Tuesday, January 16, 2007

சோ.ராமசாமியின் துக்ளக் கூட்டம்!

கடந்த 13/1/2010 ம் ஆண்டு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் துக்ளக் வாசகர்களின் கூட்டம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு அதிகாலை 5 மணிக்கே சென்று துண்டு விரித்து படுத்திருந்தேன். கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துவிடும் என்று எனது நண்பர் ஒருவர் ரகசிய தகவல் கொடுத்ததால் இந்த ஏற்பாடு.

அந்த அதிகாலை வேளையிலும் துண்டு, சட்டை, பூணூல் என ஆளுக்கு ஒன்றாக கழட்டிப் போட்டு இடம் புக்கிங் செய்திருந்தனர். எனக்கு இடம் கிடைக்காததால் தரையில் துண்டை விரித்துப் படுத்து இருந்தேன். மாலை 6 மணிக்கு ஒருவர் வந்து தட்டி எழுப்பி விட்டார். பார்த்தால் கூட்டம் ஆரம்பித்து இருந்தது.அப்போதுதான் அரங்கம் முழுதும் கவனித்தேன். நிறைய பட்டை மற்றும் நாமம் போட்ட துக்ளக் வாசகர்கள். விஷ்ணுவா இல்லை சிவனா, பட்டையா இல்லை நாமமா என்று அடிக்கடி அடித்துக் கொள்ளும் பிராமனர்கள் சோ.ராமசாமி விடயத்தில் ஒன்று சேர்ந்து வந்திருப்பது அவர்களின் நல்ல மனதைக் காட்டுகிறது. அவர்களுக்கு இந்து என்ற மதத்தின் மீது இருக்கும் பாசத்தையும் கீதையின் உபதேசங்களையும் நான் நினைத்துப் பார்த்து பெருமை பட்டுக் கொண்டேன்.

மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்தின் பேரன் யாத்ரா திறந்த மார்பும் பூணூலுமாக முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி கைகளைக் கட்டி அமைதியாக அமர்ந்து இருந்தார். தள்ளு வண்டியில் கொண்டு வரப்பட்ட சோ.ராமசாமிக்கு குருமூர்த்திக்கு அடுத்த இடம் ஒதுக்கப் பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கென ஆர்.எஸ்.எஸ் எனும் நற்பணி மன்றத்தின் மூத்த தலைவர்கள் பலர் தில்லியில் இருந்து அழைத்து(!) வரப்பட்டனர். மத்திய அரசியலில் இருக்கும் வெங்காயநாயுடு மன்னிக்கவும்... வெங்காய நாயுடுவின் மகன் சோ.ராமசாமிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். இந்து மதத்தினைக் காக்க வந்த கடவுள் பால்தாக்கரே சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார்.சோவைத் தூக்கிச் சென்று மைக்முன் அமர வைத்தனர். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி தனது உரையை ஆரம்பித்தார்.

அப்போது தனது கடந்த கால அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். கேட்கவே சுவையாக இருந்தது. ராஜாஜியுடனான நட்பு, காமராஜர் பேசிய பொதுக்கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொண்டது, எம்ஜிஆர் தன்னிடம் உதவி கேட்டது, ஜெயலலிதா தன்னைக் கட்டிப்பிடித்து அழுதது, ரஜினி காந்த் தனக்கு ஆலோசனை குருவாக இருக்குமாறு கெஞ்சியது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்னார்.

அப்போதைய இந்திராகாந்தியின் அடக்குமுறையை அழிக்க கருணாநிதி தன் கால்களில் விழுந்து உதவி கேட்டதை சோ சொன்னபோது அரங்கத்தில் பலத்த கைதட்டல்.குருமூர்த்தியும் தானும் பல பெரிய அரசியல் புள்ளிகளின் தொடர்பு இருந்தும், தனது மகன் கட்டிய முறைகேடான கடைத்தொகுதிக்காக யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றதில்லை என்பதை பொதுப்படையாக அறிவித்தார் சோ. தன்மானம் காத்த வேந்தல் என்று யாரோ கதவுக்குப் பின்னால் இருந்து கத்திய ஒலி அரங்கத்தில் எக்கோவாக எதிரொலித்தது. தன்னைப் போலவே செயல்கள் செய்துவரும் நம்மாத்து அம்பி குருமூர்த்தியை சோவுக்கு பிடித்துப் போனதில் எந்தவித ஆச்சர்யமும் எனக்கு இல்லை.அடுத்து வாசகர்களை அழைத்தார்.

முதலில் பேச வந்திருந்தவர் தாம்பரத்தில் இருந்து சூர்யநாராயண சாஸ்திரிகள். தமிழகத்தில் நடக்கும் ஜாதி அரசியலைப் பற்றிக் கேள்வி கேட்டார். அதற்குப் பதில் அளித்த சோ அவர்கள், "ஜாதி என்பது மனிதரை வகைப்படுத்துவதற்காகத்தானே தவிர வாக்கு வாங்குவதற்காக அல்ல; கீதையின் சாரத்தைப் பயன்படுத்தி வர்ணங்களை வைத்து ஜாதிகள் உருவானது. மக்கள் தொகைக் கணக்கெடுக்க ரொம்பவும் வசதியாக இருந்ததால் அதனை நாம் பின்பற்றினோம். லாரியில் ஏற்றினால் நான்குபேர் குறைகிறார்கள் என்பதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை பின்னிறுத்துவது தவறு. மக்கள் ஜாதி பார்க்காமல் பார்ப்பனத் தலைமை கொண்ட பாஜகவுக்குகோ அல்லது ஜெயலலிதாவுக்கோ வாக்களித்து இருந்தால் தமிழ்நாட்டில் பாலாறு ஓடி இருக்கும். வாக்களிக்கத் தவறியதால் இப்போது அனுபவிக்கிறார்கள்." என்று தனது பூணூலை திருகியவாறு பதில் சொன்னார்.

அடுத்து மந்தவெளியில் இருந்து ராமானுஜம் என்ற வாசகர் கேள்வி எழுப்பினார். அவர் கேட்டது, "இலவசம் நிலைத்து நிற்குமா?"இதற்குப் பதில் அளித்த சோ அவர்கள், "இலவசம் என்றைக்குமே நிற்காது. அது வென்றதாக சரித்திரம் இல்லை. இலவச உணவுத் திட்டத்தினை ஆரம்பித்து வ்ஐத்த காமராஜரையே தோற்கடித்தார் சீனிவாசன் என்ற இளைஞர். இதில் இருந்தே தெரியவில்லையா இலவசம் கண்டிப்பாக தோற்கும்!" என்றார். கூட்டத்தில் பயங்கர கைதட்டல்.

அடுத்து சேத்தியாதோப்பில் இருந்து நீலகண்ட சாஸ்திரிகள் என்ற நெடுநாளைய வாசகர், "தற்போதைய ஸ்டாலின் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய சோ அவர்கள், "திமுக கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தனக்கு கார்ட்டூன்(கேலிச்சித்திரம்) போட மேட்டர் கிடைக்கும்!" என்றும் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில் கிண்டல் செய்தால் பத்திரிக்கை சுதந்திரத்தை தடைசெய்து, சபாநாயகர் மூலம் உத்தரவு பிறப்பித்து ஜெயிலில் தள்ளிவிடுவார்கள் என்று அருகே இருந்த குருமூர்த்தி காதில் கிசுகிசுத்தார்.

அடுத்து பேசிய பல்லாவரம் வாசகர் வெங்கடரங்கன், "ரஜினிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? நதிநீர் இணைக்க அவர் என்ன திட்டம் வைத்துள்ளார்?" என்று கேட்டார். உடனே சற்று கோபமாக ஆரம்பித்த சோ, "ரஜினியும் தானும் பால்ய கால சிநேகிதர்கள்!" என்று சொன்ன அவர் மேலும் ரஜினியுடன் கிட்டிப்புல் அடித்து விளையாண்டது, கோலி குண்டு போன்று பல விளையாட்டுக்களை ரஜினியுடன் விளையாண்டதைப் பற்றிச் சொன்னார். நதிநீர் இணைப்புக்காக ரஜினியிடம் பெரும் திட்டம் இருப்பதாகவும் 2050க்குள் அது செயல்படுத்தப்படும் என்ரும் சொன்னார். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் திரரவிடர்களே சுற்றிச் சுற்றி ஆண்டு வருவதால் ரஜினியின் திட்டம் கிடப்பில் கிடப்பதாக தன் கவலையைத் தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தெற்குவாசல் பகுதியில் இருந்து வந்திருந்த கல்யாணராமன் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சியில் நடைபெற்ற பெரியார் சிலை திறப்பு பிரச்னைகளைப் பற்றி நினைவு கூர்ந்து விட்டு, இப்போது பாலக்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகிலும் பெரியார் சிலை திறக்க இருக்கிறார்கள் என்று வேதனையோடு கூறினார்.அதற்குப் பதில் அளித்த சோ அவர்கள், பெரியார் ஒரு சிலையை உடைத்தார், தெருவுக்குத் தெரு, முக்கத்துக்கு முக்கம் பிள்ளையார் சிலைகள் உருவாயின. அதேபோல் நாம் ஒரே ஒரு பெரியார் சிலையை உடைத்தோம், இப்போது தெருவுக்குத் தெரு பெரியார் சிலை திறக்கிறார்கள். பெரியாரை காவியுடுத்தச் செய்து சிவனடியாராக ஆக்கலாம், அப்போதுதான் கடவுள் சிலைகளை உடைக்க மாட்டார் என்றும் அரசியல் சாணக்கியர் ராஜாஜி அவர்கள் தன்னிடம் தனிப்பட முறையில் கூறியதையும் சொன்னார். பாலக்கரையில் வர இருக்கும் பெரியார் சிலையை உடைக்க இருப்பவர்களுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்றும் இதுபற்றி அடுத்த துக்ளக் இதழில் கார்ட்டூன் வருமென்றும் உறுதி அளித்தார் சோ.

அடுத்ததாக கன்னியாகுமரியில் இருந்து வந்திருந்த சேஷாத்ரி என்ற வாசகர், சோ எழுதிய ஹிந்துமகா சமுத்திரம் என்ற நூல் அருமையான போதனைகளைச் செய்வதாகவும் அதனை அரசுடைமையாக்கி எல்லா பள்ளிகளிலும் கீதையின் தத்துவத்தினை இறைவணக்கமாகப் பாட அரசு உத்திரவிடவேண்டும் என்றும் சொன்னார்.அதற்குப் பதில் அளித்த சோ அவர்கள், நடப்பது திராவிட ஆட்சி என்பதால் திட்டமிட்டு தனது அறிவினை புறக்கணிக்கிறார்கள் என்று வேதனையோடு முடியில்லா தன் தலையைத் தடவியபடி சொன்னார். மேலும் பேசிய அவர் மகாபாரத்தின் முக்கிய பகுதிகளைத் தங்கள்(குல) வசதிக்கு ஏற்றபடி கற்பனையாக ஜோடித்து எழுதப்பட்டதே ஹிந்துமகா சமுத்திரம் என்று சொன்னார். அடுத்து வர இருக்கும் அருமைத் தங்கை ஜெயலலிதாவின் ஆட்சியில் தனது எழுத்துக்களை, எல்லாப் பாடப்புத்தகங்களிலும் வைத்து 'படி படி' என்று தலையிலேயே எல்லாக் குழந்தைகளையும் குட்ட வேண்டும் என்றும் சோ அவர்கள் சொன்னார்கள்.

அடுத்து பேசிய மாம்பலம் ஹரிசங்கர், "இந்த அரங்கம் இட வசதி போதாது என்றும் அதிக வசதி கொண்ட வேறு இடத்தினை தேர்வு செய்து இருக்கலாம் என்றும்" ஆலோசனை சொன்னார்.இதற்குப் பதில் அளித்த சோ அவர்கள், "முதலில் தான் சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் மாநாடை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அரசு சிறுபான்மையினர் என்று புறந்தள்ளி தனது கனவில் மண்னைப் போட்டதாகவும்" சொன்னார். மெரினா என்றால் சமூக விரோதிகள் மணலை அள்ளி துக்ளக் வாசகர் தலையில் கொட்டி கலகம் விளைவிக்கலாம் என்று காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்ததையும் அரசு சுட்டிக் காட்டியதாக சொன்னார். மேலும் 'இதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் சட்டமன்ற அவையையே தனக்கு வாடகைக்கு விட்டிருப்பார்' என்று பெருமையாக பாராட்டிப் பேசினார்.

அடுத்த துக்ளக் மாநாடு ஆட்சி மாறினால் சட்டமன்ற அவையில் நடக்கலாம் என்பதை கோடி காட்டியதால் வாசகர்கள் மனதில் பெரும் சந்தோஷம்.பிறகு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி சோ அவர்கள் பேசினார். தற்போதைய ஸ்டாலின் அரசு மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா குறிப்பிட்டதை உண்மைதான் என்றார்.

ஸ்டாலின் ஒரு காலத்தில் மைனராக இருந்தவர். எனவே அவர் செய்யும் ஆட்டி மைனாரிட்டி ஆட்சி என்றார் பலத்த கரகோஷத்துக்கு இடையில். கம்யூனிஸ்ட்டுகளை சேர்த்துக் கொண்டு கூட்டாக ஆட்சி ந்அடத்தினாலலது தனிப்பெரும் சக்தி என்றும் இப்போது இருப்பது மைனாரிட்டிதான் என்றும் தனது கைத்தடியால் அடித்துச் சொன்னார். இடையில் பாபநாசம் சிவன் அவர்களின் கர்நாடக சங்கீதம் ஒன்றினை எடுத்து விட்டார். தான் பாபநாசம் சிவனின் கர்நாடக வாரிசு... அடச்சே கர்நாடக இசை வாரிசு என்று குறிப்பிட்டுச் சொன்னார். சும்மா சொல்லப்படாது, சோவுக்கு நல்ல குரல் வளம். ஏழுகட்டை ஸ்ருதியில் உச்சஸ்தாயில் அவர் ஆரோகனம், அவரோகனம் எல்லாம் கலந்து பாடியது வாசகர்களை மகிழ்ழ்சிப் படுத்தியது.

தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தில் நன்றாக செயல்படுவதாகவும் இதற்கு முன்பிருந்த பாஜகவினரின் கொள்கைகளைக் காப்பியடித்ததே முக்கிய காரணம் என்றும் சொன்னார். அந்நிய தீவிரவாதிகள் விஷயத்தில் மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடப்பதாக கூறினார். குட்ரோச்சி சோனியாவுக்கு வேண்டியவர் எண்ற ஒரே காரணத்தால் மட்டுமே போபார்ஸ் விஷயத்தில் மத்திய அரசு குளறுபடிகள் செய்ததாக 1500 வது தடவையாக குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு பரிவு காட்டி அவர்களுக்கு ஆதரவாகப் பேசியது வருத்தத்திற்குரிய செயல் எண்றும் சொன்னார். புலிகல் தமிழர்கள் அல்ல என்றும் அவர்கள் ராவணன் ஆண்ட மண்ணில் இருப்பதால் அவர்களும் ராவணனைப் போல கொடிய மனம் கொண்டவர்கள் என்றும் சோ குறிப்பிட கூட்டத்தில் இருந்த எல்லா வாசகர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

தற்போது நல்ல முறையில் ஆட்சி செய்வது குஜராத்தில் நடக்கும் மோடி ஆட்சி மட்டுமே என்று கூறினார். பழைய மோடியின் மூத்த மகன் புது மோடியும் தனது அப்பாவைப் போலவே 2009ல் ரயில் எரிப்புச் சம்பவங்களை முன்னின்று நடத்தியவர் என்று எதிர்க் கட்சியினர் சொல்வது அப்பட்டமான பொய். அவரா அங்கு சென்று எரித்தார்? அவரது கட்சியினர் எரித்ததற்கு மோடி என்ன செய்வார் பாவம் என்று சோ "உச்" கொட்டினார். அங்கே கூடி இருந்த எல்லார் வாயில் இருந்தும் "இச்" சவுண்டு ஸ்டீரியோ எபெக்டோடு வெளிவர கமலஹாசன் படத்துக்கு வந்ததுபோல ஒரு உணர்வு எனக்கு. இளைய மோடியின் மேல் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சோ, விசாரணைக் கமிஷனின் தலைவர் என்ன யோக்கியமானவரா? அவர் பொடிமட்டை வாங்கச்சென்ற பையனுக்கு லஞ்சமாக 25 காசு கொடுத்து மிட்டாய் வாங்கிக் கொள்ளச் சொன்னவர்தானே என்று கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார். அரங்கத்தில் திரும்பவும் பலத்த கரகோஷம்.

பிஜேபியினர் அத்வானி- வாஜ்பாய் சண்டையை கருத்தில் கொள்ளாமலும் பிரமோத் மஹாஜன் கொலையை மறந்து விடும்படியும் சொன்னார். மேலும் மஹாஜனின் மகன் போதை மருந்து உட்கொண்டது, விபச்சாரம் செய்தது, மனைவியை அடித்தது போன்ற செயல்களை மறந்து விடும்படியும் சொன்னார். நாம் சோர்வடைவது எதிரிகளுக்கு எந்த வகையில் உற்சாகமளிக்கும் என்று விளக்கினார். ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பாஜக போன்றவை இனைந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதுதான் ராமர் கண்ட கனவு என்றும் சொன்னார். இந்த நூற்றாண்டுக்குள்ளாவது ராமஜென்மபூமி அமையவேண்டும் என்றும் விரைவில் ராமர்கோவில் பல கோடி செலவில் கட்டப்பட வேண்டும் என்ரும் கோரிக்கை விடுத்தார். அப்போது, 'அது நடக்காமதானடா நானே திண்டாடுறேன்' என்பதுபோல பால்தாக்கரே புன்னகைத்தார்.

சினிமாக்களுக்கு தமிழ் பெயர் வைப்பதையும் அதற்கு தமிழக அரசு நிதி உதவி செய்வதையும் சாடினார். அடுத்து வரும் நம் அரசு சமஸ்கிருதத் தலைப்பு கொண்ட படங்களுக்கு வரிவிலக்கு அலிக்கும் என்று நம்பிக்கை அளித்தார். முதல் படமாக ராஜாஜி படம் இருக்கும் என்றும் படத்தை எடுக்க இருப்பது ஞானராஜசேகரன் என்றும் பண உதவி சென்னை ப்ராமண சங்கம் செய்யும் என்றும் கூறினார். மறுபடியும் பலத்த கைதட்டல்.தமிழக சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருமென்றும் அப்போது மூன்றாவது அணி என்ற பேசுக்கே இடமில்லை என்றும் பபஜகவும் காங்கிரசும் மோதும், ஆனால் இறுதியில் வெல்லப்போவது பாஜகதான் என்று தனது ஆசையை ஆரூடமாகக் கூறினார்.

அடுத்து ஈரான் அதிபர் கடாமியைத் தூக்கில் போட்டது பற்றிப் பேசுகையில் அவரைச் சரியான முறையில் உலக சட்டங்களுக்கு ஏற்ப விசாரித்துதான் அபுஹரீப் சிறையில் வைத்து அமெரிக்கா தூக்கில் போட்டதாகச் சொன்னார். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்யாக காட்டிக் கொண்டார், அதனால் அதன் பயனை அவர் அனுபவித்தார் என்று சோ சொன்னார்.

ஈரானிய எதிர்த்தரப்பு இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த 10 பேரை அவர் மிரட்டியதற்குக் கிடைத்த பரிசே இந்த தூக்கு தண்டனை என்றும் குறிப்பிட்டுச் சொன்னார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியே இது என்று கூறினார். இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களை அழிக்க இந்தியா முன்வரவேண்டும் என்று சோ அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

அதில்தான் இந்துவின்... மன்னிக்க இந்தியாவின் நலன் உள்ளது என்றும் சோ அவர்கள் கூறினார். சோவியத் யூனியன் பலமுறை அடாவடியாக ராக்கெட் விட்டபோது இந்தியா அதனைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததை சோ அவர்கள் சுட்டிக் காட்டினார்.

அன்புடன்,விடாது கருப்பு(மீதி அடுத்த பகுதியில்)
எழுதியவர்:விடாதுகருப்பு

No comments: