விளைவுகளுக்கு ஒப்பான சேவை செய்து வருகிறது.ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கான செலவினங்கள், ஒதுக்கீடு, சமத்துவ வாய்ப்பு வழங்குவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்த அநீதி கல்வித் துறையில் பெரிதும் வெளிப்படுகிறது. கல்வி இடை நிறுத்தம் காரணமாக தலித், பழங்குடியினர் உயர்கல்வி, பல்கலைக்கழக அளவில் குறைகிறது. பள்ளிகள் அளவில் தரமிழந்து காணப்படுகிறது.2000ல் வெளியான ஜுலியன் பீட், ஜான் ரோமர் சமத்துவ வாய்ப்பு உண்டாக்க அமெரிக்க அரசு தனது செலவினத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியது. மக்கள் வெள்ளை -கருப்பு என நிறத்தாலும் மேல்தட்டு, அடித்தட்டு என பொருளாதார, சமூக நிலைகளால் பிரிக்கப்படுகின்றனர்.அடித்தட்டு கருப்பின மக்களுக்கான அரசு செலவினம் உயர்மட்ட வெள்ளையர்க்கு தரப்படுவது போல் ஒன்பது மடங்கு இருக்க வேண்டும் என்கிறது.இந்தியாவில் உயர்மட்டக் கல்விக்காகக் செலவிடப்படும் தொகையில் பெரும்பகுதி மேல் தட்டு, சமூக மேலின மக்களுக்கே செலவிடப்படுகிறது. உண்மை இடஒதுக்கீடு என்பது வசதி வாய்ந்தவர்களுக்காகவே உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருளாதார அளவீடுகளை மட்டும் கொண்டு ஏற்றத்தாழ்வுகளை முடிவு செய்ய முடியாது. ஒதுக்கப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தனிச் சலுகை அவசியம்.தொழில், வேலை வாய்ப்புகள், வாழ்விடம், தொழிற்கடன், கல்வி ஆகியவற்றில் என வேறுபாடுகள் ஒழிக்கப்பட்டு, சமத்துவ வாய்ப்பு அடித்தட்டு மக்களுக்குத் தரப்பட வேண்டும். இடஒதுக்கீடு என்ற ஒற்றை நிலையால் அரசியல் விவாதங்கள், மோதல்கள் உண்டாகலாம். முஸ்லிம்களுக்குப் பெரும் பலன் உண்டாகாது.முஸ்லிம்களுக்கான இடத்தை உறுதி செய்ய அரசுத் துறைகளும், தனியார் நிறுவனங்களும் கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற் பயிற்சி, தொழில் துவங்க உதவி ஆகிய பகுதிகளில் வழங்க முன்வர வேண்டும். இதுவே நாட்டின் வளர்ச்சிக்கும் துணை புரியும்.முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும், பழங்குடி மக்களும், பிற்படுத்தப்பட்டோரும் காலம் காலமாக அனுபவித்து வரும் சமத் துவமின்மையை ஒழிக்க அரசு சமத்துவ வாய்ப்புகளைத் தாமதமின்றி கல்வித் துறையின் அனைத்து நிலைகளிலும் உருவாக்குவது நாட்டின் அமைதியான, விரைவான முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை.
பேராசிரியர் சுபவீயின் நேர்காணலை முன்வைத்து:
சில நேரங்களில் சில மனிதர்கள்..........
புதியமாதவி, மும்பை

காவிகளுக்கு நடுவில் மஞ்சள் துண்டு மேடை ஏறும்போதெல்லாம் புருவங்கள் உயர்ந்த காலங்கள்மாறிவிட்டது. அண்மையில் காவியுடையுடன், வெள்ளை உடையுடன் வந்தவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்துஅவர்களுடன் ஆன்மீகம் பேசாமலும் அவர்கள் இவருடன் அரசியல் பேசாமலும்காமிராவின் ஒளிச்சேர்க்கையில் புன்னகைத்த தருணங்கள் யாருக்கும் அதிர்ச்சியைத் தரவில்லை.ஏன் வீட்டிற்கு வந்தவரின் கால்களின் விழுந்து குடும்பத்தினர்வணங்கியதும் கண்டு யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.என்றைக்கு திருமூலரின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமந்திரத்தைத் திருடி தனதாக்கிக் கொண்டார்களோ அன்றைக்கே இந்தக் காட்சிகளுக்கான வசனங்களை எழுதிவிட்டார்கள்!1980களில் என் போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்கும் போது தலையில் வைத்துக் கொண்டாடிய எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன்.
1960 களில் அவருடைய கதைகளுக்காகவேபத்திரிகைகளைக் காத்திருந்து வாங்கிச் சென்றவர்கள் உண்டு என்று சொல்வார்கள்.அப்போதும் சரி எப்போதும் அவர் திராவிடக் கட்சிகளை, கருத்துகளை, தலைவர்களை, எழுத்துகளைசகட்டுமேனிக்குத் திட்டி இருக்கிறார். அன்றைக்கு அவருக்கு எவ்வளவு பெரிய திராவிட அமைப்பிலிருந்தும் விருதுகளோ பரிசுகளோ அறிவித்திருந்தாலும் 'என் படைப்புகளுக்கு விருது வழங்கும் தகுதி இவர்களுக்கு இருக்கிறதா?' என்ற கேள்வியை முன்வைத்து அவருக்கே உரிய தொனியில் கம்பீரமாக குரைத்திருப்பார்! ஞானபீட விருது வாங்கியவருக்கு முரசொலிஅறக்கட்டளையின் விருது வழங்கப்பட்ட போது 'அடடா இப்போது யாருக்கு தகுதி கூடி விட்டது' என்பது தெரியாமல் இலக்கியவாதிகள் தலைமயிரைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம்!இந்த இரண்டு காட்சிகளையும் காணும்போது இவர்களுக்கு நடுவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் இசைஞானி இளையராஜா.
எனக்கும் கூட அந்தக் கலைஞன் குறித்து சில வருத்தங்கள் இருந்தது. சில இன்னும் இருக்கிறது. இசைஞானி இளையராஜா அவர்கள் தந்தை பெரியாரின் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறியவுடன் வருத்தப் பட்டவர்களில் நானும் ஒருத்திதான். உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஆண்டுவிழாவில் (19-11-2006)சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள மும்பை வந்திருந்த சுப.வீர பாண்டியன் அவர்கள்பொதிகைமைந்தன் மும்பை தமிழ் டைம்ஸ் நாளிதழுக்காக கண்ட நேர்க்காணலில் இது குறித்த கேள்விக்கு பதில் சொல்லும்போது" இளையராஜா அப்படி சொல்லியிருப்பாரானால் அவர் மீது கோபப்படுவதை விட அவருக்காக வருத்தப்படுவதற்குத் தான்கூடுதல் இடம் இருக்கிறது. இளையராஜா போன்றவர்களும் நம்மைப் போன்றவர்களும் இன்றைக்கு சமூகதளத்தில்இந்த இடத்தில் இருப்பதற்கே தந்தை பெரியார்தான் காரணம். அந்த நன்றியுணர்ச்சியை இளையராஜாவும் பிறரும்மறந்து விடக் கூடாது.
நான் ஒரு செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும். 1924ம் ஆண்டு வைக்கம் போராட்டம்பற்றி அய்யா பெரியார் அவர்கள் எழுதுகிற போது குறிப்பிட்ட செய்தி இது.'வைக்கத்திலிருந்து போராட்டத்திற்கு தலைமையேற்க வரும்படி எனக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது நான் சுற்றுப் பயணத்திலிருந்தேன். ஈரோட்டுக்கு வந்த அந்தக் கடிதம் ரீடேரக்ட் செய்யப்பட்டு, மதுரை மாவட்டம் போடிக்கு அருகிலிருந்த பண்ணைபுரம் என்ற கிராமத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிற போது அந்தக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது' என்று பெரியார் எழுதியிருக்கிறார்.கண்டிப்பாக இளையராஜா அப்போது பிறந்திருக்க முடியாது.
இளையராஜா பிறப்பதற்கு முன்பே அவர் ஊருக்காகவும்அந்த மண்ணுக்காகவும் அந்த மக்களூக்காகவும் 1924ல் பண்ணைபுரத்தில் நின்று பிரச்சாரம் செய்தவர் தந்தைபெரியார் என்கிற உண்மை இளையராஜாவுக்குப் புரியுமேயானால் பெரியார் திடலுக்கு வந்த போது பெரியார் சிலைக்கு மாலை போடமாட்டேன் என்றோ, பெரியார் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் ஒரு நாளும் சொல்லியிருக்க மாட்டார்" என்று சொன்னார்.இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தால் அதை யாரும் விமர்சனமாக்கியிருக்க முடியாது. திரைப்படங்களுக்கு இசையமைத்தல் இளையராஜாவின் தொழில். அவ்வளவுதான்.
தன் தனிப்பட்ட கொள்கைகளைஎவரிடமும் சொல்லி அதன் மூலம் தனக்கான ஓர் அடையாளத்தையோ இல்லை ஒரு கூட்டத்தையோ உருவாக்கவும் இளையராஜாவுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் அகமும் புறமும் ஒன்றாக வாழும் ஓர் அசல்மனிதனின் வாழ்க்கை. அரிதாரங்கள் பூசி வெளிச்சங்களுக்கு நடுவில் வெவ்வேறு முகங்களுடன் நடிக்கும் திரையுலகிலும்இரட்டை வேடங்கள் போட்டு நடிக்கத் தெரியாதவராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் அவருடையதிரையுலக வாழ்க்கை. இன்னும் சொல்லப்போனால் தான் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்து சித்தாந்தத்திலிருந்து எதற்காகவும் எந்த இடத்திலும் எவர் பொருட்டும் தன்னைத் தடம் மாற்றிக்கொள்ளாத பேராண்மை.
பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்ததன் மூலம் தன் சித்தாந்த தன்மானத்தை நிலைநிறுத்திக் கொண்டு,தன் சுயமிழக்காமல் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார் இசைஞானி இளையராஜா.இது தானே தன்மானம், இதுதானே சுயமரியாதை.இளையராஜாவிடம் வாழ்வியலாகிவிட்ட தன்மானம், சுயமரியாதைக் கருத்துகள் தந்தை பெரியாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் சரிந்து நீர்த்து போய்விட்ட காட்சிக்காகபேராசிரியர் சுபவீ போன்றவர்கள் கோபப்படாவிட்டாலும் வருத்தப்படுவார்கள் என்று நம்புகிறோம்.

புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)

தமிழ் ஈழம் இந்தியப் பிரதமரின் நிலை! - சுப.வீயுடன் நேர்காணல்

தமிழ் ஈழம் இந்தியப் பிரதமரின் நிலை!
திருப்புமுனை தில்லிப் பயணம் குறித்து சுப.வீயுடன் நேர்காணல்
அன்பு தென்னரசன்

தமிழுணர்வாளர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடையக்கூடிய ஒரு சந்திப்பு அண்மையில் இந்தியத் தலைநகரில் நடைபெற்றது. ஆம்! இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களான தமிழீழப் பகுதிகளின் பிரதிநிதிகள் ஐவரை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். தமிழீழ மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அவர்கள் படும் இன்னல்கள் குறித்துத் தமிழீழப் பிரதிநிதிகள் விளக்கினர்.பிரதமரைச் சந்திப்பதற்கு முன்னதாகத் தமிழக முதல்வரை அவர்கள் சந்தித்தனர்.

இந்த இரு சந்திப்புகளின் போதும் அவர்களுடன் இருந்தவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தடைபல கடந்து, இந்தியத் தலைநகரில் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதைத் தாகம் வாசகர்களுக்கு விரிவாக விளக்குகிறார் சுப.வீ.தாகம்: ஈழத்தமிழர் பிரதிநிதிகளை இந்தியப் பிரதமர் மிக நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்கான பணிகள் எப்படி நடைபெற்றன? எப்படி இது நிறைவேறிற்று?சுப.வீ- இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற முறை வந்திருந்தபோதே தமிழக முதல்வரையும் இந்தியாவின் தலைமை அமைச்சரையும் சந்திக்க முயற்சி செய்தார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன். அப்போது ஏதோ சில காரணங்களால் அந்தச் சந்திப்பு நடைபெறாமல் போய்விட்டது. இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும் என்று ஏனைய தமிழுணர்வாளர்களைப் போல நானும் விரும்பினேன்.

பின்னர், முதல்வரை நான் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தபோது, இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற தயக்கத்துடனும் குழப்பத்துடனும் இருந்தேன்.அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில், அவர்களைச் சந்திப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார்.முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதன் மூலம் சிங்கள அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க முடியும் என்பதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் முயற்சியினால் நான் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து கடிதம் பெற்று முதல்வரிடம் சேர்ப்பித்தேன்.அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 20ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அவர்கள் சந்தித்து 1 மணி நேரம் உரையாடினார்கள். முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பின் காரணமாக டிசம்பர் 22ஆம் நாளன்று டெல்லியில் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். இரண்டு சந்திப்புகளும் பயனுள்ளதாக அமைந்தன.தாகம்- பிரதமரிடம் நாம் கேட்டது என்ன? அவர் எதைச் செய்வதாகச் சொன்னார்? எதை மறுத்தார்?சுப.வீ- பொதுவாக ஒரு நாட்டின் தலைமையமைச்சர்; அப்படியெல்லாம் ஒரு பேச்சுவார்த்தையில் உறுதி மொழிகளை வழங்க முடியாது என்பதை நாம் அறிவோம். இலங்கைநாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதைச் சொன்னார்கள்.

இந்திய அரசு, சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.குண்டுகள் போட்டுத் தமிழர்களைக் கொல்வதை நிறுத்தச் செய்யவேண்டும். ஏ-9 நெடுஞ்சாலையைத் திறக்கச் செய்யவேண்டும்.வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இவர்களின் குமுறல்களையும் கோரிக்கைகளையும் பிரதமர் பரிவோடு கேட்டுக்கொண்டார். இதன்பின் சில செய்திகளைச் சொன்னார். வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை.அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலேயே கூறப்பட்டிருக்கிறது என்றார்.

பிறகு, இலங்கையினுடைய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கா வண்ணம் தமிழ் மக்களுடைய கண்ணியம், சுய மரியாதை, பாதுகாப்பு ஆகியவை போற்றிப் பாதுகாக்கப்படும் என்பதில் இந்திய அரசு கவனமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இப்படித்தான் அவர்கள் செய்திகளைச் சொல்ல முடியும் என்பதை நாமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் அவர்கள் இந்தச் சந்திப்பு முடிந்து எங்களிடம் பேசுகிற போது, விடுதலைப்புலிகளுக்கும் இந்தியஅரசுக்கும் தமிழக அரசின் ஊடாக நீங்கள் ஒரு பாலமாகச் செயல்படுங்கள் என்றார்.எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரிக்காமல் இப்படிச் சொல்வதே நல்ல அறிகுறிதான்.

இந்த சிறு அசைவு மேலும் மேலும் பெருகி, பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னைப் போன்ற தமிழர்களின் விருப்பம்.தாகம்- உங்கள் மூலமாக இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்கச் செய்ய முதல்வர் செய்த ஏற்பாடு என்பது, வைகோவையும் பழ.நெடுமாறன் அவர்களையும் இந்தப் பிரச்சினையிலிருந்து புறந்தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே?சுப.வீ- அடிப்படையற்ற தகவல்களுக்கு நம் நாட்டில் எப்போதும் பஞ்சமிருக்காது. முதல்வர் சொல்லி நான் இந்தச் செயலில் ஈடுபட்டேன் என்பது அடிப்படையில் உண்மையில்லை. நவம்பர் 13-இல் முதல்வரைச் சந்தித்தபோது நான்தான் இந்தக் கோரிக்கையை முதலில் வைத்தேன்.அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வளவுதான். ஆனால், எல்லாவற்றுக்கும் கலைஞர்தான் பின்னணியில் இருக்கிறார் என்பது போன்ற ஒரு மாயை பல நண்பர்களிடம் இருப்பதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் இதைச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.

அய்யா நெடுமாறன் அவர்கள்தான் எனக்குள் ஈழ உணர்வை உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகள் ஆதரவு எண்ணத்தை என்னுள் செதுக்கியவரும் அவர்தான். அதனால், நெடுமாறன் அய்யா அவர்களை முந்திக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்று நான் எண்ணியது கிடையாது. அய்யா அவர்கள் செய்திருந்தால் இன்னும் இதற்கு வரலாற்றுச் சிறப்புக் கிடைத்திருக்கும் என்றே கருதுகிறேன்.அவர்களுக்குள்ள அரசியல் காரணங்களால் அவர்களால் நேரடியாக முதல்வரைச் சந்திக்கின்ற வாய்ப்பு அமையாமல் போய்விட்டது என்றே நான் நினைக்கிறேன். எனக்கு அந்த வாய்ப்பு இருந்ததால், அதனைத் தமிழீழ மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

ஜெயலலிதாவை ஆதரிக்கிற வைகோவின் இன்றைய அரசியல் நிலைப்பாட்டில் நான் முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறேன் என்றாலும் அவருடைய ஈழ ஆதரவு நிலையை எப்போதும் நான் சந்தேகித்ததும் இல்லை. குறை சொன்னதுமில்லை.யார் மூலமாக நடந்தாலும் நல்லது நடந்திருக்கிறது என்று நினைக்கவேண்டும். தொடர்பே இல்லாமல் கலைஞர் மீது குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் சரியானதாக இருக்காது.

பெரியார் பேசுகிறார்

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு?

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான்.

அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான்.

வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான்.

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)

அப்படிப் போடு

"அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். ஒரே குரலில் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கு தான் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. இதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான். காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னையையும் இப்படித் தான் அரசியலாக்கினர். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அனைத்து பிரச்னைகளிலும் அப்போதிருந்தே இப்படித் தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்" (பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்)

அமெரிக்காவின் பிறப்பே வன்முறையில்தான்...

அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொடுங்கரங்களின் துணையோடு தூக்கிலிடப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம், ஜனவரி 9-ந் தேதியன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழ் முழக்கம் நடத்திய இக்கூட்டத்தில் ஒலித்த வீர முழக்கங்களிலிருந்து...

மிழ் முழக்கம் சாகுல் அமீது:போராளிகள் கொச்சைப்படுத்தப்படுவதும், பெருமைப்படுத்தப்படுவதும் அமைகின்ற அரசுகளைப் பொறுத்தது. சதாம் உசேன் மாபெரும் போராளி. எதேச்சதிகார அரசுகளை எதிர்த்து நின்ற மாவீரன். அவரைக் கோழைத்தனமாக கொலை செய்திருக்கிறார்கள். வரலாற்றில் முதன்முறையாக கோழைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு மாவீரனைக் கொன்ற கோழைகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை உடனே எதிர்க்கின்ற நாடுகள் இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை இப்படியே கழிந்துவிடாது.

வழக்கறிஞர் அருள்மொழி:பாக்தாத் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் நாகரிகம் வளர்ந்திருந்த நகரம். இப்படியிருந்த மண், இரத்தக் கோலத்திற்கு ஆளாக்கப்பட்டது. இதற்குக் காரணமான அந்த ஏகாதிபத்தியத்தை நாம் மவுன சாட்சியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். `சதாம் உசேன் அந்த வழக்கை எதிர்க்கொண்ட விதமும், அந்த வழக்கு நடந்து முடிந்து அவர் தூக்கு மேடையை எதிர்க்கொண்டதும், என் முகத்தை மூடவேண்டாம், நான் எப்படி மடிகிறேன் என்பதை உலகம் பார்க்கட்டும்' என்று சொன்ன அந்தத் தீரமும் வரலாற்றில் நிச்சயமாக எழுதப்படும். அந்த மனிதன் நிச்சயமாக மாவீரன்தான். அவருக்கு நம் வீரவணக்கம்.

சி. மகேந்திரன்:ஈராக் நாட்டிலே நடைபெற்ற கருத்து மோதல்கள், அந்த மக்களுக்கிடையிலான பிரச்சினைகள் இவற்றுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பாரசீக வளைகுடாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இன்றைக்கு அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளெல்லாம் சீல் வைக்கப்பட்டுள்ளன.அடுத்தவன் விரலைப் பிடித்து, நெருப்பில் சுட்டு, அது சுடுகிறதா இல்லையா என்றுபார்க்கின்ற பண்புடையதாக இருக்கிறது அமெரிக்கா. அதற்குப் பலியானவர்தான் சதாம். அவர் மன்னர் குடும்பத்தவர் இல்லை. பழங்குடி மனிதர். அந்த பழங்குடி மனிதர்களுக்கே உரிய வீரத்துடன் போராடினார், உயிர் நீத்தார்.

திருமாவளவன்:சதாம் உசேனைப் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்தபோது, உலக நாடுகளெல்லாம் வேடிக்கை பார்க்கின்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டனவே... ... விரைந்து வேகமாக உலக நாடுகள் தலையிட்டிருந்தால் சதாமைப் பாதுகாத்திருக்க முடியுமோ என்ற ஆதங்கம் இருக்கிறது. அமெரிக்கா மட்டும் ஏன் அவசர அவசரமாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இங்குதான் அமெரிக்காவின் திருட்டுப் புத்தி இருக்கிறது. அவர்களின் கிரிமினல் புத்தி இருக்கிறது. ஏனென்றால் குர்தீஷ் மக்கள்மீது சதாம் ஆட்சியில் நடத்தப்பட்ட ரசாயண ஆயுதத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது அமெரிக்காதான். அந்த வழக்கை விசாரித்தால், உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும், முகமூடிகிழிந்துவிடும் என்பதால்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுசேரவேண்டிய ஒரு சவாலான காலகட்டம் உருவாகியிருக்கிறது.

பேராசிரியர் சுப.வீ :அமெரிக்காவின் பிறப்பே வன்முறையில்தான். அன்று செவ்விந்தியர்கள் தங்கள் மண்ணில் வாழ அனுமதி கோரி போராடினார்கள். எங்கிருந்தோ வந்த இவர்கள் அவர்களை விரட்டினார்கள். இவர்களிடம் துப்பாக்கி இருந்தது, பீரங்கி இருந்தது. வீரம் செறிந்த அந்தச் செவ்விந்தியர்களிடம் இரும்பினால்கூட அல்ல, மூங்கிலால் ஆன ஈட்டிதான் இருந்தது. அதைக் கொண்டுதான் அவர்கள் அமெரிக்காவை எதிர்த்துப் போராடினார்கள். செவ்விந்தியர்களின் தொடர்ச்சியாக இன்றைக்கும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடி சதாம் மாண்டு போயிருக்கிறார். அமெரிக்காவின் வரலாறு முழுவதும் வன்முறைதான். அந்த வன்முறையினுடைய இன்னொரு கட்டம்தான் சதாம்.

ஜவாஹிருல்லா :ஒரு மாபெரும் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அத்தனை கட்சியினரும், அதன் தலைவர்களும் இதனைக் கண்டித்து கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒரேயொரு கட்சி மட்டும் கருத்து சொல்லவில்லை. அதுதான் பி.ஜே.பி. ஏனென்றால் பி.ஜே.பியினுடைய எஜமான் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான். இதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால், சிறுபான்மை-பிற்படுத்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஆதரவில் ஆட்சியில் அமைந்திருக்கக்கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாடு நம்மை வெட்கப்படவைக்கிறது. சதாம் படுகொலைக்கு இந்திய பிரதமர் மவுன சாட்சியாக இருக்கிறார். அவருக்கு இன்னும் உலக வங்கியில் வேலை செய்வதாக நினைப்பு போலும். அமெரிக்காவுக்குக் கூஜா தூக்கியிருக்கிறது இந்திய அரசு.

அன்பு தென்னரசன் :அரபு நாடுகளிலேயே அதிக எண்ணெய் வளம் உடையதாக இருக்கின்ற ஈராக்கை ஆக்கிரமித்து, அங்கிருக்கும் எண்ணெயைத் திருடுவதற்காக அமெரிக்கா என்ற திருடன் செய்த வேலைதான் இந்தக் கொலை. சதாம் உசேன் இந்தத் திருட்டுத்தனத்திற்கு எதிராக இருந்தார் என்பதால்தான் ஒரு பேட்டை ரவுடியைப் போல செயல்பட்டு, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றிருக்கிறது அமெரிக்கா என்னும் வல்லாதிக்கம்.

நன்றி:கீற்று இணையதளத்திற்கு

இதழ்களின் பாலியல் வன்முறை

இதழ்களின் பாலியல் வன்முறை பூவிழியன்

ஊடகங்கள் ‘கருத்தியல் பரிமாற்றக் கருவிகள்' என்ற நிலையிலிருந்து மாறி வியாபாரம் லாபம் முதலிய இரண்டு சுயநலப் புள்ளிகளை மையப்படுத்தி இயங்கத் தொடங்கி உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு உத்தியைக் கையாள வேண்டும் என்று திட்டமிட்ட ஊடகம் இறுதியாக செக்ஸ் என்கிற தளத்தில் சிந்தனையைச் செலுத்த ஆரம்பித்ததுபொதுக் கண்ணோட்டத்தில் பாலியல் மருத்துவம், செக்ஸ் விழிப்புணர்வு, மருத்துவத் தொடர் என்கிற அடையாளங்கள் இருந்தாலும் உள்ளீடான பார்வையில் உணர்வுத் தூண்டலை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிப்பதற்கான ஒரு நுட்பமான செயலாகத்தான் இது தென்படுகிறது. இன்றைய நிலையில் வெகுஜன இதழ்களாக இருந்தாலும் சரி அல்லது குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடிய சிறிய இதழ்களாக இருந்தாலும் சரி அவை செக்ஸ் தொடர் எழுதுவதைக் கட்டாயமாக வைத்திருக்கிறன. இதன் எதிர்விளைவான இளைய தலைமுறையின் பண்பாட்டுச் சீரழிவு பற்றி இவ்விதழ்கள் கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.நவம்பர் 10, 2004 இந்தியாடுடேயின் அட்டையில் ‘இன்டர்நெட் செக்ஸ்' இந்திய ஆபாச அலை, என்று பெரிய எழுத்துக்களிலும் அதன் கீழே சிறிய எழுத்துக்களில் இன்டர்நெட்டில் இந்தியப் பெண்களின் ஆபாசப் படங்களுக்கு உலக அளவில் கிராக்கி கூடுகிறது என்று கவர்ஸ்டோரியின் தலைப்பும், ஆபாசமாக ஒரு பெண்ணின் படத்தையும் வெளியிட்டிருந்தது. அதில் சில இணைய தளங்களின் பெயரைக் குறிப்பிட்டு எல்லா இணைய தளங்களுமே, இந்தியப் பெண்களை ஒட்டுத் துணியில்லாமல் காண்பிப்பதாக தம்பட்டமடித்துக் கொண்டது. இந்தத் தளங்களுக்கு சந்தாதாரராகி அவற்றைப் பேரோடும், புகழோடும் வளமாக வாழ வைப்பதும் இந்தியர்கள் என்று அந்த இதழ் இந்தியர்களின் பெருமையை வேறு வெளியிட்டது.இணைய தளங்கள் எப்படி இளைஞர்களை ஈர்க்கிறது என்பதைக் கூறி, எங்கோ சிலரால் மட்டும் பயன்படுத்தப்பட்ட செக்ஸ் இணையத் தளங்களுக்கு கவர் ஸ்டோரி எழுதுவதன் மூலம் பரவலாக்குகிற இந்தப் போக்கு இளைஞர்களை எந்தவிதமான மாற்றத்துக்கு உட்படுத்தும் என்பதை அந்த இதழ் அறியாதா என்ன? வணிகநோக்கு பெரிதாகும்போது சமூகப் பொறுப்பு காணாமல் போகிறது. நக்கீரன் நவம்பர் 13-16-2005 இதழில் ‘அதில்.. யார் முதலிடம்? கலக்கும் சர்வே' என அட்டையில் ஒரு தலைப்பு பாலியல் விழிப்புணர்வு பற்றிய கணக்கீடாம் அது. அதில் யார் முதலிடம் என்று போடுவதைத்தான் விழிப்புணர்வாகக் கருதுகிறது. மேலும் இங்கே செக்ஸ் பற்றிய தவறான புரிதலோடு வாழ்பவர்களே அதிகம் எனும் இந்தக் கட்டுரை எத்தனை பேருடன் உறவு? என்கிற கொச்சைத்தனமான சிந்தனையைப் பரவலாக்க முயற்சித்தது.நக்கீரன் இதழைப் பொறுத்தவரை செக்ஸ் தொடர்களின் வழிகாட்டி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பாலியல் பிரச்சனை மையப்படுத்தி கதை எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அரசியல் இதழ்கள் என்றால் பொதுவாக வயதானவர்கள் படிக்கிற ஒரு நிலையை மாற்றி இளைஞர்களையும் படிக்க வைக்கத் தூண்டிய மாற்றம் அரசியல் ஏடுகளில் எழுதப்பட்ட செக்ஸ் தொடர்களுக்கும் பொருந்தும். நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற வார இதழ்களை வாங்கும் இளைஞர்கள் அதிகமானோர் செக்ஸ் தொடர்களைப் படிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அப்படியொரு சூழலுக்குள் இந்த இதழ்கள் இளைஞர்களைத் தள்ளியிருக்கிறது. அரசியல் இதழ்களைக் கூட பதுக்கி வைத்துப் படிக்கிற பழக்கத்தை இது போன்ற தொடர்கள் உருவாக்கி வருகிறது.தொடக்கத்தில் நக்கீரன் மாத்ருபூதத்தையும் ஜீனியர் விகடன் நாராயண ரெட்டியையும் வைத்து செக்ஸ் தொடர்கள் எழுதத் தொடங்கின. அதனால் விற்பனை கூடவே நக்கீரனில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் இடம் பெற ஆரம்பித்தது இரண்டாயிரத்து இரண்டாமாண்டில் திரையுலகில் நடிகைகள் நடிகர்களுடன் உல்லாசமாக அலைந்தது பற்றியும் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாகக் கூறித் தயாரிப்பாளர்கள் செய்த பாலியல் சம்பவங்களையும் தொகுத்து ‘நடிகையின் வாக்குமூலம்' எனும் தலைப்பில் தொடராக பல மாதங்கள் வெளிவந்தது. நடிகைகளின் பாதிப்பை வெளிப்படுத்தக் கூடிய தொடர் என்பதற்கு மாறாக சமூகச் சீரழிவை ஏற்படுத்தக் கூடிய தொடராக அது இருந்தது. 2005ல் மீண்டும் "நடிகைகளின் கதை'' என தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டது. இதற்கு நடிகைகளோ அல்லது நடிகர் சங்கமோ எந்தவிதமான எதிர்ப்பையும் சிறிது கூடக் காட்டவில்லை."ஆண் பெண் கவர்ச்சியின் ஆதி மூலத்தைக் தேடி ஆக்கப்பூர்வமான ஓர் அறிவியல் பயணம்'' எனும் வரிகளுடன் டாக்டர். நாராயணரெட்டி தற்பொழுது உயிர் எனும் தொடரை வார இதழ் ஒன்றில் எழுதி வருகிறார். அத்தொடரில் வெளியிடப்படும் படங்கள் அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதற்கு பதிலாக இளைஞர்களின் உணர்ச்சி மீறலுக்கே வாய்ப்பாக அமைகிறது.வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் வார இதழாக ராணி இருந்தது. அதிலும் கூட இப்போது மன்மத இரகசியம் எனும் பாலியல் தொடரும், அது தொடர்பான பாலுறவுக் காட்சிப்படங்களும் அதிக அளவிலான ஆண்களையும் அவ்விதழை விரும்பி வாங்க வைத்திருக்கிறது. இதழின் வணிக நோக்கும் நிறைவேறிவிட்டது. வார இதழ்களின் நிலை இவ்வாறிருக்க தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்களும் இதற்கெனப் பக்கங்கள் ஒதுக்கத் தொடங்கிவிட்டது. தினத்தந்தியின் ஞாயிறு இணைப்பில் ‘அந்தரங்கம் இது அந்தரங்கம்' ஒரு பெண்ணின் ரகசியங்கள் எனும் கேள்வி-பதில் தொடரும், தினமலரின் சைக்காலஜி பகுதியில் ‘குழந்தை எப்படி பிறக்குது?' என்ற தொடரும் ஆரம்பிக்கப்பட்டு வணிகப்போட்டியில் சமூக அக்கறையைத் துறந்து நிற்கின்றன. இதே வரிசையில் ஏராளமான வார இதழ்களையும் பட்டியலிட முடியும். இதில் சர்வே என்கிற பெயரில் இந்தியா டுடேவின் அத்துமீறல் எல்லைதாண்டி விட்டது.செக்ஸ் விழிப்புணர்வு மருத்துவம் என்பது அறிவியல் கோட்பாடுகளை உண்மைகளை தெளிவுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதுபற்றிய பயத்தை நீக்குவதாகவும் அமைய வேண்டும். மாறாக, இளைஞர்களை உணர்ச்சிகளின் தளத்தில் உசுப்பி விடக் கூடியதாக இருக்கக் கூடாது. மனிதனைத் தவறுசெய்யத் தூண்டக் கூடாது. ஆனால், இன்று வரக்கூடியவை எல்லாம் இளைஞர்களை முடக்கக் கூடியதாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செக்ஸ் என்ற சொல்லுக்குள் அடிமையாகக் கிடக்க வைப்பதாகவும் இருக்கிறது.கணினியுகத்தின் இணையத் தளங்களோடு போட்டியிடும் வண்ணம் பாலியல் வன்முறை தற்போது இதழ்களிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாறி வருகிறது. செக்ஸ் விழிப்புணர்வு தேவைதான் மறுக்கவில்லை. ஆனால், அது வாசகர்களைப் பாலியல் ரீதியாகக் கவருவதற்கான சூத்திரமாக அமையக் கூடாது. வியாபாரத்திற்கும் லாபத்திற்காகவும் செக்சை விற்பனைக் கருவியாகப் பயன்படுத்துகிற தன்மை இதழ்களின் கேவலமான போக்காகத்தான் வெளிப்படும். ஊடகங்கள் கருத்தியல் பரிமாற்றக் கருவி என்கிற நிலையில் இருந்து காமக்கருவியாக மாறுவது கண்டிக்கத்தக்கது.

Monday, February 12, 2007

நடுத்தெரு நாராயணி


நடுத்தெரு நாராயணி

கலைஞர் கருணாநிதி



விடிந்தால் தீபாவளி. இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத்தெரு - வீட்டுக்கு வீடு - போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொளுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்பவாதிகளின் பச்சோந்தி உள்ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. ஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல அவுட் வாணங்கள் ஆகாயத்தில் கிளம்பின. ஆனாவுக்கு ஆனா - கானாவுக்கு கானா என்ற விதத்திலே எழுதப்படும் அர்த்தமற்ற அடுக்குச் சொல் வசனம் போலச் சீனவெடிகள் - ஊசிப்பட்டாசுகள் - தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டன. புதிய ஆடைகளைக் கண்டு பூரிப்புத் தவழ ஓடி ஆடினர் சிறுவர், சிறுமியர். தலைத் தீபாவளிக்கு வந்திருக்கும் தம்பதிகள், உபசாரங்களுக்கும், கிண்டல் உபத்திரவங்களுக்குமிடையே உல்லாசத்திருக்கும் அந்த இரவில், நாராயணி மட்டும் சோகத்தின் நிழலாகத் தன் வீட்டில் அமர்ந்திருந்தாள்.


‘தீபாவளி தமிழரின் திருநாளல்ல: தமிழரின் இறந்த நாளைக் கொண்டாடும் ஆரியப் பண்டிகை. கருத்துக்கு ஒவ்வாத கதை அளப்பு. அதை நமது பண்டிகையாகக் கொண்டாடிக் குதூகலிப்பது குருட்டுக் கொள்கை. ஆகவே, அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதல்ல நாராயணியின் எண்ணம்! அவள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெற்றவளுமல்ல. போட்டி போட்டுக் கொண்டு புராணக் குட்டையிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவளும் ஒருத்திதான். ஆயினும், அவள் தீபாவளி கொண்டாடவில்லை.காதைத் தொட முயலும் கண்களும்; காண் பவரைக் கவரும் விதத்தில் அமைந்த உடற்கட்டும் பெற்ற நாராயணி தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழாவில் கலந்து மகிழும் ஊராரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.வீதியிலே கிருஷ்ணன் - சத்தியபாமா விக்ரகம் அலங்கரிக்கப்பட்ட அழகான ரதம் பவனி வந்து கொண்டிருந்தது. ‘வீரன்’ கிருஷ்ணன் நரகாசுரனிடம் தோற்று மயங்கும் வேளையிலே, தனது கணைகளைக் கொண்டு அசுரனை அழித்தாள் பாமா என்பதுதானே புராணம்! சங்குசக்ராயுத பாணியான விஷ்ணுவின் அம்சம் பரமாத்மாவே விழுந்து விட்டபோது - அவரின் தேவி, அசுர சிங்கத்தின் உயிரை அணைத்து விட்டாள் என்றால் ஆச்சர்யமாகத்தானிருக்கும். எக்கணை வீசினாளோ; என்ன வக்கணை பேசினாளோ; எப்படியோ தேவியின் தியாகத்தால் தேவர்களின் எதிரி ஒழிந்தான் என்று திருப்தி கொண்டனர் பக்தர்.அந்தப் பக்தகோடிகள் பரந்தாமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடி, அவனையும் அவன் பிராட்டி பாமாவையும் ரதத்திலே வைத்துத் தெரு சுற்றினர்.


வெற்றியின் சூட்சமம் தெரியாத விளையாட்டுப் பிள்ளைகளும், பரமாத்மாவுக்கு ‘ஜே’ போட்டனர். ஊர்ப்பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நாயன வித்வான்கள் தங்கள் திறமையைப் பொழிந்தனர். வீடெங்கு முள்ள பெண்டிரெல்லாம் ஆயர்பாடி கண்ணனுக்கு ஆரத்தி எடுத்து ஆனந்தப்பட்டனர். ஆடினர், பாடினர்.ஆனால் நாராயணியோ ஆடவுமில்லை; ஆரத்தி எடுக்கவுமில்லை. நடக்கும் வைபவங்களைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். பரமாத்மாவின் ஊர்வலம் அவள் வீட்டைத் தாண்டிப் போயிற்று. அந்த வீட்டிலிருந்து யாராவது வந்து பகவானுக்குக் காணிக்கை செலுத்துவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். யாரும் வரவில்லை.ரதம் போகும் திக்கைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள் நாராயணி. ரதத்திலே நரகாசுரவதமே சித்தரிக்கப் பட்டிருந்தது. அந்தக் காட்சியை அவள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மலையெனத் தோள் படைத்த நரகாசுரனின் மார்பிலே ஒரு வேல் பாய்ந்திருந்தது. குகையெனத் திறந்த வாயோடு நிற்கிறான் அவன்.


அவனெதிரே கிருஷ்ணன் - மயங்கிய நிலையில்! பாமா - வேல் பாய்ச்சும் சாயலில்! இதுவே ரதத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த தீபாவளிக் காட்சி. அறிவுக்கு அணை கட்டி, இன உணர்ச்சியைத் தடுக்கப் பெரும் சுவரும் எழுப்பி வைக்கும் அந்தப் பண்டிகையில் தம்மை மறந்து பங்கெடுத்துக் கொண்டு, பரவசமுற்றனர் அந்த ஊரார். நாராயணியின் கண்களை விட்டு ரதம் மறைந்தது. வாணச் சத்தம் அவள் காதைத் துளைத்துக் கொண்டுதானிருந்தது. ரதத்திலே அவள் கண்ட நரகாசுரவதக் காட்சி. அவள் நெஞ்சை விட்டு அகலவில்லை. நினைவுகள் அலைமோதின.நடுத்தெருவிலேதான் நாராயணியின் வீடு. நடுத்தெருவிலே வீடுகட்ட நகரசபையார் எப்படி அனுமதித்தார்கள்? நகரசபையாருக்கு நாராயணியின் மீது இவ்வளவு அனுதாபம் விழக் காரணம் என்ன என்றெல்லாம் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. அவள் வீடு இருந்த தெருவுக்குப் பெயரே நடுத்தெரு.நாராயணி நடுத்தெருவிலே, நடுத்தரமான குடும்பத்திலே நாலுபேர் அண்ணன் தம்பிகளுக்கிடையே பிறந்தவள்.


ஐந்து மக்களையும் விட்டு விட்டுப் பெற்றோர் விடைபெற்றுக் கொண்டனர். மாயூரம் காவிரியாற்றிலே துலாமுழுக்கு ஆடுவதற்காகச் சென்ற சகோதரர்கள் நால்வரும் திரும்பி வராமலே போய் விட்டனர். இளைய தம்பி, ஆற்றுச் சுழலிலே சிக்கிக் கொள்ள, அவனை விடுவிக்க ஒருவர்பின் ஒருவராக மூவரும் குதித்து, அனைவரும் நேரே ‘மோட்சலோகம்’ போய்விட்டனர் என்ற செய்தி மட்டுமே நாராயணிக்குக் கிடைத்தது.இந்தச் சோகச்சுமை அவள் தலையிலே விழும்பொழுது அவள் பருவக்கொடி! சிற்பியின் கைத்திறனே உயிர் பெற்றது போன்ற சிந்தை கவர் உருவம்! புருவம் - பருவம் - எல்லாமே, ஆண்களின் கருவமடக்கும் விதத்திலே அமைந்திருந்தன. அழகுச்சிலை! அற்புதப்பதுமை! தேன்மலர்! திராட்சைக்கொடி! ஆனால் அந்த வாசரோஜா வேலியின்றிப் - பாதுகாக்க யாருமின்றித் - தன்னந்தனியே வாடிக் கொண்டிருந்தது. “தந்தை, தாய், அண்ணன், தம்பி எல்லோரையும் விழுங்கிவிட்டு, இந்தப் பாவிக்கு மட்டும் பாழும் உயிரை ஏன் வைத்திருக்கிறாய்?” என்று அவள் பகவான் சந்நிதானத் திலே பலமுறை அழுதிருக்கிறாள்.அப்படி அழுவதற்காக அவள் ஆலயத்திற்குச் செல்லும் போதுதான் குருக்கள் கிருஷ்ணய்யரின் சந்திப்பு ஏற்பட்டது.


கோயில் குருக்கள் என்ற போதிலும் மிடுக்கான நடையுடை பாவனைகள் உடையவர். கழுத்திலே அழகான தங்கச்சங்கிலி; அந்தச்சங்கிலியின் முனையிலே ருத்ராட்சக்காய்; இடுப்பிலே மயில் கண் வேட்டி, மேலே ஒரு வெண் பட்டுத்துண்டு; பி.ஏ. குடுமியுடன் கூடிய அமெரிக்கன் கிராப்பு - இவைதான் கோயில் குருக்கள் கிருஷ்ணய்யரின் அடையாளங்கள்! மறந்துவிட்டேன்; மன்னிக்கவும்; அன்றாடம் சலவை செய்யப்படும் பூணூல் உண்டு மார்பிலே! விபூதிப் பூச்சு உண்டு! விஷ்ணுவுக்கு விசேஷமான நாட்களிலே நாமமும் போடுவார்! பட்டையாக அல்ல; பக்குவமாக; சிறிய கோடாக சிங்காரம் கெடாமல்!வயதோ முப்பதுக்குமேல் இல்லை. இந்த ஒரு முதல் போதாதா - காதல் வியாபாரத்தை ஆரம்பிக்க? ஐம்பது அறுபது ஆனதுகளே, நரை மயிர் கருக்கும் தைலம் தடவிக்கொண்டு பொய்ப்பல்லால் புன்னகை புரிந்து, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று காதல் வாணிபம் நடத்தக் கன்னியரைத் தேடியலையும்போது, முப்பதே வயதான கிருஷ்ணய்யர் மட்டும் சும்மா இருப்பாரா? அதுவும் புறா வலுவிலே பறந்து வருகிறது, வட்டமிட்டுப் போகிறது என்றால், கேட்கவும் வேண்டுமா?நாள்தோறும் நாராயணி ஆண்டவன் சந்நிதியிலே கண்ணீர்த் துளிகளைச் சிந்தினாள்.


கிருஷ்ணய்யர், விபூதிப் பிரசாதம் அளித்து வந்தார். இந்த விஷயம் பல நாட்கள் மௌனமாகத்தான் நடந்து வந்தது. மாலை எப்போது வரும்; அப்போது அந்த மயிலும் வருமே என்று பாதை மீது பார்வையை விரிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணய்யர். நாராயணி கடவுளின் முன்னே தினம் தினம் அழவேண்டிய காரணம் என்ன? குருக்களின் இதயத்தைக் குடைந்தது இந்தக் கேள்வி. அவளையே கேட்டு விடத் தீர்மானித்தார். ஆனால் அவள் வரும் நேரத்திலேதான் அந்தப் பாழும் பக்தகோடிகளும் ஆலயத்திற்கு வருவது வழக்கமாக இருந்தது. தனிமையில் அவளிடம் பேச அவருக்கு வாய்ப்பில்லாமலே போய் விட்டது.ஒருநாள் - சோமவாரம் - கோயிலில் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்பட்டன, நல்ல கூட்டம். கச்சேரிகள் வேறு. அந்த ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் காங்கிரசிலே சேர்ந்து விட்டதற்காக நடத்தப்பட்ட திருவிழா அது. கோயிலுக்கு எதிரேயுள்ள காளி மண்டபத்தில் ஆடுவெட்டிப் பலி கொடுத்துக் கள்ளுக்குடங்களும் வைத்துப் படைத்துக் காந்தியாரின் கொள்கைக்குப் பெருமை கொடுத்தார்கள். அதையொட்டிப் பெரிய கோயிலிலும் உயர்ந்த முறையிலே உபயம் நடத்தினார்கள்.அன்றையதினம் வழக்கம் போல் நாராயணி வந்தாள். காத்திருந்த அய்யரும் பூத்திருந்த மல்லிகை வந்துவிட்டதென மகிழ்ந்தார்.


பரதம் நடக்குமிடத்திலும், பாட்டுக் கச்சேரி நடக்கு மிடத்திலும் பக்தர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியிருந்தனர். நாராயணியோ கர்ப்பக் கிரகத்திற்குள்ளே நுழைந்தாள். தாமரை மொட்டுப்போல் கரங்கு வித்தாள். காமனை வெல்லும் விழி மூடினாள். இமை அணையைப் பிளந்துகொண்டு கண்ணீர் வெள்ளம் புறப்பட்டுக் கன்னத்தின் மேட்டிலே கிளைகளாகப் பிரிந்தது. ஆழ்ந்த பக்தியிலே மெய்மறந்து நின்றாள். “எனக்கு வழி காட்டு அப்பனே! என்னை மட்டும் உலகத்திலே ஜீவித்திருக்க ஏன் விட்டாய்? பெரிய குடும்பத்திலே தனி மரமாய் நின்று தவிக்கிறேனே; இது உனக்கு நியாயந்தானா?” என்று கதறினாள்.பிரார்த்தனை முடிந்தது. பிரசாதம் தர அய்யர் வந்தார். விபூதியை வாங்கி நெற்றியிலே இட்டுக்கொண்டாள். திரும்பினாள்.காய்ந்துபோன தொண்டையைக் கனைத்துக் கொண்டு அய்யர் ஏதோ பேச வாயெடுத்தார். நாக்கு எழவில்லை. கஷ்டப்பட்டுப் பேசியே விட்டார். நடுக்கத்தோடு! “ஏனம்மா தினந்தோறும் இப்படி கண்ணிலே ஜலம் விடறே?” இதைக்கேட்டதும் நாராயணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தானோ, ஒரு பருவமங்கை, வீட்டைவிட்டு வெளியே கிளம்புவதே தப்பு; கோயிலுக்கு வருவதால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.


ஆனால், அங்கே ஓர் ஆடவரோடு பேசுவது என்பது ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயமா? இவ்வளவையும் அவள் நினைத்துப்பார்த்து, பதில் சொல்வதா இல்லையா என்ற தீர்மானத்துக்கு வர நேரமில்லை. அவளும் நடுங்கிய வாறே, “எல்லாம் என் விதி!” என்று பதில் கூறினாள்.“நாராயணி! நோக்கு என்ன கஷ்டம்னு நேக்கு நன்னாத் தெரியும்; பெத்தவாள், பிறந்தவாள் எல்லாம் போயிட்டா! ஒண்டிக் கட்டையா இருந்து தவிச்சிண்டிருக்கே!” என்று பீடிகை போட ஆரம்பித்தார் குருக்கள். நாராயணிக்கு அழுகை அதிகமாயிற்று. “நான் வருகிறேன்!” என்று கூறிவிட்டுக் கர்ப்பக் கிரகத்தை விட்டு வெளியேறினாள் அவள்.ஆண்டவன் தரிசனம் முடிந்ததும், கோயில் பிராகாரத்தைச் சுற்றிவிட்டுப் போவது நாராயணியின் பழக்கம். அவ்வாறே. அன்றும் அவள் பிராகாரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தாள். பிராகாரத்திலே, அப்பிரதக்ஷணமாகச் சுற்றி வந்துகொண்டிருந்த கிருஷ்ணய்யரை அவள் எதிரே கண்டாள். நாணத்தால் தலையைக் குனிந்தவாறே அவரைக் கடந்து செல்ல முயன்றாள். கிருஷ்ணய்யர் சுற்று முற்றும் பார்த்தார். பிராகாரத்தின் பக்கம் யாருமே வரவில்லை. எல்லோருமே கச்சேரி மண்டபங்களில் நிறைந்திருந்தனர். “நாராயணி நில்!” என்றார் மெதுவாக! நாராயணிக்கு கால் பெயரவில்லை. நின்றுதீர வேண்டியிருந்தது. கிருஷ்ணய்யர் அவள் எதிரே ஓடினார். அவள் கால்களிலே தலை முட்டுமளவுக்குச் சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு வீழ்ந்தார்!நாராயணிக்கு ஒன்றுமே புரியவில்லை. “சுவாமி! சுவாமி!” என்று கத்திவிட்டாள்.


“நாராயணி! அடியேனை இன்று ரட்சிப்பாய்; தேவி விக்ரகத்தின் முன்னேகூட அடியேன் இப்படி நமஸ்கரித்தது கிடையாது. நீதான் எனக்குத் தேவி! என்னை ஏற்றுக்கொள்!” என்று மன்றாடி நின்றார்.“சுவாமி! தாங்கள் தேவ குலம், நானோ...” என்று இழுத்தாள் அவள்.“முற்றும் துறந்த பெரியவாளுக்கு எல்லாக் குலமும் ஒரே குலந்தான்! நான் ஆண்குலம் - நீ பெண்குலம். வா, இருவரும் காதல் குளத்திலே நீந்துவோம்.” என்று கையைப் பிடித்தார் அய்யர்.“அய்யோ சாமி! ஆண்டவன் கோயில்...” என்று எச்சரித்தாள் நாராயணி!“அருகில் ஒன்றும், தலையில் ஒன்றும் வைத்திருப்பவர்தானே ஆண்டவன் - இது தெரியாதோ நோக்கு!” என்று அவள் ஜடையைப் பிடித்து விளையாடினார் குருக்கள்.“அய்யோ, இதெல்லாம் கூடாது - எனக்குப் பிடிக்காது!” என்று சொல்லிவிட்டுத், தட்டிக் கழித்துவிட எண்ணி வாயைத் திறந்தவள் - ஏனோ தெரியவில்லை “யாராவது பார்த்து விடுவார்கள்!” என்று நாணிக் கோணி நகர்ந்தாள். இந்த வார்த்தை போதாதா அய்யருக்கு!“எல்லாப் பசங்களும் பரத நாட்டியம் பார்த்துண்டிருக்கான், ஒருத்தனும் வரமாட்டான்; பயப்படாதே” என்று சொல்லி அய்யர் அவளை எட்டிப் பிடித்தார். அவள் கன்னம் சிவந்தது. அவரது கையிலே தன்னை ஒப்படைத்தாள்.


திடீரென்று நாராயணிக்கு ஞானோதயம் ஆயிற்று. அய்யரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “சுவாமி என்னைக் காப்பாற்றுங்கள்! நீங்கள்தான் எனக்குத் துணை!” என்று ‘ஓ’ வென அலறினாள்.அய்யர் அவளை வாரியணைத்துத் தைரியம் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் ஆண்டவன் அருள்பாலித்து விட்டான் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்குப் புறப்பட்டாள். அய்யரும் அந்தத் தையலின் கன்னத்தைச் சுவைத்த உதடுகளைக் கழுவாமலே ஆண்டவனுக்கு அர்ச்சனைமந்திரம் ஜெபிக்கக் கர்ப்பக் கிரகம் நோக்கி விரைந்தார்.கோயில் பிராகாரத்திலே வாக்களித்த பிரகாரம், அய்யர் நாராயணியை எப்போதும் வைத்துக் காப்பாற்றுகிற அளவுக்கு அவள் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.“கோயில் குருக்களுக்கு அடிச்சுதடா சான்ஸ்! கொய்யாப் பழமாக இருந்தாள் - அவளைக் கொய்துவிட்டார் அய்யர். என்ன இருந்தாலும் அனுபவிக்கப் பிறந்த ஜாதியப்பா அது! எத்தனையோ பேர் நத்திக்கிடந்தார்கள்; எல்லோரையும் எட்டி உதைத்துவிட்டுப் பூணூல் வலையில் மாட்டிக் கொண்டது.


அந்தப் புள்ளிமான்! போகிறான் போ! அவனாவது சுவைக்கட்டும்!” - இளங்காளைகளிடத்திலே இப்படிப் பொறாமை வடிவத்திலே ஆரம்பமான பேச்சு, விட்டுக் கொடுக்கும் தன்மையிலே முடிவு பெற்றது.கடவுளின் பக்கத்திலேயிருந்து கடமைகளைச் செய்கின்ற மனிதர் மிகவும் நல்லவராக இருப்பார்! நம்பியவரைக் கைவிட மாட்டார்; அதிலும் பிராமணர்; புரண்டு பேசமாட்டார். பொய் கூறுவது பாபமெனக் கருதுவார்; பரமசிவன் பக்கத்திலே பார்வதி போலத் தன்னையும் அருகே வைத்து ரட்சிப்பார் என்ற நம்பிக்கையிலேதான் நாராயணி. கோயில் குருக்களைத் தன் கணவனாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தாள். கோயில் பிராகாரத்திலே கர்ப்பக் கிரகத்தின் நிழல்பட்டு இருண்டிருந்த இடத்திலே இதழ்களைப் பரிமாறிக் கொண்டு - திரும்பி இல்லம் வந்த பிறகு, அன்றிரவு முழுவதும் தூங்காமல் அவள் யோசித்ததன் முடிவு குருக்களைத் தன் மணாளனாக ஆக்கிக் கொள்வது என்பதுதான்.“ஏண்டி நாரா, கவலைப்படுறே! நான் பிராமணன் - நீ சூத்திரச்சின்னுதானே பார்க்கிற! பிராமணாளுக்குத் தலைவர் இருக்காரே எங்க இராஜாஜி அவர் மகளை காந்தி மகனுக்குக் கொடுக்கலியோ - ஜாதி ஆசாரம் பேசினாளே; என்ன ஆச்சு அது? அம்பேத்கார்னு ஒரு பறையன் - ஆதித் திராவிடர்ன்னு சொல்லிக்குவா - அவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கிறது யார் தெரியுமா? எங்க ஜாதிக்காரி ஒருத்திதான்! ஜாதி ஆச்சாரம் எங்கேடி போச்சு? ருக்மணி அருண்டேல் சமாச்சாரம் தெரியுமோ நோக்கு! அடி அசடு - பித்துக்கொள்ளி! சொல்றதைக் கேளடி! பயப்படாதே! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” - என்று கிருஷ்ணய்யர் பிரசங்கம் ஒன்றே செய்தார்.


“ஜாதியாரெல்லாம் கல்யாணத்துக்கு வருவார்களா?” என்று கேட்டு வைத்தாள் நாராயணி.“வரவேண்டாமே - நான் ஜாதியாருக்குச் சொல்லப்போறதே இல்லை, நீ என்னோட சாயரiக்ஷ கோயிலுக்கு வர வேண்டியது; இதோ வாங்கி வச்சிருக்கேன் மாங்கல்யம்! ஆண்டவனுக்கு நேரா இதை உன் கழுத்திலே கட்டுவேன். நமக்கு மனுஷாள் சாக்ஷி வேண்டாம்! தேவாள் சாக்ஷி போதும் - ஆண்டவாள் சாக்ஷி போதும்! என்ன சொல்றே?” என்று குழைவோடு கேட்டார் குருக்கள்.மகேசன் சந்நிதானத்திலேயே தனக்குத் தாலி கட்டப் போகிறார் என்ற செய்திகேட்டு, நாராயணி குதூகலமடைந்தாள். அவள் கழுத்திலே தாலி மின்னியது. ஊரிலே பேசிக் கொண்டார்கள். ‘கிருஷ்ணய்யர் நாராயணியை வைப்பாக வைத்திருக்கிறார்’ என்று! அப்படியே பேசியவர்களிடம் அவரும் ‘ஆமாம்’ போட்டார். இப்படி ஊரார் பேசுவது நாராயணி காதிலேயும் விழுந்தது. அவள், அவரிடம் முறையிட்டாள்.


“என்னை உங்கள் ‘வைப்பு’ என்று சொல்கிறார்கள்” என்று!“அட பித்து! ‘வைப்பு’ என்றால் ஏன் கோபப்படணும் “ஒய்ப்” என்ற இங்கிலீஷ் வார்த்தையைச் சொல்லத் தெரியாமல் அவா “வைப்” என்று சொல்றா! அவ்வளவுதான்!” என்று ஒருபோடு போட்டார் கிருஷ்ணய்யர்.கணவனே தெய்வம் என்று கருதிக்கிடக்கும் நாராயணியும் அந்தப் பேச்சையெல்லாம் அதிகமாக வளர்த்தாமல் அவரோடு சுமுகமாகவே பழகி வந்தாள்.திடீரென்று ஒருநாள், வீட்டுக்கு வந்த அய்யரின் முகத்திலே சோகம் படர்ந்திருப்பதை நாராயணி கண்டாள். காரணம் கேட்டாள். கோயில் வேலையிலிருந்து தர்மகர்த்தா நரசிம்மநாயுடு தன்னை விலக்கி விட்டார் என்று கூறினார் அய்யர்.“ஏன்” என்று துடித்தாள் நாராயணி.“ஊரிலேயுள்ள பிராமணர்கள் எல்லாம் மாநாடு கூடினார்களாம். அதிலே நான் கலப்புத் திருமணம் செய்து கொண்டு உன்னோடு வாழ்வதைக் கண்டித்தார்களாம். சூத்திரச்சியோடு வாழுகிறவன் கோயிலிலே சாமியைத் தொட்டுப் பூஜை செய்யக் கூடாது என்று தர்மகர்த்தாவிடம் வலியுறுத்தினார்களாம்; அதனால் தர்மகர்த்தா என்னை விலக்கிவிட்டார்” என்றார் அய்யர்.


இப்படி ஒரு புரட்சிகரமான செய்தியைக் கேள்விப்பட்ட நாராயணி, கிருஷ்ணய்யரைக் கட்டிப்பிடித்தபடி “பிராமணோத்தமரே! இந்த அனாதைக்காக உங்கள் ஆச்சார அனுஷ்டானங்களையெல்லாம் எதிர்த்து நின்றதோடு இல்லாமல், சமூகத்தையும் துச்சமாக மதித்துக் கோயில் வேலையையும் தியாகம் செய்து விட்டீர்களே” என்று கதறினாள்.“நாராயணி! சிறுபிள்ளை மாதிரி அழுதுண்டு இருக்காதே! உனக்காக நான் எவ்வளவோ செய்திருக்கேன். அதுமாதிரி நீ எனக்காக எதுவும் செய்யத் தயாராயிருக்கணும். அதுதான் எனக்குத் தேவை!” என்று சொல்லியபடி அவள் கூந்தலைக் கோதினார் அய்யர்.“சுவாமி! தங்களுக்காக உடல் - பொருள் - ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறேன்” என்று அவரது மடியிலே சாய்ந்து விக்கி விக்கி அழு தாள் அந்த விழியழகி.‘கிருஷ்ணய்யர் - நாராயணி’ ஜோடியைப் பார்க்கும்போது ‘அய்யோ, இந்த யுவதிக்கு இந்த மனிதன் அவ்வளவு பொருத்தமில்லையே’ - என்று சொல்லத்தான் தோன்றும். ‘கிளி மாதிரி இருக்கிறாள் - இவனோ எலி மாதிரி இருக்கிறான்’ - என்று விமர்சித்தவர்களும் உண்டு. ‘பேரழகியின் பிறப்பிடம் அவள் - இந்தப் பிராமணனோ அவளெதிரே விண்மீனுக்கு முன் மின்மினியாகத் தெரிகிறான்’ - இப்படிப் பேசாதாரும் இல்லை. ஆனால், நாராயணியின் கண்களோ, இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கு. அவள் மனக்கண்களுக்கு முன்னே எல்லோருடைய விமர்சனமும் தவிடு பொடியாகி விட்டது.குலப்பெருமை இழந்தார் - கோயில் குருக்கள் என்ற மதிப்பை இழந்தார் - இவ்வளவும் தனக்காக! தன்னிடம் தந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக என நினைக்கும்போது, நாராயணிக்கு நேரே கிருஷ்ணய்யரின் உருவம் - கிருஷ்ண பகவானின் உருவம் போலவே தோற்றமளித்தது. “கண்ணா, மணிவண்ணா!” என்று அவள் பாடாததுதான் பாக்கி. அவ்வளவு பக்தியும் பாசமும் புருஷன்மீது ஏற்பட்டு விட்டது அவளுக்கு.


குஷ்டரோகிக் கணவனைத் தாசியின் வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி, ‘தேவலோகத்து மாதர்கள் கற்பரசிகளாய் இல்லாத போது, பூலோகத்தில் மட்டும் கற்பரசிகள் இருக்கலாமா? அவர்களைச் சோதிப்போம்’ எனத் தோள் தட்டிப் புறப்பட்டு, நிர்வாணமாக வந்து சோறு பரிமாறச் சொன்ன மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக மாற்றி நிர்வாணக் கோலத்தோடு அன்ன மிட்ட அனுசூயா - இத்தகைய பத்தினிகளையெல்லாம் தோற் கடிக்கும் அளவுக்குப் பதிசொல் தட்டாத பாவையாக நடந்துக் கொள்ள வேண்டுமென்று நாராயணி ஆசைப் பட்டாள்.கோயில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் இரவு கிருஷ்ணய்யர் அவசர அவசர மாக வீட்டுக்கு ஓடி வந்தார். அவரது உடலெங்கும் வியர்வைத் துளிகள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியபடி, “நாராயணி! நாராயணி!” என்று அலறினார்.அவளோ “என்ன? என்ன?” என்று கேட்டபடி சின்னஇடை நெளிய ஓடி வந்தாள் பள்ளியறையிலிருந்து!அய்யர் பிரக்ஞையற்ற நிலையில் நின்று கொண்டு பிதற்றினார்.“நாராயணி! நோக்காக நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கேன்.”“ஆமாம்; அதற்கென்ன இப்போது?”“ஞாபகமிருக்கா? நேக்காக நீ உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்வேன்னு சொன்னியே!”“ஆமாம். சொன்னேன் - இப்போதும் சொல்கிறேன்!”“நாராயணி! ஆபத்து வந்து விட்டதடி! நீ, ஆவியையும் பொருளையும் தியாகம் செய்யத்தேவையில்லை. உடலை மட்டும் தியாகம் செய்போதும்!”“என்ன சொல்கிறீர்கள் சுவாமி?”“ஆமாண்டி கண்ணே! என் உயிரைக் காப்பாற்ற வேணும்னா நீ உன் உடலைத் தியாகம் செய்யத்தான் வேணும்!”“புரியவில்லையே!...”“தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு இருக்காரே; அவருக்கு உன் உடலை...”அய்யர் வாய் மூடவில்லை. அதற்குள் நாராயணி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தாள்.நாராயணிக்குப் பிரக்ஞை வந்தபோது, தான் கட்டிலிலே படுக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.


தன்னுடைய நெற்றியை மெதுவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த கைகளைத் தனது கைகளால் வெறுப்போடு நகர்த்தினாள். அப்படி அவள் நகர்த்தும் போது, கண்களை அகல விரித்துப் பார்த்தாள். அவளருகே சாய்ந்தபடி அமர்ந்திருந்தது கிருஷ்ணய்யர் அல்ல.கிருஷ்ணய்யரைவிட அழகான ஒரு மனிதர். நல்ல தேகக் கட்டுப் படைத்த வாலிபர். முறுக்கிவிடப்பட்ட இளம் மீசை அவரது முகத்தின் கம்பீரத்தை அதிகப்படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது. பரந்த மார்பகமும், அதை மூடியிருக்கும் பட்டுச் சொக்காயும், பார்ப்பவரைக் கவரத்தக்க விதத்திலே அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட நாராயணிக்குப் பேச வாயெழவில்லை. எழுந்தோடுவதற்கும் சக்தியற்றுப் போனாள். ஏதோ சொல்ல நினைத்தாள், வாய் குழறிற்று.“நீங்கள்...? நீங்கள்...?” என்று மட்டுமே அவளால் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.“நான்தான் தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு” என்று கூறியவாறு நாயுடு அவளை இறுகத் தழுவிக் கொண்டார்.நாராயணி அவரிடமிருந்து விலகிக்கொண்டு. “அய்யோ தெய்வமே? இது உனக்கு அடுக்குமா?” என்று கதறினாள்.


தெய்வம் அப்போது என்ன வேலையாக எங்கே போயிருந்ததோ? தன் பிரதிநிதியாக ‘காமனை’ அனுப்பியிருந்தது போலும்! அவனும் நரசிம்ம நாயுடு பக்கம் சேர்ந்து கொண்டு தூபம் போட ஆரம்பித்தான்.“கண்ணே நாராயணி! என் பேச்சைக் கேளடி; பெண் தெய்வமே!” என்று நாயுடு அவள் அழகின் முன்னே மண்டியிட்டார்; “என் கணவர்தான் இதுபோன்ற இழி தொழிலுக்கு இசைந்தார் என்றால், கோயில் தர்மகர்த்தாவாகிய தாங்களும் பாவச் செயல் புரியலாமா?” எனக் கண்ணீர் வடித்தபடி தர்மகர்த்தாவின் கால்களைக் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டு துடித்தாள் நாராயணி.“பாவம், புண்ணியம் எல்லாம் எனக்குத் தெரியாது நாராயணி! அதைப் பற்றியெல்லாம் உன்னிடம் உபதேசம் கேட்கத் தேவையில்லை. வாரம் ஒரு முறை எது தவறினாலும், கோயிலிலே வாரியாரின் உபதேசம் தவறுவதில்லை. அதை வரி பிசகாமல் என் காதால் கேட்டுக் கொண்டுதான் வருகிறேன்” எனச் சிரித்தபடி அவளை வாரியணைத் தார் நாயுடு!அவரது வாலிபம் துள்ளும் வலிமை மிக்க கரங்களிலே நாராயணியின் மெல்லிய இடை சிக்குண்டு நெளிந்தது; வளைந்தது; துவண்டது!அந்தப் பலமான அணைப்பிலே சிக்கிய படியே நாராயணி அவரைப் பார்த்துப் பேசினாள். இருவருடைய முகங்களும் ஒன்றுக் கொன்று வெகு அருகிலேதானிருந்தன. அவள் ஆத்திரத்தோடு கேட்டாள். ‘நீங்கள் செவிமடுக்கும் உபன்யாசங்களிலே இப்படித்தான் இன்னொருத்தன் மனைவியிடம் இன்பப் பிச்சை கேட்கச் சொல்லுகிறார்களோ?” என்று!”ஆமாம் கண்ணே - ஆமாம்! சாம்பல் பூசிய சிவனைத் தன் மனைவியோடு சரச சல்லாபத்திற்கு அனுப்பிய இயற்பகை நாயனார் பற்றிப் புராண காலக்ஷபம் இன்று காலையிலேதான் ஆயிரக்கால் மண்டபத்தில் அதிவிமரிசையாக நடை பெற்றது” எனக் கூறியபடி அவள் முகத்தோடு தன் முகத்தைப் பொருத்த முனைந்தார்.


அவரிடமிருந்து எப்படியும் விடுபட வேண்டும் என்ற ஆவேச உணர்ச்சியோடு அவரை ஒரே தள்ளாகக் கீழே தள்ளிவிட்டுச் சுவரின் பக்கம் போய் ஒதுங்கி நின்று விம்மியழத் தொடங்கினாள் அவள்.நாயுடுவுக்குக் கோபம் பிறந்தது. “நாராயணீ! இதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நாளைக்கு உன் புருஷன், கையிலே காப்புப் போட்டுக் கொண்டு வீதியிலே போவான். அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையிருந்தால் உன் இஷ்டப்படியே நட!” என்று கூறிவிட்டு நாயுடு அறையை விட்டு வெளியேறினார்.நாராயணி சிலை போல் நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணய்யர் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தார்- “அடி பாவி! என்னை மோசம் செய்துவிட்டாயே!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு அலறினார். நாராயணிக்கு அவரோடு பேச மனமில்லை. பேசாமல் கட்டிலிலே உட்கார்ந்து கொண்டு கிருஷ்ணய்யரை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.“ஏண்டி. இப்படி என்னைப் பார்க்கிறே? என்னை ஜெயிலில் போடறதுக்கு நீயும் தீர்மானிச்சுட்டியா?”கிருஷ்ணய்யர் பரிதாபமாகக் கேட்டார். நாராயணி பேசாமலிருக்கவே, மீண்டும் அவரே பேச்சைத் தொடர்ந்தார். “அடி என் கண்ணு! என் நிலைமை நோக்குத் தெரியாதடி! கைக்கு விலங்கு காத்துண்டு இருக்குடி!... கோயிலில் அம்மன் தாலியையும், மூலவிக்ரகத்துத் தங்கக் கவசத்தையும் நான் திருடி விட்டேன்னு பேரு கட்டிவிட்டானுங்கடி! வித்த இடத்திலே, அத்த வாங்கின பயலுகளும் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டானுங்கடி! இப்ப என்னடி பண்றது! தர்மகர்த்தா தயவு இல்லேன்னா தலை தப்பாதடி, தலை தப்பாது.”நாராயணி அழுதுகொண்டிருந்தாளே தவிரப் பேசவில்லை. அவளது நெஞ்சிலே எத்தனையோ குமுறல்கள்! கொழுந்து விட்டெரியும் தீ ஜுவாலையைப் போல இருந்தன அவள் கண்கள்.


“எனக்காக இந்தத் தியாகம் பண்ணுடி! இது ஒண்ணும் பெரிய குற்றமில்லேடி. தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு நல்ல மனுஷன் - எனக்குச் சகோதரன் மாதிரி! அவன் மனசு வச்சாத்தான் என்னைக் காப்பாத்த முடியும். ஒரு குல ஸ்திரீ அஞ்சுபேர்வரை ஆடவாளிடம் தொடர்பு வச்சிக்கலாம்னு நம்ப பாரதமே சொல்லுதடி! கேளடி என் பிராண நாயகி - பத்து வருஷம் பதினைந்து வருஷம் என்னை ஜெயில்லே போட்டுட்டா - அப்ப அப்ப கவலைப்பட்டுக்கிட்டுதானே இருப்பே? அந்தக் கவலையில்லாமே இரண்டு பேரும் சந்தோஷமாயிருக்க சம்மதம் கொடடி!”அய்யர் கெஞ்சினார். நாராயணியின் மௌனம் நீடித்தது. அய்யருக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது. நாராயணி தனக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் தீர்மானித்து. விட்டதாகக் கருதினார்.“அவர் எங்கும் போய்விடவில்லை. அடுத்த அறையிலேதான் இருக்கிறார்! இப்போதே வரச் சொல்றேண்டி; மறுபடியும் அவரை விரட்டாதே!” என்று கூறியபடி கிருஷ்ணய்யர் வெளியே ஓடினார்.நாராயணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஏதோ ஒரு முடிவோடு எழுந்து நின்று நாயுடுவின் வரவை எதிர்நோக்கினாள். நாயுடுவும் ஆவலோடு உள்ளே நுழைந்தார்.


நாராயணி அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள்.“வந்து விட்டேன் நாராயணி! நான் எங்கும் போகவில்லை. பக்கத்து அறையிலேதான் இருந்தேன். நீ என் உறுதியைச் சோதிப்பதற்காகவே பிடிவாதம் செய்தாய் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று பல்லை இளித்தபடி அவளது பக்கம் வந்து நின்றார் நாயுடு. அவர் பேசி முடிப்பதற்குள்ளாக நாராயணி அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு “என்னை எப்போதும் வைத்துக் காப்பாற்றுவீர்களா?” என்று திடீரெனக் கேட்டுவிட்டுத் தேம்பி அழுதாள்.இதுபோன்ற வார்த்தை அவளிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்காத நாயுடுவும் திடுக்கிட்டார்.“உண்மையாகவே கேட்கிறேன் - என்னை உங்களிடம் ஒப்படைத்தவனை - இன்று முதல் புருஷன் என்கிற நிலை யிலே வைத்து நான் பூஜிக்கப் போவதில்லை. இனி நீங்கள்தான் எனக்குக் கதி! நீங்கள்தான் எனக்குப் பதி! நான் உங்களுக்கு மனைவியாக இருக்கும் பாக்கியம் பெற்றவள் அல்லதான்! ஆனாலும், உங்கள் அடிமையாக இருக்கிறேன். மீண்டும் அந்தப் பாவியின் கையிலே ஒப்புவிக்காமல் இருப்பதாக எனக்கு வாக்குக் கொடுங்கள்.”நாராயணியின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுவேன் என்று சொல்லித் தீர வேண்டிய நேரம் அது! அதனால் நாயுடு தலையசைத்தார்!“துண்டுக் கரும்பு கேட்டவனிடம் தோட்டத்தையே எடுத்துக் கொள் என்பது போல் இருக்கிறது நாராயணி, உன் பேச்சு!” என்றார்.


பிறகு வென்றார், கிருஷ்ணய்யர் மறுபடியும் கோயில் குருக்களானார், திருட்டுப்போன நகைகளைப் பற்றிச் சரியான புலன் கிடைக்கவில்லை என்று போலீசாரும் அறிவித்து விட்டனர். காலை முதல் அர்த்தஜாமப் பூஜை வரையிலே கிருஷ்ணய்யருக்குக் கோயிலிலே வேலைதான். இரவு இரண்டு மணி வரையில் தினந்தோறும் பக்தர்களுக்குப் பிரசங்கம் செய்வார். அதற்கு மேல் கோயில் மண்டபத்திலேயே படுக்கை. உறக்கம் எல்லாம்! நாயுடுவுக்கும் நாராயணிக்கும் ஒரு குழந்தை பிறந்து, பிறந்த நாலாம் நாள் நல்லவேளையாக அது இறந்து விட்டது. அது உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நாயுடுவின் தொடர்பு அறுந்தி ருக்கலாம்.


நாராயணி, கிருஷ் ணய்யர் என்று தனக்கு ஒரு நாயகன் இருந்ததையே மறந்து விட்டாள்.தர்மகர்த்தா ஒரு நாள் ஊரில் இல்லை என்ற செய்தி கிருஷ்ணய்யர் காதுக்கு எட்டியது. நகரசபைத் தலைவர் தேர்தலுக் காக ஏழெட்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எங்கேயோ ஒரு கடாரம்பத்திற்கு ஓட்டிக் கொண்டுபோய் விட்டார் என்றும், திரும்ப இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அய்யர் கேள்விப்பட்டார்.நாராயணியைப் பற்றிய பழைய நினைவுகள் அய்யரைக் குடைந்தன. நாராயணியை நாயுடுவிடம் அர்ப்பணிக்காமல் ஜெயிலுக்கே போயிருந்தாலும் பரவாயில்லையே; ஜெயில் என்ன இந்தக் கோயில் மண்ட பத்தை விடவா மோசமாக இருக்கப் போகிறது? என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டிருந்த அய்யருக்கு எப்படியும் நாராய ணியை ஒருமுறை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க சமயம் கிடைத்ததாக எண்ணிப் புறப்பட்டார்.


நாராயணி வீட்டுக் கதவைத் தட்டினார். நாயுடுதான் வந்து விட்டார் என்ற நினைவில் அவளும் கதவைத் திறந்தாள். அய்யர் எதிரே நின்றார். நாராயணி அவரை உடனே வெளியேறுமாறு கட்டளையிட்டுத் தன் அறைப் பக்கம் போனாள். அய்யரும் அவளைத் தொடர்ந்தார். “மரியாதையாகப் போய் விடுவது நல்லது” என எச்சரித்தாள் அவள். அய்யர் கெஞ்சினார்.“அன்றொரு நாள் கோயிலிலே முதன் முதலில் சந்தித்துக் கொஞ்சினீரே: அந்த நாராயணியல்ல இவள்! நாயுடு மனைவி - தர்மகர்த்தா நரசிம்மரின் உடைமை! எனக் கர்ச்சித்தாள் அவள்.“என்ன இருந்தாலும் நீ என் மனைவியல்லவா?” அய்யருக்கோ தன் பசிக்கு எப்படியும் அவளை இரையாக்கித் தீரவேண்டும். அவளோ, எரிமலையாக இருந்தாள். அய்யரைச் சுட்டெரித்துவிடும் நெருப்புக் குண்டங்களாகக் காட்சியளித்தன அவள் விழிகள்.“முடியுமா, முடியாதா நாராயணி?” முரட்டுத்தனமாக அவளது கரங்களை இழுத்த அய்யரின் கன்னத்திலே நாராயணி “பளார்” என அறைந்தாள்.“நான் விபச்சாரிதான் அய்யரே! விபச்சாரிதான்! உம்மைப் போன்ற மனைவியை விற்கும் அரிச்சந்திரர்களின் மத்தியிலே என்னைப் போன்றவர்கள் எப்படிக் கற்போடு வாழமுடியும்?” நாராயணி பெருங்கூச்சலிட்டுப் பேசினாள்.


“பத்து வருடச் சிறைவாசம்! அதைத் தாங்க உம்மால் முடியவில்லை! பத்தினியின் உடலை விற்றீர்! பகற் கொள்ளைக்காரனைப் போலப் பகவானின் சொத்தைத் திருடி, மனைவியைப் பரத்தையாக்கி, மானத்தை இழந்து, உயிரைக் காப்பாற்றிக் கொண்ட உமக்கு என்னை மனைவி என்று அழைக்க உரிமை இருக்கிறதோ? தூ! வெட்கங்கெட்ட மனிதரே! போமய்யா போம்! உமது பித்தலாட்டங்களை பிரசங்கம் என்று போற்றப் பக்தர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் போம்!”விரல் நீட்டித் தெருவழியைக் காட்டி நின்றாள் நாராயணி. அய்யரோ அவளை விடுவதாயில்லை. எப்படியும் அன்றைய தாகத்தைத் தணித்துச் செல்லவே விரும்பினார். எதிரே நிற்பது ஏதோ ஒரு மண் பதுமை என்ற எண்ணம்தான் இருந்தது நாராயணிக்கு!அய்யர் அவளைத் தழுவிக் கொண்டார். “தப்ப முடியாது நீ!” என்று கரகரத்த குரலிலே கத்தினார். நாராயணிக்கும் அவருக்கும் சிறிது நேரம் கடும் போராட்டமே நடைபெற்றது. எப்படியும் விடுபட முடியாது எனக் கண்ட நாராயணிக்குத் திடீரென ஒரு யோசனை - நாயுடு. மேசையிலே ஒளித்து வைத்திருக்கும் கைத்துப்பாக்கி! ஓடிப்போய் மேசையைத் திறந்தாள். துப்பாக்கியை எடுத்தாள்.“டுமீல்! டுமீல்!” என ஒலி கிளம்பிற்று.“அய்யோ! அய்யோ!” என்று அலறல்.நாராயணி திகைத்தாள். அது அய்யரின் குரல் அல்ல நாயுடுவின் குரல்தான். ஓடிப்போய்ப் பார்த்தாள். நாயுடு அறை வாயிற்படியிலே சுருண்டு கிடந்தார்.


அய்யரோ எந்த ஆபத்துமின்றி கட்டிலுக்கடியிலே ஒளிந்திருந் தார். நாயுடுவைக் கொன்று விட்ட நாராயணி அவர் மீது விழுந்து புலம்பினாள்.நகரசபைத் தலைவர் தேர்தலைப் பற்றிய கவலையைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குள் ஒருமுறை நாராயணியைப் பார்க்க ஓடிவந்த நரசிம்ம நாயுடு எதிர்பாராத வகையிலே நாராயணியாலே சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆனால் போலீசார் அப்படி வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர்கள் அய்யரை வீரராக்கி விட்டார்கள். கட்டிலுக்கடியிலே ஒளிந்து மயங்கிக் கிடந்த அய்யர் தான் நரசிம்மநாயுடுவை சுட்டுக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டார் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.ஆயுள் தண்டனை! அந்த மட்டில் ஆண்டவன் நாராயணியின் துப்பாக்கி முனையிலிருந்தும் நீதி மன்றத்தின் தூக்குத் தண்டனையிலிருந்தும் தன்னை விடுவித்தானே என்ற மகிழ்ச்சி அய்யருக்கு! நாராயணியோ, அனாதையானாள்.


. நரசிம்மநாயுடு பிரவேசித்த பிறகு ‘மிஸஸ் நாயுடு’ என்று ஊர் கூறியது.இப்போது அவள் நடுத்தெரு நாராயணி ஆகிவிட்டாள். முன்பெல்லாம் நடுத்தெரு நாராயணி என்றால் அவள் இருக்கும் தெருவைக் குறிக்கும் - இப்போதோ?... நடுத்தெருவுக்கு அர்த்தமே வேறு!என்னதான் நாராயணியின் வாழ்க்கை கெட்டுவிட்டாலும் அவளது மனதிலே நரசிம்ம நாயுடுவுக்கு நல்லதோர் இடமுண்டு. அற்ப புத்திக்கார அய்யரைக் கொல்லப்போய் ஆசை நாயகனையல்லவா கொன்றுவிட்டாள்?அவசரத்தாலும் ஆவேசத்தாலும் பாமாவினால் கொல்லப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்ட நரகாசுரவதைப் படல ஊர்வல ரதத்தைப் பார்க்கும்போது அவளுக்கு, தான் செய்த கொலைதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதனால் தான் தீபாவளி தினத்திலே அவள் அப்படிச் சோகமாக அமர்ந்திருந்தாள் போலும்.


கீற்று இணையதளம்

Thursday, February 8, 2007

உடலுறவும் கிறிஸ்துவர்களின் பாவ மன்னிப்பும்!

உடலுறவும் கிறிஸ்துவர்களின் பாவ மன்னிப்பும்! - விடாது கறுப்பு
சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு கீழ் தளத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாளுக்கு சென்றேன். குழந்தையின் குடும்பம் கிறிஸ்து மதத்தினை சேர்ந்தவர்கள். பரம்பரையாக கிறிஸ்தவர்கள் அல்லர். இந்துவாக பிறந்து பின்னர் மதம் மாறிய கன்வர்ட்டடு கிறிஸ்தவர்கள். அவர்கள் அன்றாடம் வீட்டினுள் அமர்ந்து செபம் செய்வதை என் காதுபட கேட்டிருக்கிறேன். உண்மையான பக்தியோடு ஏசுவை துதிக்கின்றனர். 'ஒரு காலத்தில் கஷ்டப்பட்ட எங்களின் குடும்பம் இன்றைக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு எங்களின் ஏசப்பாதான் காரணம்!' என்கின்றனர் இவர்கள். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை மாதம்தோறும் சர்ச்சுக்கு அளிக்கின்றனர். ஒரு உறுப்பினர் தன்னுடைய சொந்த வீடுகளில் ஒன்றையே சர்ச்சுக்கு எழுதிக் கொடுத்து விட்டாராம்.
இவர்கள் எல்லா சனிக்கிழமை மாலையும் தவறாமல் சர்ச்சுக்கு சென்று வழிபடுகின்றனர். மாதம் ஒருமுறை தங்களின் வீடுகளில் ஜெபக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். ஜெபக்கூட்டத்தின்போது வகைவகையான சமையல் வகைகளை சமைத்து வைத்து சர்ச்சில் உள்ள எல்லாரையும் அழைக்கின்றனர். அனைவரும் வந்திருந்து கூட்டம் நடத்தும் அந்த குடும்பத்திற்காக எல்லா நன்மையும் செய்யவேண்டும் என ஆண்டவனை தோத்திரம் செய்துவிட்டு பின்னர் குடும்ப விஷயங்களை பரிமாறி, உணவுண்டு சந்தோஷமாக செல்கின்றனர். இந்த கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் பாஸ்டராம். இவர்கள் பிராட்டஸ்டண்டு கிறிஸ்துவ வகுப்பினை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க பிரிவிலோ தலைமை வகுப்பவர் பாதர் என்பவர்.இதில் நன்கு கவனித்தால் இறைப்பணியும் ஆயிற்று. நிறைய பேரோடு பழகும் வாய்ப்பும் கிட்டுகிறது. இன்ப- துன்பங்களை சக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. யாராவது ஒருவர் கஷ்டப்பட்டால் மற்றவர்கள் அவருக்கு உதவி செய்கின்றனர். பணமாகவோ பொருளாகவோ கொடுத்து அவரை மேலே கைதூக்கி விடுகின்றனர். இதனைப் பார்த்த எனக்கு ரொம்பவும் பொறாமையாக இருந்தது.
ஏசு என்ற மகனைப் பெற்றெடுத்த அன்னை மரியாளும் ஒரு கடவுளே என்பது கத்தோலிக்கின் வாதம். அவர்கள் மரியாளையும் வணங்குகின்றனர். ஆனால் ப்ராட்டஸ்டண்டின் வாதம் வேறு மாதிரி. இறைவன் தன்னுடைய தூதரை யாருடைய வயிற்றில் பிறக்க வைக்கலாம் என மனிதர்களில் தேடி பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய மரியன்னையை தேர்ந்தெடுத்தார். இறைவனைத் தவிர மற்றோரை நினைத்துக்கூட பார்க்காத மரியன்னை தன்னுடைய இறைவனுக்காக அந்த நல்ல இறைச் சேவையை செய்தார். தேவதூதனாகிய ஏசு கிறிஸ்துவை பெற்றுக் கொடுத்தார். அவர் பணி அவ்வளவுதான்.
ஏசுவே எங்கள் கடவுள் என்கின்றனர் இவர்கள். மரியாளையும் கும்பிடும் வேளாங்கண்ணி பற்றிச் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இது தவிர கத்தோலிக்க சமூகத்திற்குள் இருக்கும் பல குற்றம் குறைகளை என்னிடம் பட்டியல் இட்டனர். பத்து கட்டளைகளை கத்தோலிக்கர்கள் ஒழுங்காக பின்பற்றுவதில்லை என குறைபட்டுக் கொண்டார் அவர்.அட சொல்ல வந்ததை மறந்து விட்டேன்.. கூட்டம் ஆரம்பிச்சதும் பாஸ்டர் வந்தார். எல்லாரும் அமைதியானார்கள். பாஸ்டர் இத்தனையாவது பக்கத்தில் இத்தனையாவது அதிகாரத்தில் இத்தனையாவது பாராவில் ஆண்டவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதனை வாய்விட்டு உரக்க படித்தார். கூட இருந்தவர்கள் அனைவரும் 'நேசிக்கிறேன் ஆண்டவரே, ஆமென், ரட்சிக்க வேண்டும் ஆண்டவரே, எங்களை காப்பாற்றும் ஆண்டவரே" என்றெல்லாம் மனமுருக வேண்டினார்கள். நானும் அந்த சிறு குழந்தைக்கு நன்றாக படிப்பும் அறிவும் வர வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.
பாஸ்டர் கொஞ்ச நேரத்துல தமிழ் வசனங்களை விட்டுவிட்டு "பப்பர்ர பறபற கிப்பர்ர கிற கிற" என்று ஏதோ ஒரு மொழியில் சத்தமாக பேச ஆரம்பித்தார். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. அதற்கு மற்றவர்கள் பழையபடியே 'உங்களை நேசிக்கிறோம் ஆண்டவரே, எங்களை ரட்சியும் ஆண்டவரே, உங்களின் கீழ் இருக்கும் இந்த பிள்ளைகளை உங்களின் மேலான கிருபையால் காத்தருளும் ஆண்டவரே" என்றார்கள். இந்த பப்பர பறபற கிப்பிர பறபற என்பதன் பொருள் அவர்களுக்கு விளங்கியதா என்று தெரியவில்லை. இந்த பாப்பார மடப் பசங்கள்தான் யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லி வெறுப்பேற்றுகிறார்கள் என்றால் இங்கே இவர்களுமா? இது என்ன மொழி என ஒருத்தரிடம் கேட்டேன். அவர் சொன்னார், இது சாத்தான் மொழியாம். அவர் பேசிய வசனங்கள் சாத்தானுக்கு மட்டுமே தெரியுமாம்!கூட்டம் முடிந்ததும் குழந்தைப் பையன் கேக் வெட்டினார். அப்பா, அம்மாவுக்கு ஊட்டினார். பின்னர் சிறு துண்டுகளாக வெட்டி அனைவருக்கும் கொடுத்தார்கள். வந்திருந்தவர்கள் பரிசுப் பொருகளை கொடுத்தார்கள். பிறந்தநாளைக் கொண்டாடிய அந்த குழந்தைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் விருந்து நடந்தது. அனைவரும் சாப்பிட்டனர். அனைவரும் குடும்பக் கதை பேசி மகிழ்ந்தனர். அதில் ஒரு இளம்பெண் மட்டும் ஒரு பையனை தனியாக தள்ளிக்கொண்டு சென்று இருளில் பேசிக் கொண்டிருந்தார்.நண்பர் ஒருவரை தனியாகக் கூப்பிட்டு யார் அவர்கள் என விசாரித்தேன். அந்த இளம்பெண்ணுக்கு 19 வயசாம். அந்த பையன் சர்ச்சில்தான் பழக்கமாம். அவன் ஒரு காலிப்பயல். ஏற்கெனவே ஒரு பெண்ணை டாவடித்து மேட்டரை முடித்து(எத்தனை முறை என்று சொல்லவில்லை)விட்டு கைகழுவி விட்டவனாம். அதன்பின் இந்த பெண்ணைப் பிடித்து காதலித்து வருகிறான்.
இந்த பெண்ணின் அம்மா, அவரின் இரண்டாவது கணவன், அப்பெண்.. மூவர்தான் இவர்கள் வீட்டில். அந்த இரண்டாவது கணவருக்கு 35 வயதிருக்கலாம். அம்மாவுக்கு 45 இருக்கும். இவர்களின் காதல் அப்பா அம்மாவுக்கு தெரியவர பெண்ணைக் கூப்பிட்டு விசாரிக்க அவர் காதலை மட்டுமல்ல இன்னொன்றையும் ஒப்புக் கொண்டாராம். இதுவரை 21 தடவை மேட்டர் செய்து இருக்கிறார்களாம். விஷயம் உடனே பாஸ்டருக்கு தெரிய வைக்கப்பட்டு சர்ச்சில் கூட்டம் போட்டு இனிமேல் இதுபோல செய்யக்கூடாது, கல்யாணத்துக்குப் பிறகுதான் மேட்டர் என இருவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு பாவமன்னிப்பு கொடுத்தாராம்.இதில் என்ன கொடுமை என்றால் அந்த பையன் இன்னமும் அந்த இளம்பெண்ணை மணக்க மறுக்கிறான். எப்போது கேட்டாலும் பிறகு செய்துகொள்கிறேன் என்று சொல்கிறானாம்.
இவரை தவிர வேறு பெண்ணை மணக்க முயற்சி செய்து பின்னர் சண்டை நடந்து நிப்பாட்டினார்களாம். இத்தனைக்கும் முதலில் கெடுக்கப்பட்ட பெண்ணும் இரண்டாவதாக 21 முறை கெட்ட பெண்ணும் உற்ற தோழிகள். அவர் இவரிடம் எதுவுமே சொல்லவில்லையாம் கெடுவதற்கு முன். இப்போது இவர் கெட்ட விஷயம் முன்னவருக்கு தெரியவர 'என் ஆளை நீ வளைச்சுப் போட்டுட்டேடி' என்று இரு பெண்களுக்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.இப்போது முதலில் கெட்டவர் இந்தியாவில் இருந்து வந்த இந்து ஒருவரைக் காதலித்து அவரை வீட்டோடு அழைத்து வந்து வைத்து டெலிபோன் கடை வைத்துக் கொடுத்துள்ளார். அந்த பையனாவது ஏமாத்தாமல் இருக்க வேண்டும்.
என்ன பாவமோ என்ன மன்னிப்போ... போலீசில் சொல்லி முட்டிக்கு முட்டி தட்டி அந்த காலிப்பயலை பிடித்து போலீசில் தள்ளாமல் பாவமாம் புண்ணியமாம்! இந்த பெண்ணுக்கும் எங்கே போனது புத்தி? 21 முறை செய்யும் வரைக்கும் யோசிக்கவே இல்லையா? ஏசப்பா என்ன கல்யாணத்துக்கு முன்னர் உடலுறவா கொள்ளச் சொன்னார்? மன்னிப்பு கொடுப்பதற்கு பாஸ்டர்களும் பாதர்களும் சபையும் இருக்கும்வரை இந்த மாதிரி காலிப்பயல்கள் திருந்தப் போவதில்லை.
நன்றி: விடாது கருப்பு