Tuesday, January 30, 2007

காவிரி டென்ஷன் - கலக்கத்தில் முதல்வர்

காவிரி டென்ஷன் - கலக்கத்தில் முதல்வர்

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் எப்போதும் குடைச்சலைக் கொடுக்கும் 'காவிரி பிரச்சினை' மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் குடகு மாவட்டத்தில் தோன்றி, அங்குள்ள எட்டு மாவட்டங்களுக்கு அட்சய பாத்திரமாகத் திகழ்கிறது காவிரி. அப்படியே ஊருண்டோடி தமிழகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள பத்து மாவட்டங்களின் விவசாயிகளை வாழ வைக்கும் கடமை காவிரிக்கு இருக்கிறது.

தமிழகமும், கர்நாடகமும் காவிரிப் பயன் பெறுவதில் 'முக்கிய' மாநிலங்கள்! கூடவே கேரளாவும், புதுவையும் சிறிய அளவில் பயனடையும் மாநிலங்களாகக் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான உறவில், வருகின்ற பிப்ரவரி 5இம் தேதி முக்கிய நாளாக இருக்கப் போகிறது.

'காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வரும் அந்நாள் தமிழகத்திற்குப் பொன்னாளாக இருக்க வேண்டுமே' என்ற ஏக்கத்தில் தஞ்சை விவசாயிகள் டெல்லியை நோக்கி வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவிரி தொடர்பான முதல் ஓப்பந்தம், 1892ல் மெட்ராஸ் ஸ்டேட்டிற்கும், மைசூர் ஸ்டேட்டிற்கும் இடையில் போடப்பட்டது. மெட்ராஸின் 'முன் அனுமதி' இல்லாமல் மைசூர் ஸ்டேட் 'பாசன வசதிகளை' பெருக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்பது அந்த ஒப்பந்தத்தின் அருமையான ஷரத்து.

ஆனால் வம்பை முதலில் துவக்கியது மைசூர் ஸ்டேட்! 'கிருஷ்ணராஜ சாஹர் அணையைக் கட்டுவோம்' என்று அடம்பிடித்து 'தண்ணீர் தகராறை' முதலில் துவக்கி வைத்ததும் மைசூரே! இதை ஏதிர்த்தது மெட்ராஸ் அரசு. இதன்பிறகு 'காவிரி சர்ச்சை' கடல் தாண்டி இங்கிலாந்திற்குப் போனது. இம்! அன்று அங்கிருந்த 'மினிஸ்ட்ரி ஆப் இன்டியன் அபையர்ஸ்' முன்பு விசாரணைக்கு வந்தது.

அதன்படி 'மைசூர் கிருஷ்ணராஜ சாஹர் அணையைக் கட்டிக் கொள்ளும். மெட்ராஸ் ஸ்டேட் மேட்டூர் அணையைக் கட்டும்' என்று கூறப்பட்டது. அதுதான் 1924இம் வருட காவிரி ஓப்பந்தம். இதன்படி மைசூர் அரசு 1.10 லட்சம் ஏக்கர் நிலம் வரை பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்றும் 'அனுமதி' கொடுக்கப்பட்டது. ;இந்நிலையில் திடீரென்று 1959இம் ஆண்டு வாக்கில், காவிரி சம்பந்தமாக விவாதிக்க ஓரு சந்திப்பு நடத்த வேண்டும் என்று கொடி பிடித்தது மைசூர் அரசு. ஹேமாவதி, கபினி அணைகளையும் கட்டப் போகிறோம் என்றும், '1924ம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட 50 இண்டு கால ஒப்பந்தம்.

அது எங்களைக் கட்டுப்படுத்தாது' என்றும் கூறி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது. இதன் மூலம் அடுத்த சுற்றுத் தகராறுக்கான அஸ்திவாரம் போடப்பட்டது.

இது தொடர்பாக 5 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தன! அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. வேறு வழியின்றி 1971ல் இருந்த தி.மு.க. அரசு, 'நடுவர் மன்றம் அமைத்து, காவிரி விஷயத்தில் நியாயத் தீர்ப்பு காண வேண்டும்' ஏன்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தது.

ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போனது தமிழகம். அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி 'இரு மாநிலமும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசித் தீர்த்துக் கொள்ளலாம்' என்று கூறவே, 'நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் தமிழகம் போட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் 1974ல் கர்நாடகம், புதிய நிலைப்பாட்டை ஏடுத்தது. 'காவிரியே தமிழகத்திற்கு இல்லை' ஏன்ற ரீதியில் '1924ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது' என்று அடம் பிடித்தது. காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள மறுத்தது. இச்சிக்கலைத் தீர்க்க, 'உண்மை அறியும் குழு' அமைக்கப்பட்டது.

இரு மாநில முதல்வர்களின் கூட்டங்கள் நடந்தன. 'காவேரி ரிவர் வாட்டர் அத்தாரிட்டி' அமைக்கலாம் என்றெல்லாம்கூட முடிவு செய்யப்பட்டது. ஆனால் உருப்படியான ஒப்பந்தம் ஏதும் உருவாகவில்லை.

இக்காலகட்டத்தில் 1990ல் மீண்டும் நடுவர் மன்றக் கோரிக்கை கிளம்பியது. முதல்வர்களின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தின் உத்திரவுப்படி, பிரதமராக இருந்த வி.பி.சிங் தமிழகத்தின் 19 இண்டு காலக் கோரிக்கையை நிறைவேற்றினார். ஜூன் 2ம் தேதி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். இதன் முதல் தலைவராக இருந்தவர் நீதிபதி சித்த தோஷ் முகர்ஜி. தற்போது நீதிபதி எம்.பி. சிங் தலைவராக இருக்கிறார்.

ஆனால் 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்பது போல் 'இடைக்கால நிவாரணம்' வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கைவிரித்தது நடுவர் மன்றம். அதை ஏதிர்த்து சுப்ரீம் கோர்ட் சென்றது தமிழகம். பிறகு இடைக்கால ஊத்தரவை வழங்கியது காவிரி நடுவர் மன்றம். நதிநீர் தாவாக்களை விசாரித்த நடுவர் மன்றங்கள் வரிசையில் இடைக்கால தீர்ப்பு வழங்கியது காவிரி நடுவர் மன்றம் மட்டுமே!

'தமிழகத்திற்கு 205 டி.ஏம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற 11.2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மேல் இனி நீர்ப்பாசனப் பகுதியை கர்நாடக அரசு விஸ்தரிக்கக் கூடாது' என்பதுதான் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு!

ஆனால் கர்நாடக அரசு, இந்த இரு ஊத்தரவுகளையுமே மதிக்க மறுத்தது. இதற்கும் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை தமிழகத்திற்கு வந்தது. அங்கு நீதி கிடைத்தாலும், இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடத் தயக்கம் காட்டியது மத்திய அரசு. இதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு அரசிதழில் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

நல்ல வேளை! இயற்கை நம் பக்கம் நின்றது. கனத்த மழையின் காரணமாக அதிகப்படியான நீர் வரத்து ஈருந்ததால், 1991 லிருந்து 1995 வரை நமக்கு பிரச்சினையில்லை! காவிரி நதிநீர் நடுவர் மன்றம் சுட்டிக் காட்டிய 205 டி.ஏம்.சி.க்கும் மேலாகவே நமக்குத் தண்ணீர் கிடைத்தது. குறிப்பாக 1994ல் ஏறக்குறைய 396 டி.ஏம்.சி. வரை தண்ணீர் வந்தது. ஆனால் 1995ல் தென் மேற்கு பருவமழை பொய்க்கவே அந்த வருடம் 'பொல்லாத' வருடமாக மாறியது. பிறகு மீண்டும் போராட்டம்தான்!

இதனால் ஓரு கட்டத்தில் 'நடுவர் மன்றத் தீர்ப்பை' அமல்படுத்த பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் இணையம் அமைப்பது பற்றி பிரதமராக ஒ.கே. குஜ்ரால் இருந்தபோது முடிவு எடுக்கப்பட்டது. 'குஜ்ரால் வரைவுத் திட்டம்' என்று அதற்குப் பெயர்!

ஆனால் 'எந்த மாநிலமாவது அத்தாரிட்டியின் உத்தரவை செயல்படுத்தத் தவறினால் சம்பந்தப்பட்ட மாநில ஆணையின் கன்ட்ரோலை மத்திய அரசு எடுத்துக் கொள்வது' என்று இருந்த ஷரத்து, 'மாநில சுயாட்சி'க்கு விரோதமானது என்று சர்ச்சையானது.

இந்த 'வரைவுத் திட்டம்' பிறகு பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அமலுக்கு வந்தது. ஆனால் 'ஆணையின் கன்ட்ரோலை' எடுக்கும் ஷரத்து நீக்கப்பட்டு, காவிரி நதி நீர் இணையம் அமைக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும், கர்நாடக முதல்வராக இருந்த
ஜே.ஹெச்.பட்டீலும் இந்த முடிவை எட்ட உதவிகரமாக இருந்தார்கள்.

இந்த இணையத்தின் முதல் கூட்டம், பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது 28.10.1998ல் நடத்தப்பட்டது. அப்போது 'இடைக்கால உத்தரவின்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறதா?' என்பதை அளவீடு செய்வது மேட்டூர் அணையில் இருக்க வேண்டும் என்றது தமிழகம். ஆனால் கர்நாடகமோ, 'அதெல்லாம் முடியாது. பில்லிக்குண்டுவில்தான் அளவீடு செய்வோம்' என்று முஷ்டியை மடக்கியது.

இதன்பிறகு இரு மாநிலங்களின் 'வறட்சி காலக் கஷ்டங்களை' (க்ண்ள்ற்ழ்ங்ள்ள்) இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள 'திட்டம்' தயார் பண்ண வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இணையத்தை கர்நாடக மாநிலம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால் பல கூட்டங்களைப் போட்டும் பலனில்லை. எனவே இந்த விவகாரம் 2002 வாக்கில் உச்சத்திற்குப் போய் உச்சநீதிமன்ற நீதிபதிகளே, 'கோர்ட் உத்திரவை அமல்படுத்த முடியாத கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்' ஏன்றனர்.

ஆனாலும் வெறும் 0.8 டி.ஏம்.சி தண்ணீரை திறந்துவிட மறுத்துப் பிடிவாதமாக இருந்தது கர்நாடக அரசு. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது தமிழக அரசு. அதில் தீர்ப்பு சொல்லப்படும் தினத்தில் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்த கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா, 'நிபந்தனையற்ற மன்னிப்பு' கோரி, 0.8 டி.ஏம்.சி நீரை திறந்துவிட்டார்.

இப்படி ஓவ்வொரு கட்டத்திலும் கர்நாடகம் கொடுத்த 'காவிரித் தொல்லை' கொஞ்ச நஞ்சமல்ல! இந்நிலையில் இறுதித் தீர்ப்பை 'கலங்கரை விளக்காக' எண்ணி தமிழக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

''1892, 1924 இண்டுகளில் ஏற்பட்ட காவிரி ஒப்பந்தங்களை அலசும் நடுவர் மன்றம், அதில் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும். அதேபோல் கர்நாடகாவிலிருந்து எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்குப் போகிறது என்பதைக் கணக்கிடும் இடம், ஒவ்வொரு மாநிலமும் விஸ்தரித்துக் கொண்ட விவசாயப் பகுதிகள், அணைகள் கட்டியுள்ளது நியாயமானதா? இல்லையா?'' என்பது பற்றியெல்லாம் இப்போதைய தீர்ப்பில் பதில்கள் இருக்கும் ஏன்று கருதப்படுகிறது.

இதைவிட முக்கியமாக, 'வறட்சிக் காலங்களில் எப்படி இரு மாநிலங்களும் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?' என்ற கேள்விக்கும் தீர்ப்பு வர வேண்டும். ஒட்டுமொத்தமாக 'தேசிய மயமாக்கலே' நதி நீர் தாவாக்களின் தீர்வாக அமையும் என்றும் நடுவர் மன்றம் கூறலாம். எது எப்படியோ.... 1892 மற்றும் 1924 ம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி காவிரி நதி நீரில் தமிழகத்திற்குத்தான் முன்னுரிமை. இந்த இறுதித் தீர்ப்பு அதை நிலைநாட்டப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

'தீர்ப்பு எப்படி வரப்போகிறது?' என்பது ஓருபுறமிருக்க, ''இடைக்காலத் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ளாமல் 'வம்பு' செய்யும் கர்நாடக அரசு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமா? இதனால் பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து வருமா?

அந்த ஏதிரொலி தமிழகத்தில் இருக்குமா?'' என்றெல்லாம் இரு மாநில முதல்வர்களும் டென்ஷனில் இருக்கிறார்கள் என்பதே உண்மை! குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 1924 ஓப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று 1974ல் கர்நாடக அரசு வாதிட்டபோது இங்கே முதல்வராக இருந்தார் கருணாநிதி.

பிறகு 1990ல் நடுவர் மன்றம் அமைக்கும் போதும், 1998ல் காவிரி நதி நீர் இணையம் நிறுவப்பட்டபோதும் அவருடைய ஆட்சியே நடந்தது. இப்போது இறுதித் தீர்ப்பு வரும் போதும் முதல்வராக இருக்கிறார். ஆக, காவிரி டெல்டாகாரர் முதல்வராக இருக்கும்போது வரும் இறுதித் தீர்ப்பு, அவருடைய அரசியல் வாழ்வின் முக்கிய நிகழ்வு என்பது புரிந்துகொள்ளக் கூடியதே!

நன்றி - எம். காசிநாதன் (தினமணி)

1 comment:

Anonymous said...

Yes kailaignar always tension with political crises.