Tuesday, January 16, 2007

புஷ்ஷை தூக்கிலிட வேண்டும்மகாதிர் ஆவேசம்

புத்ரஜயா (மலேசியா): சதாம் உசேனுக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையை ஜார்ஜ் புஷ்ஷûக்கும் கொடுக்க வேண்டும் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மகாதிர் பேசுகையில், அமெரிக்க அதிபர் புஷ்ஷûம், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும்தான் உண்மையில் மிகப் பெரிய போர் குற்றவாளிகள். சதாம் உசேனின் கரங்களில் இருந்ததை விட இவர்களின் கையில்தான் அதிக ரத்தக்கறை உள்ளது.புஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சதாம் உசேன் சந்தித்த அதே 'கட்டப் பஞ்சாயத்து' முன்பு அவரையும் நிறுத்தி, சதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையை புஷ்ஷûக்கும் தர வேண்டும்.

பிளேர் ஒரு குற்றவாளி. சதாம் செய்ததை விட அதிக அளவிலான தவறுகளை பிளேர் செய்துள்ளார். அமைதியை ஏற்படுத்துவதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து படைகள் கொன்று குவித்ததை விட சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமானது தான் என்று காட்டமாக கூறினார் மகாதிர்.

No comments: