Monday, January 29, 2007

ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலம்

ராமர் பாலம் கடலுக்கடியில் 18 மைல் நீளமுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலமாகும். இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர்.

இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் ஏன்று குறிப்பிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது. பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன. திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம்.

படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில ஈடங்களில் உடைப்பை மீனவர்கள் ஐற்படுத்தியுள்ளனர். கற்கள் மிதக்கும் அதிசயம் ஈப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே ஊள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் ஏன்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் ஏன்று அழைக்கின்றனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

No comments: