Wednesday, January 17, 2007

நீதிமன்றத்தின் பெயரால் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தாக்குதல்


நீதிமன்றத்தின் பெயரால் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும்! தொல்,திருமாவளவன் பேட்டி!!



நீதிமன்றத்தின் பெயரால் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.


திட்டக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


நீதிமன்றத்தின் பெயரால் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தாக்குதல் முறியடிக்கப்பட வேண்டும். 9-வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டம் அரசின் கொள்கை முடிவு. அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது. இத்தனை காலமும் இப்படித்தான் நடைமுறையில் இருந்து வந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு 9 நீதிபதிக​ளைக் கொண்ட குழுவிடம் விசாரணைக்கு வந்தது. இதில் 7 நீதிபதிகள் இடஒதுக்கீட்டை விரும்பாத உயர்மட்டத்தினர். எனவே, 9-வது அட்டவணையை நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்தலாம். 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இது சமூகநீதிக்கு எதிரான செயலாகும். அகில இந்திய அளவில் சமூகநல சக்திகள் ஒன்றுதிரளவேண்டும். தமிழக முதல்வர் கருணாநிதியிடம் சமூக நீதியைப் பாதுகாக்கும் ஒட்டு மொத்த பொறுப்பும், கடமையும் உள்ளது. எனவே முதல்வர் இது தொடர்பாக டெல்லியில் சமூகநீதியில் அக்கறை கொண்ட மாநில முதலமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றைக் கூட்டவேண்டும். எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யவேண்டும். இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து பேசுவோம் என்று தொல்.திருமாவனளவன் தெரிவித்தார்.

No comments: