Tuesday, January 16, 2007

சதாம் உசேன் வாழ்க்கையில் ஏற்பட்ட எழுச்சியும் வீழ்ச்சியும் :

1937 ஏப்ரல். 28:- பாக்தாத் நகருக்கு அருகே உள்ள திக்ரித்தில் அல் அலாஜா கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் சதாம் உசேன் பிறந்தார்.1
956 அக். :- இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசுக்கு எதி ராக போராடினார். `பாத்' கட்சியில் சேர்ந்து தீவிரமாக போராடினார்.
1959:- மன்னர் ஆட்சி அகற்றப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு பிரதமர் அப்துல் கரீம் காசிமை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப் பட்டார். நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
1963 பிப். :- பாத் கட்சி புரட்சி செய்து ஆட்சியை பிடித்ததும் சதாம் நாடு திரும்பினார். ஆனால் 9 மாதத்திலேயே பாத் கட்சி ஆட்சி அகற்றப்பட்டது. சதாம் கைது ஆகி சிறையில் அடைக் கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே கட்சியின் துணை பொதுச் செயலாளராக அவரை தேர்ந்தெடுத்தனர்.
1968 ஜுலை:- பாத் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
1979 ஜுலை. 16:- அதிபர் அகமது உசேன் அப்பகர் பதவி விலகியதை தொடர்ந்து புரட்சி படை கவுன்சில் தலைவர் ஆனார்.
1980 செப். 22:- ஈரான் மீது படையெடுத்து சதாம் உசேன் இந்த எல்லைப்போர் 8 ஆண்டுகளாக நீடித்தது.
1988 மார்ச். 16:- ஈராக் படைகள் விஷவாயு தாக்குதல் நடத்தியது. இதில் ஈராக்கின் ஹால்பூஜா நகரில் உள்ள 5000 பேர் பலியானார்கள்.
1990 அக். 2:- குவைத் மீது போர் தொடுத்தார் சதாம்.
1991 ஜன. 17:- அமெரிக்காவினால் கூட்டுப்படைகள் ஈராக் படையை குவைத்தில் இருந்து விரட்டி அடித்தது. ஈராக் மீது ஐ.நா. பல்வேறு தடைகள் விதித்தது.
1995 :- சதாம் மீண்டும் ஈராக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 சதவீத ஓட்டுகள் அவருக்கு கிடைத்தது.
2002 அக். 15:- மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். குவைத் மீது படையெடுத்ததற்காக இதே ஆண்டில் டிசம்பர் 7-ந் தேதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
2003 மார்ச். 20:- பேரழிவு ஆயுதங்கள் தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.சதாமின் 2 மகன்களும் மோசல் நகரில் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ஜுலை 22-ந் தேதி அறிவித்தது.
2003 டிச. 14:- பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் அமெரிக்க படையினரிடம் சிக்கினார்.
2005 அக்.19:- ஷியா முஸ்லிம்கள் 148 பேரை துஜைல் நகரில் கொன்று குவித்ததாக சதாம் மீது பாக்தாத் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
2006 நவ. 5:- ஷியா மக்கள் 148 பேரை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
2006 டிச. 26:- சதாம்உசேன் அப்பீல் மனுவை நிராகரித்த மேல் கோர்ட்டு உறுதி செய்தது.
2006 டிச. 30:- பல்நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சதாம்உசேன் தூக்கில் போடப்பட்டார்.

No comments: