Monday, January 22, 2007

பரட்டையன் பாபாவும் துரைமுருகனும்!

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்:
நமது நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான சென்னையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டம் பாபா இங்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பதால் தான் கூடியுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும், வேறு எந்த நாட்டிலும் பாபாவை போல நம்மை வழிநடத்தக் கூடியவர், சரியான பாதையில் அழைத்துச் செல்லக் கூடியவர் யாரும் இல்லை

பாபா நமக்கு செய்தவற்றிற்காக நாம் அவருக்கு நன்றி கூறுவது இயலாத காரியம். மனிதன் வாழ்வதற்கு ரொட்டி மட்டும் போதாது. நீர், காற்று தேவை. இவற்றையெல்லாம் விட மேலான ஒன்று நாம் வாழ்வதற்கு தேவைப்படுகிறது. அதனை பாபாவால் மட்டுமே தர முடியும். வேறு யாராலும் முடியாது.

இந்தியா பனி படர்ந்த இமயமலையாலும், மூன்று கடல்களாலும் சூழப்பட்டிருந்தாலும், கங்கை, யமுனை, கோதாவரி, துங்கபத்ரா, நர்மதை போன்ற நதிகள் இருந்தாலும், சில நேரங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். காற்றும் நீரும் அனைவருக்கும் பொது. இதனை சரியான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவற்றை வீணடிக்கக் கூடாது. கங்கை நீர் வீணாகாமல் நமக்கு கிடைப்பதற்கு பாபா உதவியிருக்கிறார். அனைத்து கால்வாய்களின் கரைகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.

நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ ஆகியவற்றையும் விடுத்து இன்னும் நிறைய செய்ய பாபாவால் முடியும் என்றால் ஏன் இந்தியா கவலைப்பட வேண்டும்? ஏன் அமெரிக்கா போல் இன்னும் பெரிய வல்லரசு ஆகாமல் இருக்கிறோம்? இன்னும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்காக பாபாவிடம் சொல்லி செய்யச் சொல்லலாம் இல்லையா? உலக வங்கியில் உள்ள இந்தியாவின் கடனை அடைக்கச் சொல்லலாமே? உழைக்காமல் மாதம் 800 கோடி சம்பாதிக்கும் பாபாவால் இந்தியாவின் கடனை அடைக்க முடியும் அல்லவா?

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்:
போற்றுதலுக்கும், பாராட்டுக்கும், பெருமைக்கும் உரிய அருள்மிகு சத்ய சாய்பாபாவுக்கு சென்னை மக்கள் சார்பாக நடைபெறுகிற பாராட்டு விழாவில் நானும் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மொழிக்கோ மட்டும் சொந்தமானவர் அல்ல. அவருக்கு இந்த நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். இனம், மொழி ஆகியவற்றை கடந்தவர் சாய்பாபா.

ஆந்திரா பகுதியில் கிருஷ்ணா கங்கை கால்வாயை பலப்படுத்தியது போல தமிழக பகுதியிலும் கரையை பலப்படுத்த பாபா உதவ வேண்டும். கூவம் ஆற்றை நறுமணம் வீசும் வகையில் மாற்றித் தர வேண்டும். வடஆற்காடு மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிலால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பாபா உதவ வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை பாபாவிற்கு வைக்கிறேன். சாய்பாபா நேற்று முதல்வர் இல்லத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். கிருஷ்ணாவே வந்ததை போல தோன்றியது.

சாய்பாபா எதையும் முன்கூட்டியே கணித்து விடுவார் என்று சொன்னார்கள். நேற்று முதல்வர் இல்லத்திற்கு வந்த போது எனக்கும், தயாநிதிக்கும் தனது ஆன்மிக சக்தியால் மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். முதல்வருக்கு தரவில்லை. அவர் அண்ணா கொடுத்த மோதிரத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால் வேறு மோதிரத்தை ஏற்க மாட்டார் என்பதை முன்னதே அறிந்துள்ளதால் தான் தரவில்லை.

அண்ணே, உங்ககூட ஒரே தமாசுங்கண்ணா! சட்டசபைல ஜெயலலிதா புடவையை மட்டும்தான் அவுக்க உங்களுக்கு தெரியும்னு நினைத்தேன். ஆனால் வடிவேலு போல நகைச்சுவை சொல்லவும் தெரியும் என்று நிரூபித்து இருக்கிறீர்கள்.

ஒரே நொடியில் இரண்டு மோதிரம் தயாரிக்க சாய்பாபாவால் முடியும் என்றால்... ஒரு நாளைக்கு 24 மணி நேரம்... அதாவது 1440 நிமிடங்கள்... அதாவது 86400 நொடிகள். ஒரு நொடிக்கு 2 மோதிரம் என்றால் ஒரு நாளைக்கு மொத்தம் 172,800 மோதிரங்கள் தயாரிக்க அவரால் முடியும். ஒரு மோதிரம் 1 சவரன் என்று வைத்துக் கொண்டால், மொத்தம் 1382400 கிராம் தங்கமாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வெட்டி எடுக்கும் கோலார் தங்கச் சுரங்கத்தில் கூட இவ்வளவு தங்கம் கிடைப்பது இல்லையாம். இவ்வளவு தங்கம் தயாரிக்கும் சாய்பாபாவினை வளைத்துப் போட்டு இந்தியாவை.... அல்லது குறைந்த பட்சம் தமிழ் நாட்டையாவது முன்னேற்றலாமே மிஸ்டர் துரைமுருகன்?

எழுதியவர்:விடாதுகருப்பு:


No comments: