Tuesday, March 13, 2007

சில கேள்விகளும் மட்டையடி பதில்களும்!

திராவிடர்களின் கேள்விகளுக்கு ஒரு இந்"தூத்து"வ, பார்ப்"பன்னீ"ய ஆதரவாளர் ஒருவர் கொடுத்த பதில்களை இங்கே உங்களுக்காக கட்டுரையாக்குகிறேன். படித்து ரசியுங்களேன்.

"1. சிறுவயதில் கண்ணப்ப நாயனார் என்பவரின் கதையை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்படி பன்றிக்கறி படைக்கப்பட்ட சிவலிங்கம் இன்று அனேக இடங்களில் சைவ சாமியாக கொண்டாடப்படுவது எப்படி? இது எந்த காலகட்டத்தில் நடந்த மாற்றம்? இப்போது ஏன் அப்படி அசைவ உணவை நம் சாமிக்கு படைக்க முடியவில்லை?"

பதில் : சிறுவயதில் கண்ணப்ப நாயனாரின் கதையைக் நானும் கேட்டு இருக்கிறேன். பன்றிக்கறி சமைத்து அமுது படைத்த கதை எனக்கும் தெரியும். அது சரியும் கூட. இருந்தாலும் மாட்டுக்கறி தின்கிறார்கள் என்று இஸ்லாமியர்களையும், தலித்துக்களையும் நாங்கள் திட்டுவதற்கும் இதற்கும் எந்தவித தொடர்பு இல்லை. நாங்கள்கூடத்தான் வெளியில் யாருக்கும் தெரியாமல் பன்றிக்கறி, மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி திங்கிறோம். ஆனால் அதனை வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை. சொன்னால் எங்களையும் சூத்திரனையும் ஒன்றாக்கி விடுவீர்கள். வைப்பாட்டி மகன்கள் என்று எங்களால் அழைக்கப்பட்ட அவர்களும் நாங்களும் ஒன்றா? அதனால்தான் சாமிகளை மட்டும் சைவ சாமிகளாக மாற்றினோம்."

2. சென்னையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்ட பூர்வகுடி மக்களில் பலருக்கு கபாலி என்று பெயர் வைப்பது இன்றும் வழக்கமாக இருக்கிறது. கபாலி என்பது சிவபெருமானின் ஒரு அவதாரம். மனித மண்டையை பிச்சை பாத்திரமாக்கி வலம் வந்த அவதாரத்தின் பெயர். .. உயர்குடி இந்துக்கள் வழிபடும் பெருந்தெய்வமாகிவிட்ட அவர் பெயர். இன்று சேரிகளில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது. எந்த உயர்சாதிக்காரருக்கும் கபாலி என்று பார்த்த நினைவு இல்லை. ஏன் அவர்கள் கபாலி என்று வைத்துக் கொள்ளுவதில்லை..?"

பதில் : கபாலி(வெட்டியான்), சுசுனதேவர்(ஆண்குறி வழிபாடு) என்ற பெயர் திராவிட தெய்வமான சிவனைப் பழிப்பதற்காக எம்குல மூதாதையார்களால் வைக்கப்பட்டது. இன்னாளில் சிவனுக்கு பூனூல் போட்டு ஆரியமய மாக்கி விட்டதால் அந்த பெயர் இனி எங்களுக்கு தேவை இல்லை! குப்பத்திலும் சேரிகளிலும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்."

3. சிவனின் வாரிசுகளாக அறியப்படும் கணபதி, முருகன் ஆகிய இருவரும், முறையே இங்கே அண்ணனாகவும், தம்பியாகவும் பார்க்கப் படுகின்றனர். ஆனால் இந்'து' மதம்.. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல். எப்படி வேறு மாதிரியாக இருக்க முடியும்? வடநாட்டில்.. கண்பதி தம்பி, கார்த்திகேயன் அண்ணன். தம்பி கணபதிக்கு சித்தி,புத்தி என்று இரண்டு மனைவியர் உண்டு. ஆனால்.. இங்கோ அவர் 'கட்டை'பிரம்மச்சாரி. அது எப்படி? கார்த்திக் பகவான் கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது என்று ஒரு வழமையும் நடந்து வருகிறது. ஏனிந்த குழப்பம்?"

பதில் : குழப்பமா? என்ன உளறுகிறீர் ஓய். நாங்கள் இன்னும் தெளிவாகத்தான் இருக்கிறோம். திருமணமான ஆண்கள் சிலர் வேறு ஊருக்குச் செல்லும் போது தனக்கு திருமணமே ஆகவில்லை என்று பொய் சொல்லி இளமையை பாதுகாத்து வருகிறார்களே. அதுபோல்தான் இது. இறைவனை இளமையாக காட்ட நாங்கள் மாற்றி மாற்றி அப்படித்தான் சொல்வோம். எங்கள் பெரியவா காஞ்சி காமகேடி சுப்ரமணிகூட கல்யாணமே ஆகவில்லை என்று சொல்லித்தான் சொர்ணமால்யாவை மடக்கினார் ஓய்!"

4. பிள்ளைக்கறி தின்றதாக தமிழில் பாடப்பட்ட சிவனின் இந்த கதை. வடநாட்டினருக்கு தெரியாமல் போனது எப்படி?(ராமனும், கிருஷ்ணர் குறித்தும் அவர்களது லீலைகள் குறித்தும் தமிழர்கள் அறிந்து வைத்திருக்கும் போது..இது எப்படி அங்கு தெரியாமல் போனது?)"

பதில் : ஒரே புராணக் கதையை நாடு முழுவதும் சொன்னால் இலக்கியம் எப்படி ஓய் வளரும்? நம் இந்"தூ"த்துவா பார்ப்"பன்னி"ய இலக்கியங்கள் வளரவேண்டும் என்பதற்காக இது போல் இட்டுக்கட்டி புரூடாக் கதைகளை சொல்லுவது கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் நாம் செய்யும் அரிய பெரிய தொண்டு என்பதை மறந்து விடாதீர்கள்!"

5. நீயும் இந்து, நானும் இந்து எனில் இந்தமதத் தலைவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் சங்கரமடத்தின் வாரிசாக ஏன் தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது.?"

பதில் : அவாளுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்ற ஒரே காரணத்தினால் தான் பெரியவாள்கள் மட்டுமே அந்த பதவியை வகிக்க தகுதி படைத்தவர் என்பது மிஷ'நரி'களால் தூண்டிவிடப்பட்டு வாலாட்டும் உங்களைப் போன்ற விஷ நரிகளுக்கு தெரியாதது போல் கேட்பது ஒன்றும் புதிதல்ல. கிறித்துவ மதத்தில் புகுந்தால் சரிசமமாக நடத்துவார்கள் என்பதற்காக அங்கு செல்லும் தலித்துகளை நம்பி எப்படி அந்த பதவியை கொடுக்கச் சொல்கிறீர்கள்? எங்களவா மட்டும்தான் எதற்காகவும் எங்கும் செல்லாதவர்கள். இருக்கும் இடத்தில் இருந்தே உழைக்காமல் எல்லாம் பெற எங்களால் மட்டும்தான் முடியும். இந்து மதத்தினை போற்றி வளர்க்க எங்கள் தலைவர்களால் மட்டும்தான் முடியும். இந்து என்றால் பார்ப்பனர். பார்ப்பனர் என்றால் இந்து தெரியுமோல்லியோ."

6. எங்கள் சாமீ எப்போதும் எங்களைப் போலத்தான் இருக்கும். எங்கள் வாழ்வியலைப்போலவே அதுவும் பன்றி+ஆடு+கோழி போன்றவைகளையும் சாராயம், சுருட்டு போன்றவைகளையும் வேண்டுவதாகத்தான் இருக்கும். எங்கள் சாமியோடு நாங்கள் நேரடியாக பேசிக்கொள்ள முடியும். ஆனால் இந்து சாமிகளோடு பேச.. ஏஜண்டுகளும், இடைத் தரகர்களையும் தாண்டினால் தான் முடியும். அப்படியெனில் தமிழர்கள் இந்துக்களா?"

பதில் : அதுதான் உங்கள் சாமிகளை காவல்காரனாக்கி ஊருக்கு வெளியே எல்லைச்சாமிகளாக நிற்க வைத்திருக்கிறோமே! அதில் உங்களுக்கு பெருமை இல்லையா? வெள்ளையர்களின் சூழ்ச்சி சுதந்திர இந்தியாவிலும் உங்களை ஸிந்திக்கவிடாமல் செய்து விட்டது. சாதாரணமாக ஒரு இடத்தை அடையவே ஓட்டுனர் என்ற டிரைவர் தேவைப்படும்போது அவ்வளவு பெரிய இறைச் சக்தியைச் சென்றடைய ஒரு ஐயர் கண்டிப்பாக தேவை. உங்களின் நீசபாஷை தேவனுக்குப் புரியாது. தேவ பாஷை உங்களுக்குத் தெரியாது. எனவே தேவனின் மொழியான சமஸ்கிருதம் கொண்டு நாங்கள் உங்கள் கோரிக்கைகளை இறைவனிடமும், இறைவனின் பதில்களை உங்களிடமும் சொல்லுவோம். அதற்காகத்தான் நாங்கள் தட்டில் துட்டு வாங்குகிறோம்.

No comments: