Saturday, February 3, 2007

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க வேண்டும் - பால்தாக்கரே


மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவ்வாறு ஒன்றிணைந்தால் மட்டுமே இஸ்லாத்தை இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும் என்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். மேலும் ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தாக்கரே கூறியுள்ளார்.



தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்திருந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, கட்சியின் பலமான இருதூண்களான அவரின் இரு மகன்களும் சிவசேனாவிலிருந்து விலகிய பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.


சிவாஜி பார்க்கில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும் பொழுது மேற்கண்டவாறு ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அக்கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை லட்சியத்தில் உறுதியான ஹிந்து என்றும் சிலாகித்துப் பேசினார். இந்த பேரணியில் வாழ்த்துரை வழங்க நரேந்திரமோடியும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


இதற்கிடையில் தாணேயில் நடந்த மற்றொரு பேரணியில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை தனிப்பட்ட முறையில் அவர் செய்த விமர்சனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி எனக்கருதப்படும் முஹம்மத் அஃப்ஸல் குருவிற்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று குடியரசுத்தலைவருக்கு எதிராக குற்றம்சாட்டிய தாக்கரே தொடர்ந்து தன்னிடம் பரிசீலனைக்கு வந்த அஃப்ஸல் குருவின் கருணைமனுவை அவர் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். தனது தலையில் இருக்கும் பெருமளவு முடியின் காரணமாக கருணைமனுவில் அடங்கியுள்ள உள்ளடக்கத்தை கலாமால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா? என்று அவரை நையாண்டி செய்த தாக்கரேயின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் குற்றம் கூறியது.


தாக்கரே நாட்டைத் துண்டாட முயல்வதாக முதிர்ந்த காங்கிரஸ் தலைவரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்தார். தாக்கரேயின் இந்த விமர்சனம் பைத்தியக்காரத்தனமானதும் தள்ளப்படவேண்டியதுமாகும் என NCP தலைவர் ஷரத்பவாரும் கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் என்பவர் ஒரு தனிமனிதன் அல்லர் என்றும் அவர் இந்நாட்டின் தலைமைக் குடிமகன் என்றும் CPM தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார். இந்திய இறையாண்மையின் கீழ் வசிக்கும் எவரும் அப்பதவியை மதிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தாக்கரேயின் கலாமுக்கு எதிரான இந்த விமர்சனத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என BJP தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். அஃப்ஸல் குருவின் தண்டனையை தாமதப்படுத்துவதற்கு எதிராக தனது எதிர்ப்பை தாக்கரே வெளிப்படுத்தியதாகத் தான் கருதுவதாகவும் நாயுடு கூறினார்.


தேசிய அளவில் சர்ச்சைக்கு இடமளிக்கும் விதத்தில் தாக்கரே வெளிப்படுத்தி இருக்கும் இஸ்லாத்தை அழிக்க ஹிந்து ஒற்றுமை, ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான், குடியரசுத்தலைவருக்கு எதிரான விமர்சனம் போன்றவை அவரின் கட்சியை தேசிய அளவில் வளர்த்து எடுக்க முயலும் அவரின் அடுத்த கட்ட நாடகத் தந்திரமாகவே கருதப்பட வேண்டியுள்ளது. சிவசேனாவின் ஆரம்பகால கொள்கை மும்பையையும் பின்னர் மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. மஹாராஷ்டிர மாநிலத்தவர்கள் தவிர மற்ற அனைவரும் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்து, ஹிந்துக்கள் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களுக்கு எதிராக படுபயங்கர அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டு சிவசேனா வளர்ந்த வரலாறு உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.


அன்று சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே மஹாராஷ்டிர மாநிலத்தவர்களை தவிர, ஹிந்துக்கள் உட்பட மற்றவர்களை மஹாராஷ்டிராவிலிருந்து அடித்து விரட்டப்படுவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். இன்று அதே சிவசேனாவின் தலைவர் தனது கட்சியின் கொள்கைக்கு எதிராக மொழி-பிரதேச எல்லைகளை மறந்து ஹிந்துக்கள் இஸ்லாத்தை அழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


நன்றி: சத்தியமார்க்கம்.காம்

1 comment:

Anonymous said...

யார் எதிரி ?


இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்

முன்னுரை

நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். நான் அவ்ரங்கசீபுக்கோ, மற்ற மதங்களுக்கோ சப்பை கட்டு கட்ட இங்கு வரவில்லை

எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ... ஆகவே மதச்சண்டைக்கு விருப்ப்மோ, நேரமோ இல்லையென்றாலம், உண்மை நிலை அறிய சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது

கேள்விகள் :


1. நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?

அவுரங்கசீப் காலத்தில் நடந்த கட்டாய மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... பெரும் அளாவில் கட்டாய மதமாற்றம் நடக்கவும் இயலாது

அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, 1950களிலும், இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி ?

அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??

அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், 21ஆம் நூற்றாண்டில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?


2. இன்று இருப்பதை காட்டிலும், கிறித்துவத்துக்கு, வெள்ளையர் ஆட்சியில் செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை சுமார் 200 இந்து மதம் எப்படி தாங்கியது ?

இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?
1950களில் கூட இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் இருந்தனர் ?

3. கடந்த 10 ... 20 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள் ?. இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?

அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?

யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை.

இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்

இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்

இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்

- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன

- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...

- அனாதைகளான அருமை பெற்றோர்,

- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....

இவர்களில் இந்துக்களே அதிகம்


Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...

சிந்திப்பீர்...செயல் படுவீர்

நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்

நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்

ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்

நண்பன்
விநாயக்