Wednesday, January 17, 2007

ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாம்!


முன் எப்போதையும் விட ஜெர்மனியில் இஸ்லாம் அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக அதன் உள்துறை அமைச்சக கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி டெர் ஸ்பைகல் (Der Speigel) ஜெர்மன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


ஜெர்மனியின் மேற்கத்திய நகரமான ஸோயெஸ்ட் நகரில் ஜூலை 2005லிருந்து ஜூன் 2006 வரையிலான கால இடைவெளியில் 4000 ஜெர்மானியர்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என இவ்வறிக்கை தெரிவிக்கிறது. இது முந்தைய ஆண்டுகளை விட நான்கு மடங்கு வளர்ச்சியாகும்.


ஜெர்மனியின் இஸ்லாமிய ஆவணக்காப்பக மையத்தின் (Islamic Archive Central Institute) தலைவரான சலீம் அப்துல்லாஹ், இந்த இஸ்லாமிய வளர்ச்சிக்குக் குறிப்பாக எந்தக் காரணமும் கூற முடியாது எனக் கூறியுள்ளார். இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள் இஸ்லாத்திற்கெதிரானப் பிரச்சாரங்களை அதிகமாக முடுக்கி விடுவதே உண்மையான தேடல் உள்ளவர்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


பெர்லினைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஹம்மது ஹெர்சாக், இவ்வாறு இஸ்லாத்திற்கு மாறுபவர்களில் பெரும்பாலோர் ஆழமான கிறிஸ்தவப்பற்று கொண்டிருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 3.5 மில்லியன் முஸ்லிம்கள் ஜெர்மனியில் இருப்பதாக அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் பொதுவாக தற்போது நிலவும் இஸ்லாமிய எதிர்ப்பு அலைகளால் இவர்களும் வேலை வாய்ப்புகளில் பின்னடைவைச் சந்திக்கிறார்கள் என்றாலும் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாகவே உள்ளதாகவும் அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

No comments: