Tuesday, March 13, 2007

காமாந்தகன் இந்திரன் மட்டுமே பார்ப்பனக் கடவுள்!

திராவிட தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டு, திராவிடர்களின் தீண்டுதலுக்கு எட்டாமல் செய்தது மட்டுமா பார்பனர்கள் செய்த சூழ்ச்சி?ஐயகோ, இவர்கள் புளுகிய புரட்டுப் புனைகதைகளினால் நம் தமிழ் முருகன் கோவணத்துடன் ஆண்டியாக நிற்கிறான் இன்றைக்கு! நிற்க. உடம்பெல்லாம் பெண்குறி சாபம் பெற்ற இந்திரன் மட்டுமே பார்ப்பன வேதகால தெய்வம் என்பது நாமெல்லாம் அறிந்த உண்மை.

பிள்ளையார் வழிபாடுகள் நாட்டார் வழிபாடு என்பதன் கீழ், மலை சாதியினர் வழிபட்ட ஒரு உருவகக் கடவுள். பார்வதியின் அழுக்கில் இருந்து உருவானதாக பிள்ளையார் பற்றிய கதையைப் பார்ப்பனர் புனைந்துள்ளனர். அதாவது பார்வதி குளிக்கச் செல்லும் முன் அழுக்கை திரட்டி மகனாக செய்து காவலுக்கு வைத்ததாகவும், அந்த சமயத்தில் அங்கே மனைவியைப் பார்க்க வந்த சிவன் இந்த பிள்ளையாண்டானைப் பார்த்து சந்தேகம் கொண்டு தலையை வெட்டிவிட்டதாகவும், "ஐயோ நாதா அவசரப்பட்டு விட்டீர்களே? இவன் நம் மகன் உயிர்பிச்சை தாருங்கள்!" என்று பரமனிடம் வேண்டியதாகவும், அதன் பிறகு காட்டு யானையை வெட்டி அந்த முண்டம் உள்ள இடத்தில் பொறுத்தி பிள்ளையாரை தமது மூத்த மகனாக ஏற்றுக் கொண்டதாகவும் மிக கேவலமானதொரு கதையை புராணம் என்ற பெயரில் புழுகி அதற்கு அகவல் தகவல் எல்லாவற்றையும் சமசுகிருதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இங்கு மருத நிலத்துக் கடவுளான முருகனை கங்கை நதிக்கரையில் சிவபெருமானின் விந்து துளிகள் ஆறு மலர்களில் விழுந்து, ஆறுபாலகர்கள் பிறந்து சரவணன் என்ற ஆறுமுகத்தான் தோன்றியதாக புனைக் கதைகளை புனைந்து, இதுதான் ஷண்முகன்.. சரவணன் என்று பிதற்றி வந்திருக்கிறார்கள் என்று பல்வேறு தமிழ் மற்றும் திராவிட வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. ஏற்கனவே வள்ளி என்ற மனைவி இருக்க தெய்வானை என்ற பாப்பாத்தியை இரண்டாம் தாரமாக முருகனுக்கு மனைவியாக்கி, கிராஸ் பெல்ட் போட்டு பார்ப்பன தேவதையாக்கி கட்டிப் போட்டனர். ஐயனார் எனப்படும் மலைவாழ் நாட்டார் தெய்வத்துக்கு ஐயப்பன் என்று சொல்ல சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்ததாக அசிங்க கதைகளைச் சொல்லி சபரி மலை தேவஸ்தானம் மூலம் வருமானம் பார்த்து வருகிறார்கள்.

முருகனின் இடுப்பு அங்கவஸ்தரத்தை அவிழ்த்து திராவிட முருகனை கோவண ஆண்டி ஆக்கி அவமானப் படுத்தியது மட்டுமின்றி கந்தபுராணம் என்ற பெயரில் ஆபாசங்களை எழுதி அதையும் அரங்கேற்றி, பார்ப்பனன் சொல்வதுதான் கடவுள் என்று நம்ப வைத்தது நடந்த கதை. தற்போது பார்பனீயம் பற்றிய சர்ச்சைகளை கிளப்பும்போது நண்பர் ஹரிகரன் போன்றவர்கள் அதே இட்டுக் கதைகளைக் காட்டி திராவிட தெய்வங்களுக்கு வாள்பிடிப்பது போல் காட்டிக் கொள்வது பெரியாரைத் திட்டுவதற்கு மட்டுமல்ல. திராவிட தெய்வங்களைக் குறித்து 'இதோ பார் காமக்கடவுள் முருகன் - உங்கள் யோக்கிதை இது' என்று மறைமுகமாக சாடுவதே முக்கிய நோக்கம்.

No comments: