Thursday, March 22, 2007

பார்பனீய கிச்சு கிச்சு !

தமிழ்மணத்தில் திரட்டப்படும் வலைப்பதிவுகள் பலவற்றில் வராலாறு அறியாத கத்துக்குட்டிகள் பல பெரியாரையும் தமிழ் சான்றோர்களையும் ஏக வசனத்தில் தனக்கே உரித்தான பாசையில் 'அர்சித்து' வருகின்றனர். இவர்கள் அனைவரும் பார்பனீயத்தை தாங்கிப் பிடிக்கும் பார்பனர்கள் என்பது அவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியது என்பது இல்லை. பார்பனீயம் என்பதை பார்பனர்கள் தாங்களாகவே குற்றம் உள்ள நெஞ்சாக தங்களுக்குப் பொருத்திப் பார்பதுதான் அவர்களின் இத்தகைய தூற்றலுக்கு துணையாக இருப்பது துரதிஷ்ட வசமான உண்மை.

ஊருக்குள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்கான அறிகுறி கிஞ்சித்தும் இல்லாமல் தரம் தாழ்ந்த விமர்சனங்களைப் பெரியார் மீதும், திராவிட தலைவர்கள் மீதும், திரவிட உணர்வாளர்கள் மீதும் மலிவு ஆபாசத்தில் வைப்பதைப் பார்க்கும் போது இவர்கள் உயர்வு என்பதற்கு இவர்கள் இதுகாறும் கற்பித்த வரைமுறைகளை நாம் 'இனம்' காண முடிகிறது. தமிழனாகப்பிறந்து தமிழுணர்வு உள்ள அனைவரும் திராவிடர்கள் என்று பலர் பலமுறையில் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலவே பயனற்றதாக நினைக்க முடிகிறது. திராவிடத்தை தூற்றுகிறார்களே 'அரிப்பு' சொறிந்து கொள்ளட்டுமே என்று அப்படியே விட்டுவிடலாமா ? என்றால் முடியவில்லை. தமிழர் இலக்கியத்திலும், தமிழர் வழிபாட்டு முறைகளிலும், தமிழர் வணங்கும் தெய்வங்களிலும் இவர்கள் ஆபாசம் கற்பிப்பது எல்லையைக் கடந்த பெரும் தொல்லையாக இருக்கிறது என்பது கண்கூடு. பட்டுப் போன மனுதர்ம மரத்தின் ஆனி வேர்கள் துளிர்காதா ? என்ற இவர்களின் எதிர்ப்பார்ப்பில் இவர்கள் செய்யும் திரித்தலுக்கு அளவின்றி போய் கொண்டே இருக்கிறது.

திராவிடத் தலைவர்களை திட்டுகிறேன் என்ற போர்வையில் எழுதும் இத்தகைய விசமிகள் உண்மையிலேயே பெரியாராலும், கருணாநிதியாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்றால் அது இல்லை. எங்கோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இன்றும் தமிழ்நாட்டில் தற்பொழுதும் பூணூல் அறுக்கப்படுகிறது, 8 ஆம் நம்பர் நூல்கண்டு விற்பனையை திராவிட அரசுகள் தடை செய்தது பார்பனர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டது என்பது போல் நினைத்துக் கொண்டு தமிழக வரலாறு அறியாமல் தூற்றிவருகிறார்கள். இவர்களின் இழிசெயலுக்கு ஆதரவாக இந்து என்ற போர்வையில் அப்பாவிகளை ஒருங்கினைக்க வேதங்கள், வாதங்கள், பேதங்கள் என்று உளரிக் கொட்டி பழம் பெருமை வாதத்திற்கு பச்சிலை வைத்தியம் பார்த்து உயிர்பிக்க முயல்கிறார்கள்.

சைவம் வைணவம் என்று இவர்களின் சமயங்கள் இன்றும் பிரிந்தே கிடக்கின்றன, மனுதர்மத்தை தாங்கிப் பிடிக்கவே இந்து என்ற சொல்லாடலில் அதை சாமார்த்தியமாக பாதுகாக்கவே அடிக்கடி இவர்கள் ஹிந்துக்கள் என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறார்கள். காலத்துக்கு ஒவ்வாதவை என்று பலரும் விமர்சித்து தூற்றக்கூடிய இதிகாசங்கள் இவர்களுக்கு மட்டும் புனிதமாக தெரிவதற்கு வருண ஆதாயமே காரணமின்றி வேறு என்ன இருக்க முடியும்?. அன்று சூத்திரரும், பஞ்சமரும் படிக்க கூடாது என்ற வேதங்களை இன்று அனைவருக்கும் பொது என்று சொல்லவது பார்பனீயம் இறங்கி வந்ததைக் காட்டுகிறதா ? அழிந்து போகாமல் தற்காக்க அது ஒரு யுக்தி மட்டுமே.

இதையெல்லாம் செய்பவர்கள் ஒரு பெரிய திட்டத்துடன் செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. இரத்ததில் ஊறிய பார்பனீய அழுக்கு இவற்றிற்கு மாற்றாக சிந்திக்கவே செய்யாது என்பதைத்தான் நாம் கண்ணுற முடிகிறது. முதலில் இந்திய தேசியம் என்று சொல்வார்கள், பின் இந்து என்று சொல்வார்கள் இறுதியில் பார்பனீயத்தில் மட்டுமே இருப்பார்கள். சோ மொட்டைத் தலையில் முடி வளராவிட்டால் அதுவும் திராவிட பெத்தடின்களின் சதி என்று பேசுவார்கள். சரி திராவிட வெறுப்பை உமிழ்ந்தாயிற்று அடுத்து திராவிடர்களின் பற்றான தமிழும், தமிழ் தெய்வங்களும் இருக்கின்றன என்ற ரீதியில் இவர்களின் கோணல் பார்வையின் குறி மாறிக் கொண்டே இருக்கிறது. பார்பன புலவர்கள் தமிழில் எழுதிய ஆபாச புராணங்களைக் காட்டி தமிழ் தெய்வம் முருனைப் பார் ஆபாச ஆண்டியாக நிற்கிறார்.

இதுவா உயர்ந்த தமிழ் பண்பாடு ? என்று கேள்வி எழுப்புவார்கள், சிதைத்து புண்ணாக்கி விட்டு சீழ் வடிகிறது உன்காலில் என்று சொல்லும் இவர்களது குத்தல் வெறும் காது குத்தல் அல்ல கண்ணையும் சேர்த்து குத்துவது தான்.கோவிலில் ஜே ஜே என்று கூட்டம் வழிந்து எங்கள் வருமானத்துக்கு பங்கம் இல்லைப் பார் என்று இவர்கள் மார்தட்டுவதைப் பார்க்கும் போது இன்னும் பெரியாரின் தேவை நமக்கு அதிகமாகவே வேண்டி இருக்கிறது என்பதைத் தான் அது நமக்கு சொல்கிறது. இவர்கள் சொற்பொழிவுகள் அனைத்திலும் பகவானை நிந்தவர் படும் பாடு இவை இவை என்று பயமுறுத்தல் என்ற வகையில் தான் இருக்கிறது. பகவானை என்று மட்டும் எடுத்து கொள்ள முடியுமா ? பகவானே பார்பனை வணங்கியதாக இராம காதை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக சொல்லி வருவது பார்பன நிந்தனை பற்றியது, பிரம்மஹத்தி தோசம் என்ற பயமுறுத்தலைச் சொல்லி தங்களுக்கு எதிர்ப்பு வராமல் இருக்க தந்திரங்களை செய்து வருகிறார்கள். பார்பனர்களுக்கு பங்கம் வரக்கூடாது என்ற எல்லாவித முட்டுக் கட்டைகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் இன்றைய இந்துமதம் பார்பனீய மதமின்றி வேறென்ன ? இன்றைய பார்பனர்கள் பொதுவாக எல்லோரிடமும் பழகுகிறார்கள் என்றால் சமத்துவம் பார்கிறார்கள் என்ற சொல்ல முடியுமா ? தீண்டாமை பேசினால் செவிட்டில் அறைவிழும் என்பதால் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்கள். பார்பனீயம் இன்றைக்கு செத்தபாம்பு ? இருக்கலாம் அதன் விசப்பற்கள் சாகவில்லை. கோவில்களும், பெரிய மதில்களும் இன்னும் பார்பனீயத்தின் கோட்டையாகவே இருக்கிறது. அதன் பலமான கதவுகள் திறக்காது, பயன் கருதி பராமரிப்புக்காக அவ்வப்போது சமத்துவம் பேசும் பார்பனீயம் கோட்டைக்குள் யாரையும் அனுமதிக்காது. மனுதர்மமும், பார்பனீயமும் கருவரை சாமியைக் காவல் வைத்துக் கொண்டு மந்திர சூனியத்தில் தந்திரமாக தற்காத்துக் கொள்கின்றன.

அவரவர் தொழிலை அவரவர் செய்வது மனுநீதி என்பர் ஆனால் அவர்கள் மட்டும் பணம் கொழிக்கும் தொழில்கள் எதுவாக இருந்தாலும் மனுவுக்கு பரிகாரம் செய்துவிட்டு அடுத்தவர் பிழைப்பை கெடுக்க அலைவர். விதிக்கப்பட்டது என்று சொல்லும் பார்பனீயம் வீதிக்கு வந்து வேதாந்தம் பேசுவது எதனால் ? சத்திரியன் செய்யும் தொழிலுக்கான படிப்பை படித்துவிட்டு இடஒதுக்கீடு அபத்தம் என்று பேசுவது என்பது எதனால் ? அவர்கள் தாங்கிப் பிடிக்கும் மனுதர்மம் அவர்களுக்காக இல்லை என்று தெளிவாகிறது. காவல்காரர்களில் எத்தனை பார்பனர் இருக்கிறார்கள் ? சிப்பய்களாக எத்தனை பார்பனர்கள் இருக்கிறார்கள் ? இவை எல்லாம் கடை நிலை ஊழியம் என்று இவர்கள் செய்வது இல்லை. இவர்களின் தேசப் பற்று, நாட்டுப் பற்று ஐபிஸ், ஐஏஎஸ் வேலைகளை குறிவைத்து மட்டும் இருக்கிறது, பணமும் அதிகாரமும் உள்ள பதவிகளுக்கு மட்டும் ஏன் பார்பனர் போட்டி இடவேண்டும் ? பார்பனன் மூட்டை தூக்கியதாகவோ, செங்கல் சுமந்ததாகவோ யாரேனும் பார்த்திருக்கிறீர்களா ? ஆனால் அவர்கள் பார்பனர் மிகவும் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று புலம்புவார்கள்.

சித்தாள் வேலை கேவலம் என்பது போல் ஒரு பெரியவர் எழுதி இருக்கிறார். இவர்களுக்கு கேவலாமாக இருக்கும் வேலைகளைத்தான் இன்னும் பலர் செய்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாதது அல்ல. சளி இருக்கும் வரை மூக்கு சிந்துவோம் என்பது போல் தான் இருக்கிறது இவர்களின் ஏழ்மை நிலை பற்றிய புலம்பல்கள். பிச்சை எடுத்துதான் வாழவேண்டும் என்ற மனுநீதியை பார்பனர்கள் மீறிவிட்டு அதே மனுநீதியை மற்றவர்களிடம் பெருமையாக பேசுவதும் தின்ணிக்க முயல்வதும் ஏன் ? மனுநீதிப்படி பார்பனன் தொழில் செய்தால் இங்கு இடஒதுக்கீடே தேவையற்றதாகி இருக்கும்.

திராவிடர் என்ற சொல்லில் தென்னகத்தாரை அடக்கிவிட்டு இன்று அதே திராவிடர்கள் என்ற பெயரில் ஒன்றுபட்டவர்களிடம் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை என்கிறார்கள். எல்லாம் இல்லை ஆனால் பார்பனன் பாதிக்கப்படக் கூடாது என்ற சிந்தனையின் ஊற்று என்னவாக இருக்கிறது ? பார்பனர்கள் தாங்கள் தலித் வீட்டில் உண்டோம் என்று பெருமையாக சொல்லும் போதே அவர்கள் தான் பார்பனீயத்தில்தான் இருக்கிறார்கள்.

தலித் வீட்டில் உண்ட பெரியவர்கள் என்று இவர்களை நினைக்கவேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். எல்லோரும் மனிதர்களே, அவனை தலித் என்ற அடையாளத்தில் வைத்துக் கொண்டு அவனுடன் உண்டேன் என்று சொல்வது பெருமையா ? உண்மையில் பெருமைபடுவது, அல்லது பாராட்டுதல் என்பது இவர்களின் கீழிருக்கும் வருணங்களில் எதோ ஒன்றில் இவர்கள் திருமண சம்பந்தம் கொண்டிருந்தால் பெருமை படலாம். சேர்ந்து உண்டது, சினிமா பார்ப்பதும் சமத்துவம் என்கிறார்கள். இவை எல்லாம் சமூக ஒழுங்காக இருக்க வேண்டியவைகள். அதற்கு இவர்கள் சிறப்பு செய்தது போல் காட்டுவதே நான் தலித் வீட்டில் தண்ணீர் அருந்தினேன் என்று சொல்வது. அவன் அறுத்த நெல்லில் தான் நைவேத்யம் பண்ணுகிறோம் என்பது தெரியாது போலும்.

No comments: